ரொஹான் குணரத்னவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உலமா சபையின் பதில்!

0 208

ஏ.ஆர்.ஏ. பரீல்

கலா­நிதி ரொஹான் குண­ரத்­ன­வினால் எழுதி வெளி­யி­டப்­பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்­கையின் ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை) என்ற நூலில் தவ­றான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பிட்ட நூலின் உள்­ள­டக்­கங்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து பிழை­களைத் திருத்தி ஆதா­ர­பூர்­வ­மான உண்­மை­க­ளுடன் மீண்டும் நூலை மீள வெளி­யி­டு­மாறும் நூலா­சி­ரி­யரைக் கோரி­யுள்­ளது. உண்­மை­யான தக­வல்கள் மக்­க­ளுக்கு தெரி­விக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
அத்­தோடு தொடர்ந்தும் ஆதா­ர­மற்ற உண்­மைக்குப் புறம்­பான கூற்­றுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முஸ்லிம் சமூ­கத்­தையோ, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வையோ ஈஸ்டர் தாக்­குதல் சம்­பந்­த­மான விட­யத்தில் குற்றம் சுமத்த வேண்­டா­மெ­னவும் கோரி­யுள்­ளது.

நூலா­சி­ரியர் கலா­நிதி ரொஹான் குண­ரத்­ன­வுக்கு இது தொடர்பில் உலமா சபை கடிதம் ஒன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்­ளது. குறிப்­பிட்ட கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அண்­மையில் தங்­களால் வெளி­யி­டப்­பட்ட குறிப்­பிட்ட நூல் தொடர்­பாக எமது அதி­ருப்­தி­யையும் அதி­லுள்ள போலி­யான குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் எமது மறுப்பைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

உங்­க­ளது நூலில் ஆதா­ர­பூர்­வ­மற்ற ஒன்­றுக்­கொன்று முரண்­பட்ட ஏரா­ள­மான கூற்­றுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான அதி­கா­ர­பூர்­வ­மில்­லாத, போது­மான தெளி­வில்­லாத அனு­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான கூற்­றுக்­களை தங்­க­ளு­டைய நூலுக்கு ஆதார மேற்­கோள்­க­ளாகக் கொண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மீது பல பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருப்­பது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

அந்த வகையில் தங்­க­ளு­டைய நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உண்­மைக்குப் புறம்­பான, கள சூழ்­நி­லை­க­ளுக்கு முர­ணான, திரி­பு­ப­டுத்­தப்­பட்ட ஒரு சில பகு­தி­களை நாம் குறிப்­பிட்­டுள்ளோம்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா என்­பது இஸ்­லா­மிய மார்க்க ரீதி­யான ஒரு சபையே அன்றி சட்­டத்தை அமுல்­ப­டுத்தக் கூடிய அதி­காரம் கொண்ட நிறு­வ­ன­மல்ல.

நூலின் 60 ஆவது பக்கம், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மத விவ­கா­ரங்­களை நாளாந்தம் மூலோ­பாய ரீதி­யாக நெறிப்­ப­டுத்­த­வில்லை.
விளக்கம்: சமூ­கத்தில் சில காலம் பகு­தி­களில் இடம்­பெற்ற சமூக மற்றும் மார்க்க ரீதி­யாக சம்­பந்­தப்­பட்ட சில ரீதி­யாக சம்­பந்­தப்­பட்ட சில நிகழ்­வு­களை அடிப்­ப­டை­யாக வைத்தே இக்­கூற்று கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிகழ்­வு­களைக் கண்­கா­ணித்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய பொறுப்பு அர­சுக்கும் அது சார்ந்த சட்­ட­வார்க்க அமு­லாக்க நிறு­வ­னங்­க­ளுக்கே உண்டு. இது ஜம் இய்­யாவின் பொறுப்பு அல்ல.
நூலின் 203ஆவது பக்கம், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­மி­டையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் அல்­லது டிசம்பர் மாதத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் அதி­க­மாக தீவி­ர­ம­ய­மாக்கல் சம்­பந்­த­மாக குறிப்­பி­டப்­பட்­டது.

அதே பக்­கத்தில் அக்­கூற்­றுக்கு முன்னால் உள்ள கூற்றில் குறிப்­பி­டப்­பட்டுள்­ள­ தா­வது,

சிறி­சேன நிர்­வா­கத்­திற்கோ அல்­லது ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­துக்கோ குறித்த நிலை­மையின் தீவி­ரத்தை போது­மா­ன­ளவு புரிந்­து­கொள்­வ­தற்குத் தேவை­யான அதி­ந­வீன நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வொன்று இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

இங்கு மத வழி­காட்­டு­தலை வழங்­கு­வ­தற்கும் தீவி­ர­ம­ய­மாக்கல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கும் உள்ள வித்­தி­யா­சத்தை நீங்கள் அடை­யாளம் காணத் தவ­றி­விட்­டீர்கள்.

மேலும் இப்­புத்­த­கத்தில் நீங்கள் மத அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடை­யே­யுள்ள செயற்­பா­டுகள், அதி­காரம், கடமை மற்றும் பொறுப்பு ஆகி­ய­வற்றை வரை­ய­றுக்கத் தவறி விட்­டீர்கள். இதில் பல இடங்­களில் இது­போன்ற ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டுள்ள தரப்­பி­ன­ருடன் உலமா சபை தலை­யி­ட­வில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. என்­றாலும் இது காவல்­துறை மற்றும் அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

191ஆவது பக்கம், சஹ்­ரானை கைது செய்ய ரிஸ்வி முப்தி காவல் துறைக்கு உத­வி­யி­ருக்­கலாம்.

உலமா மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் 2019 ஜன­வ­ரியில் ஹேம­சிறி பர்­னாண்­டோவை சந்­தித்து சஹ்­ரானின் வெறுப்புப் பேச்­சு­க­ளுக்­கான ஆதா­ரங்­களை கைய­ளித்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­தமை அனைவரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

உலமா சபை இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்குமிடையில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப மேற்கொண்ட பணிகள் உங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் கையொப்பமிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.