ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு இலங்கை யாத்திரிகர் மரணம்

0 140

(யு.எல்.முஸம்மில்)
2023 ஹஜ் கட­மைக்­காக சவூ­திக்கு சென்­றி­ருந்த மற்­றொரு இலங்கை யாத்­தி­ரிகர் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மக்­காவில் அவர் தங்கி இருந்த அறை­யி­லேயே கால­மானார்.

வாரிய பொல,ஹேனே­கெ­த­ரயைச் சேர்ந்த சேர்ந்த ஏ.பி. உம்மு மர்­ழியா (67) என்­பவர் குரு­நாகல் அமீன் ட்ரவல்ஸ் மூலம் ஹஜ் கடமைக்­காக சென்று கட­மைகள் அனைத்­தையும் நிறைவு செய்­தி­ருந்த நிலையிலேயே நேற்று முன்­தினம் மர­ண­மானர்.
இவர் நாளைய தினம் நாடு திரும்­பு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்த நிலையில் சுக­யீனம் ஏற்­பட்டு மலிக் அப்துல் அஸீஸ் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். பின்னர் அங்கிருந்து தேறி மீண்டும் தனது அறைக்கு வந்து தங்கியிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

இவ­ரது ஜனாஸா தொழுகை நேற்று மாலை ஹரம் ஷரீபில் நடத்­தப்­பட்டு மக்­காவில் நல்­ல­டக்கம் செய்யப்பட்டதாக ஹஜ் வழிகாட்டியாக சென்றுள்ள மௌலவி எஸ்.ஐ.எம்.ஹபீல் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.