வடக்கு முஸ்லிம்களுக்கு இன்னும் விடிவு இல்லையா?

பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு விவாதத்திற்கு கோரிக்கை.

0 168

மௌலவி பி.ஏ.எஸ். சுபியான்
தலைவர், மக்கள் பணிமனை

வடக்கில் இருந்து 1990 ஒக்­டோ­பரின் இறுதி வாரத்தில் புலி­க­ளினால் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் தங்­க­ளது நிலை­களை எண்ணித் தவித்து வரு­கின்­றனர்.

யுத்தம் முடி­வ­டைந்து 14 வரு­டங்கள் ஆகி­விட்ட பொழு­திலும் இம் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இன்னும் நிம்­ம­தி­யாகச் சென்று மீள்­கு­டி­யேற முடி­யாமல் இருக்­கின்­றனர்.

மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காகச் சென்­ற­வர்கள் 1/4 பகு­தி­யி­னரே. மீள்­கு­டி­யேற வந்த இம் மக்­க­ளுக்கும் அவர்­க­ளது பல்­வேறு அடிப்­படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­டாத நிலையில் அவர்­களும் இங்கும் அங்கும் வரு­வதும் போவ­து­மாக இருக்­கின்­றனர்.

இன்னும் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான பதி­வு­களை மேற்­கொண்டு விட்டு எவ்­வித ஏற்­பா­டு­களும் சொந்த மண்ணில் அர­சினால் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தினால் எதிர்­பார்த்து காத்­தி­ருக்கும் பல குடும்­பங்கள் ஏமாற்­றத்­துடன் இருக்­கின்­றனர்.
இந்­நி­லையில் வடக்கு முஸ்­லிம்­களின் வாழ்­வியல் பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குறிப்­பாக 20 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்­வரும் அமர்­வு­களில் பாரா­ளு­மன்­றத்தில் வட­ப­குதி முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னைகள் தொடர்­பாக கவன ஈர்ப்பு விவா­தங்­களை நடத்­தும்­படி வட­ப­குதி முஸ்­லிம்கள் சார்பில் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பின்­வரும் விட­யங்­களை அறி­வித்­துள்ளோம். அவர்கள் நிச்­ச­ய­மாக வட மாகாண முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் எழுப்­பு­வார்கள் என முழு­மை­யாக நம்­பு­கின்றோம்.

1. வடக்கு முஸ்­லிம்கள் சொந்த தாயக பூமி­யி­லி­ருந்து இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு இம்­மாதம் 30ம் திக­தி­யுடன் 33 வரு­டங்கள் முடி­வ­டைந்து விட்­டது.
2. இந்­நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வ­டைந்து விட்­டது.
3. எனினும் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் இன்னும் நிறை­வ­டை­ய­வு­மில்லை வெற்­றி­ய­ளிக்­க­வு­மில்லை
4. வடக்கில் இது­வ­ரையில் (2023) 1/4 ஒரு பகுதி முஸ்­லிம்­களே தங்­க­ளது சொந்த மண்ணில் மீள்­கு­டி­யே­றி­யுள்­ளனர்.
5. மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்கு இன்னும் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­த­படி அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்­றி­வைக்கத் தவ­றி­விட்­டது.
6. இன்னும் மீள்­கு­டி­யே­றாமல் இருக்கும் 3/4 பகு­தி­யினர் நாட்டின் நாலா ­ப­கு­தி­களில் பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு மத்­தியில் நண்­பர்கள், உற­வி­னர்கள் மற்றும் வாடகை வீடு­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றனர்.
7. இம் மக்­க­ளது வாழ்­வு­ரிமை கல்வி, தொழில், அரச வேலை­வாய்ப்பு இவர்­க­ளுக்­கான சொந்த மண்ணில் இழந்த அசையும் அசை­யாத சொத்­துக்­க­ளுக்­கான நஷ்ட ஈடு, சொந்த மண்­ணிலே இவர்­க­ளுக்­கான காணி, வீடு, தொழில் வாய்ப்பு இப்­படி எது­வுமே எதிர்­பார்த்­த­படி நடை­பெ­றாமல் இம் மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர்.
8. இந்த 33 வருட காலத்­திற்குள் புதிய சந்­த­தி­யினர் இரு தலை­மு­றைக்கு தோன்றி விட்­டனர். சனத்­தொகை 3 மடங்­கினால் பெருகி விட்­டது.
9. இந்­நி­லையில் இலங்கை அரசும் சர்­வ­தேச சமூ­கமும் வட மாகாண முஸ்­லிம்­களைப் பற்றி எவ்­வித அக்­க­றையும் காட்­டாமல் இருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.
10. எனவே இலங்கை அரசு வட மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இம் மக்­களில் மீள்­கு­டி­யே­றிய மக்கள், இன்னும் மீள்­கு­டி­யே­றாத மக்கள் இவ்விரு சாராரின் தேவைகள் அபி­லா­ஷை­களை கண்­ட­றிந்து இதற்­கான திட்­டத்தை வகுத்து குறு­கிய கால வேலைத்­திட்­டத்தை தயா­ரித்து இம் மக்­களின் பிரச்­ச­ினை­களை தீர்த்து வைக்க வேண்டும்.

எனவே இக் கோரிக்கை நிறை­வேற எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எவ்­வித பேதங்­களும் இன்றி வட பகுதி முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக குரல் எழுப்பி எமது பிரச்சினைகளை தேசிய சர்வதேச மயப்படுத்துவதற்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைப்பதற்கும் ஆவன செய்து உதவுமாறு வட மாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் கேட்டுக் கொள்கிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.