கொவிட் ஜனாஸா எரிப்பு விவகாரம்: பிழையான தீர்மானம் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

ஹக்கீமுக்கு அமைச்சர் கெஹலிய சபையில் பதில்

0 162

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
கொவிட் தொற்றில் மர­ணித்த சட­லங்­களை எரிப்­ப­தற்கு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட கொவிட் குழு அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக அமைச்­ச­ரவை மட்­டத்தில் விசா­ரணை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுப்போம் என சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ரவூப் ஹக்கீம் தனது கேள்­வி­யின்­போது, கொவிட் தொற்றில் மர­ணித்த முஸ்­லிம்­களின் சட­லங்­களை எரிப்­ப­தற்கு கொவிட் குழு எடுத்த தீர்­மானம் வைராக்­கி­ய­மிக்க குற்­ற­மாகும். அதனால் இவர்­க­ளுக்கு எதி­ராக பாதிக்­கப்­பட்ட குடும்­பத்தின் உற­வி­னர்கள் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்கு செல்ல நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றனர்.

அதனால் அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்ட கொவிட் குழு அதி­கா­ரிகள் மேற்­கொண்ட தீர்­மானம் தொடர்­பாக அமைச்­ச­ரவை மட்­டத்தில் விசா­ரணை மேற்­கொள்ள தயாரா? ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை எரிப்­ப­தற்கு தீர்­மா­னத்தை எடுக்­காத நிலையில், பிழை­யான விஞ்­ஞான அடிப்­ப­டையில் தீர்­மானம் மேற்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு பாரிய தாக்­கத்தை வழங்­கிய இந்த அதி­கா­ரிகள் தொடர்­பாக குறைந்­த­பட்சம் அமைச்­ச­ரவை மட்­டத்­தி­லா­வது விசா­ரணை மேற்­கொள்ள அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­குமா? என கேட்டார்.

அதற்கு அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில், அந்த குழு தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம் என்றார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த ரவூப் ஹக்கீம், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட குழுவின் அதி­கா­ரிகள் தொடர்­பாக விசா­ரணை நடத்­து­மாறே நான் பகி­ரங்­கமா கேட்கிறேன். அதனால் இதனை நீங்கள் செய்வீர்களா?
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், ஆம், அது தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.