பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் இலங்கையில் நடப்பது என்ன?

0 233

ஏ.ஆர்.ஏ. பரீல்

இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்­வா­றான ஒரு நாடு இருக்­க­வில்லை. யுத்­தத்­துக்­கென்றே இந்­நாடு உலகில் உரு­வாக்­கப்­பட்­டது என்று கூறலாம்.

யுத்­தத்­துக்கும் சமா­தா­னத்­துக்கும் காலம் இருக்­கி­றது என்­றாலும் இது யுத்­தத்­துக்­கான காலம் இது என இஸ்­ரேலின் பாது­காப்பு அமைச்சர் யோவ் கெலன்ட் கருத்து வெளி­யிட்­டுள்ளார். இந்தக் கருத்து மூல­மாக இஸ்­ரே­லுக்கு யுத்தம் தொடர்பில் இருக்கும் இலட்­சியம் என்ன என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கி­றது.

இஸ்­ரேலின் பாது­காப்பு அமைச்சர் கடந்த 9ஆம் திகதி காஸா பிராந்­தி­யத்தை முழு­மை­யாக மூடி விடும்­படி உத்­த­ர­விட்டார். எரி­பொருள், நீர் மற்றும் மின்­சாரம் என்­ப­ன­வற்­றையும் அதா­வது இவற்றின் விநி­யோ­கத்தை முழு­மை­யாக நிறுத்தி விடும்­ப­டியும் அவர் உத்­த­ரவு பிறப்­பித்தார். இந்­நி­லைமை இஸ்ரேல் – பலஸ்­தீன பிரச்­சினை திக­தி­யொன்று குறிப்­பிட முடி­யாத அள­வுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்­ளது.

நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வரும் இஸ்ரேல் – பலஸ்­தீன பிரச்­சினை உலக நாடு­களில் பல்­வேறு அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­துள்­ளது. ஏற்­க­னவே பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்ள இலங்கை மேலும் பொரு­ளா­தார ரீதியில் மாத்­தி­ர­மல்ல பல வழி­க­ளிலும் சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

தற்­போது உலக சந்­தையில் எண்ணெய் மற்றும் எரி­வாயு விலைகள் அதி­க­ரித்­துள்­ளன. இஸ்­ரேலில் குறிப்­பிட்­ட­ளவு இலங்­கை­யர்கள் தொழில் புரி­கி­றார்கள். அவர்கள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு அந்­நிய செலா­வ­ணியை இலங்­கைக்கு ஈட்டித் தரு­கி­றார்கள். இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை கார­ண­மாக அங்கு தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்­களின் தொழில்கள் இழக்­கப்­ப­டலாம்.

இலங்­கைக்கு பொரு­ளா­தா­ர ஆபத்து
இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை கார­ண­மாக உலக சந்­தையில் எண்ணெய் விலை பீப்பாய் 100 டொலர் வரையில் அதி­க­ரிக்­கலாம். இந்­நி­லையில் மீண்டு வரும் இலங்­கையின் பொரு­ளா­தாரம் மீண்டும் சரிவு நிலை­யினை எய்­தலாம். அல்­லது ஒரே இடத்தில் தரித்து நிற்­கலாம் என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொரு­ளா­தார விஞ்­ஞான கல்வி பிரிவின் பேரா­சி­ரியர் பிரி­யங்க துனு­சிங்க தெரி­வித்­துள்ளார்.

யுத்த நிலைமை கார­ண­மாக தற்­போதும் எண்ணெய் பீப்­பா­யொன்றின் விலை 5 டொலர் வரையில் அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது எண்ணெய் பீப்­பா­யொன்றின் விலை 100 டொல­ராகக் காணப்­ப­டு­கி­றது. எதிர்­வரும் மாதங்­களில் இவ்­விலை மேலும் அதி­க­ரிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

எண்ணெய் விலை அதி­க­ரிப்பு ஏற்­பட்டால் அதன் கார­ண­மாக நாட்டின் பண வீக்கம் மீண்டும் எயர்­வ­டை­யலாம். இதனால் கொவிட் 19 தொற்று கார­ண­மா­கவும் நாட்டின் பொரு­ளா­தார பிரச்­சினை கார­ண­மா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மேலும் துன்­பங்­களை எதிர்­நோக்க நேரிடும் எனவும் பேரா­சி­ரியர் பிரி­யங்க துனு­சிங்க தெரி­வித்தார்.

இஸ்­ரேலில் தற்­போது பணி­பு­ரியும் சுமார் 20 ஆயிரம் இலங்­கை­யர்கள் அங்கு யுத்த நிலைமை கார­ண­மாக இலங்கை திரும்ப வேண்­டி­யேற்­பட்டால் அவர்கள் நாட்­டுக்கு பங்­க­ளிப்புச் செய்த அந்­நிய செலா­வணி இல்­லாமற் போவ­துடன் அவர்கள் வேலை இழந்­தி­ருப்­பது நாட்­டுக்குப் பாரிய பிரச்­சி­னை­யாக அமையும். இஸ்­ரேலில் மாத்­தி­ர­மல்ல மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்­களின் தொழில்­க­ளுக்குக் கூட பாதிப்­புகள் ஏற்­ப­டலாம். மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு புதி­தாக வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்­ப­வர்­களின் எண்­ணிக்கை குறை­வ­டை­யலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­மை­யி­னாலும் இலங்­கையின் அந்­நிய செலா­வ­ணிக்குப் பாதிப்பு ஏற்­ப­டலாம்.

யுத்த நிலைமை கார­ண­மாக உலக சந்­தையில் இலங்­கையின் ஏற்­று­மதிப் பொருட்­க­ளுக்­கான கேள்வி குறை­வ­டையும் வாய்ப்பும் உள்­ளது. இதனால் இலங்­கையின் ஏற்­று­மதி வரு­மானம் குறை­வ­டையும். இந்த யுத்த நிலைமை கார­ண­மாக இலங்­கைக்கு வருகை தரும் சுற்­றுலா பய­ணி­களின் எண்­ணிக்­கையும் குறை­வ­டை­யலாம் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்­புக்கள்
1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உரு­வாக்­கப்­பட்­டதும் அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யது. அமெ­ரிக்­காவின் அனு­ச­ர­ணையின் கீழ் இஸ்ரேல் படிப்­ப­டை­யாக வளர்ச்சி கண்­டது. குறிப்­பாக அதன் இரா­ணுவ பலம் மிகவும் பழை­மை­வாய்ந்த நாடு­களைப் பின்­தள்ளி அதி­க­ரித்­தது. இரா­ணுவ பலத்தை அதி­க­ரித்துக் கொண்ட இஸ்ரேல் தனது நாட்டின் எல்­லை­யினை மேலும் அதி­க­ரித்துக் கொள்ளத் திட்­ட­மிட்­டது. இத­ன­டிப்­ப­டையில் 1967இல் சிரியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடு­க­ளுடன் யுத்தம் செய்து ஜோர்­தானின் மேற்குக் கரை என்று இன்று அழைக்­கப்­படும் பிர­தே­சத்­தையும் எகிப்தின் காஸா பகு­தி­யையும் சிரி­யாவின் கோலான் மலைப் பிர­தே­சத்­தையும் கைப்­பற்­றி­யது. அன்று முதல் இஸ்ரேல் இப்­ப­கு­தி­களை இரா­ணுவ மய­மாக்கல் மூலம் ஆட்சி செய்­தது. என்­றாலும் 2005ஆம் ஆண்­ட­ளவில் நோர்வே நாடு முன்­வந்து மேற்­கொண்ட சமா­தான முயற்­சியின் பய­னாக காஸா மற்றும் மேற்குக் கரை பிர­தே­சத்தின் நிர்­வாக அதி­காரம் பலஸ்­தீன மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் 2007இல் நடை­பெற்ற தேர்­த­லை­ய­டுத்து இப்­பி­ரச்­சினை புதி­யதோர் திசைக்கு மாற்றம் கண்­டது. தேர்­தலில் ஹமாஸ் அமைப்பு வெற்­றி­யீட்­டி­யது. ஈரானின் ஆத­ர­வு­டைய ஹமாஸ் அமைப்பு காஸா பகு­தியின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக் கொண்­டதன் பின்பு இஸ்ரேல் காஸா­வுக்கும் தனது நாட்­டுக்கும் இடை­யி­லான தொடர்­பினை பூகோள ரீதியில் தடை செய்­தது. காஸாவை தரை­வ­ழி­யாக, கடல் வழி­யாக, வான் வழி­யாக முழு­மை­யாக மூடி­யது.

இரண்டு மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மான மக்கள் வாழும் காஸா பிராந்­தியம் மூடப்­பட்­ட­த­னை­ய­டுத்து 365 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்ட இந்த சிறிய பிர­தேசம் திறந்­த­வெளி சிறைச்­சாலை போன்­றா­கி­யது.
காஸா பிர­தே­சத்தை ஆளும் ஹமாஸ் அமைப்­புக்கும் இஸ்­ரே­லுக்­கு­மி­டையில் தற்­போது உரு­வா­கி­யுள்ள யுத்த நிலைமை உட்­பட தற்­போது வரை ஐந்து தட­வைகள் யுத்த நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த 9ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இவ் விவ­காரம் தொடர்பில் அரசின் நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். முன்­னெப்­பொ­ழுதும் இல்­லாத வகையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தீவிர தாக்­கு­தல்­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்­துள்ளார். இஸ்­ரேலோ அல்­லது ஹமாஸ் இயக்­கமோ மனித உரி­மை­களை மீறு­வ­தற்கோ பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை பரப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கு­மென்றால் இலங்கை எதிர்ப்பு வெளி­யிடும் எனவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.
இந்த யுத்த நிலைமை கார­ண­மாக இலங்கை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்­தி­யுள்ளார் என்­பது இதி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இந்­நி­லைமை கார­ண­மாக இலங்கை எரி­பொருள் தொடர்­பான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்டி வரும் என ஜனா­தி­பதி குறிப்­பிட்டுக் கூறி­யுள்ளார்.

எண்ணெய் பீப்­பா­யொன்றின் விலை 100 டொலர்கள் வரை அதி­க­ரிக்­கலாம் எனவும் ஜனா­தி­பதி எதிர்வு கூறி­யுள்ளார். உலக எண்ணெய் உற்­பத்­தியில் பெரு­ம­ளவு மத்­திய கிழக்கு நாடு­க­ளிலே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. யுத்த நிலைமை உரு­வாகும் போதெல்லாம் இந்­நா­டு­களில் உற்­பத்தி குறை­வ­டை­வதால் எண்ணெய் விலை அதி­க­ரித்து வந்­துள்­ளமை நோற்­கப்­பா­ல­தாகும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்மைக் கால­மாக பலஸ்­தீ­னர்­களின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாமை குறித்து சர்­வ­தேச மாநா­டுகள் பல­வற்றில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அண்­மையில் ஜனா­தி­பதி தனது நிவ்யோர்க் விஜ­யத்தின் போது பலஸ்தீன் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உலகம் தவ­றி­யுள்­ள­தென குறிப்­பிட்­டி­ருந்தார். பலஸ்­தீன பிரச்­சினை தொடர்பில் ஜனா­தி­பதி ஐ.நா.வின் 78ஆவது மாநாட்­டிலும் உரை­யாற்­றி­யி­ருந்தார். பலஸ்­தீ­னர்­களின் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வு பெற்றுக் கொடுக்க முடி­யா­மற்­போ­யுள்­ளது. இதற்­கான தீர்­வுக்கு திட்டம் வகுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தி­ருந்தார்.

அழிக்­கப்­பட்டு வரும் காஸா
தற்­போது காஸா பிராந்­தி­யத்தில் ஓர் யுத்த நிலை­மை­யையே அவ­தா­னிக்க முடி­கி­றது. இஸ்ரேல் ஜெட் விமா­னங்கள் பயங்­கர தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இஸ்ரேல் தாக்­குதல் மேற்­கொள்ளும் ஆயிரம் இறாத்தல் அல்­லது இரண்­டா­யிரம் இறாத்தல் நிறை­கொண்ட குண்டுத் தாக்­கு­தல்­களால் காஸாவில் கட்­டி­டங்கள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்டு வரு­கின்­றன. குண்டுத் தாக்­கு­தல்கள் காஸாவின் சிவில் சமூ­கத்தின் பாது­காப்­பினைக் கருத்திற் கொள்­ளாது இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. ஹமாஸ் அமைப்பு இஸ்­ரே­லுக்கு எதி­ராக மேற்­கொண்ட தாக்­கு­த­லுக்­காக அப்­பாவி சிவி­லி­யன்கள் இஸ்­ரே­லினால் இலக்கு வைக்­கப்­ப­டு­வது மனித உரிமை மீறலாம்.

இந்தப் பிரச்­சி­னையில் அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வா­கவும் பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரா­கவும் கள­மி­றங்­கி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் பாரிய யுத்தக் கப்­ப­லான ஜெரால்ட் போர்ட் தற்­போது காஸா பிராந்­தி­யத்­துக்கு அண்­மித்து நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்­ளது. அக்­கப்­பலில் 5000 இரா­ணுவ வீரர்கள் நிலை கொண்­டுள்­ளனர். கப்­பலில் தாக்­கு­தல்கள் விமா­னங்கள் மற்றும் யுத்த தள­பா­டங்கள் தரித்து வைக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை சீனாவும் அமெ­ரிக்­காவும் இரு தரப்பும் உட­ன­டி­யாக தாக்­கு­தல்­களை நிறுத்தி சமா­தா­ன­ம­டைய வேண்­டு­மென கோரிக்கை விடுத்­துள்­ளன. ஐ.நாடுகள் சபைாயின் பொதுச் செய­லா­ளரும் இத­னையே வலி­ய­றுத்­தி­யுள்ளார்.

தாக்­கு­த­லுக்கு தயா­ராகும் இஸ்ரேல்
இஸ்­ரே­லிய இாணுவம் காஸா மீது தரை, வான் மற்றும் கடல் வழி­யாக தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள தயா­ராகி வரு­வ­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. மத்­திய கிழக்கில் உரு­வா­கி­யுள்ள இந்­நி­லைமை இலங்­கைக்கு மாத்­தி­ர­மல்ல முழு உல­குக்கும் சவா­லாக மாறி­யுள்­ளது.

தாக்­கு­த­லுக்­கான நேர­வ­ரை­யறை எத­னையும் இஸ்ரேல் இது­வரை குறிப்­பிட்டுக் கூற­வில்லை. என்­றாலும் காஸா பிராந்­தியம் எச்­ச­ம­யத்­திலும் கடும் தாக்­கு­தலை எதிர்­கொள்ள நேரி­டலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. இஸ்ரேல் வட காஸா­வி­லுள்ள 1.1 மில்­லியன் பலஸ்­தீ­னர்­களை தெற்கு பிராந்­தி­யத்­துக்கு இடம்­பெ­யர உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் சபை காஸா­வா­னது நரக படு­கு­ழி­யொன்­றுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு உத­வு­வ­தற்­காக தனது இரண்­டா­வது விமானம் தாங்கிக் கப்­ப­லொன்­றினை அப்­பி­ராந்­தி­யத்­துக்கு அனுப்பி வைத்­துள்­ளது. யு.எஸ்.எஸ். டுவைட்டி எய்ஸென் ஹோவர் எனும் இந்தக் கப்பல் ஏற்­க­னவே அப்­பி­ராந்­தி­யத்தை வந்­த­டைந்­துள்ள ஜெரால்ட் ஆர்போர்ட் விமானத் தாங்கி கப்­ப­லுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் அந்­தோனி பிளிங்கன் இஸ்­ரே­லுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான மோதல்கள் குறித்து சவூதி அரே­பிய ரியாத்தில் அந்­நாட்டு இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இப்­பேச்­சு­வார்த்தை ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­த­தென பிளிங்கன் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை ஈரா­னிய வெளி­நாட்­ட­மைச்சர் ஹொஸைன் அமீ­ரப்­துல்­லா­ஹியன் ஹமாஸ் அர­சியல் தலைவர் இஸ்­மாயில் ஹனி யெஹ்ஹை டோகாவில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

ஐ.ம.ச. எச்­ச­ரிக்கை
பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒரு தரப்­பினர் இலங்­கையில் பலஸ்­தீனம் குறித்து தவ­றான சித்­த­ரிப்­பு­களை சமுக மயப்­ப­டுத்தி முயற்­சிக்­கி­றார்கள். இவ்­வா­றான செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்தால் மத்­திய கிழக்கு நாடு­களில் வாழும் இலங்கைப் பணி­யா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இவ்­விடயம் தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும் என ஐக்­கிய ம­க்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் மனுஷ
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் எரிபொருளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்துகொண்டு எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை ஜனாதிபதி பணித்துள்ளார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் சுமார் எட்டாயிரம் இலங்கையர்கள் பணி புரிகின்றனர். அத்துடன் காஸாவிலும் சில குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டுமென்றால் அதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.