சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்திய விஜயத்தின் பின் முஸ்லிம் தரப்புடன் பேச்சு

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு

0 222

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு விரைவில் முஸ்லிம் தரப்­புடன் பேச்சுவார்த்தை நடாத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் சமூ­கத்தின் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுக்­கொ­டுத்­ததன் பின்பு முஸ்லிம் தரப்­புடன் பேச­வுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

நேற்­று­மாலை முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்த ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கினார். இச்­சந்­திப்பு ஜனா­தி­பதி மாளி­கையில் இடம் பெற்­றது.

முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மையில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால பிரச்­சி­னை­களை முன்­வைத்து அவற்­றுக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு வேண்­டிக்­கொண்டனர்.

ஜனா­தி­பதி முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­கையில் தான் இந்­தி­யா­வுக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் தமிழ் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் இந்­தி­யா­வு­டனும் கலந்­து­ரை­யாடி தீர்­வுத்­திட்­ட­மொன்­றினை வழங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். இதன் கார­ண­மா­கவே முதற்­கட்­ட­மாக தமிழ் சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரு­வ­தா­கவும் கூறினார்.

இந்­திய விஜ­யத்தின் பின்பு முஸ்­லிம்­க­ளு­டனும், மலை­யக மக்­க­ளு­டனும் அவர்­க­ளது பிரச்­சி­னைகள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும் கூறினார்.
முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னை­களை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­தனர்.

சமூ­கங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை உரு­வாக்கும் வகை­யி­லான வெறுப்புப் பேச்­சுக்­களைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

முஸ்­லிம்­களின் பல பிரச்­சி­னைகள் பாது­காப்பு அமைச்­சினால் கடந்த காலங்­களில் தீர்த்து வைக்­கப்­பட்­டன. என்­றாலும் எதிர்­பா­ராதவித­மாக அதி­கார மாற்­றத்தின் பின்பு இந்த நடை­முறை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நடை­முறை மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.

முஸ்லிம் இயக்­கங்கள் மற்றும் சிவில் அமைப்­புகள் சில தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வ­மைப்­புகள் தீவி­ர­வா­தத்தை பரப்­பி­ய­தாக ஆதா­ரங்கள் இல்லை. இவை தடை செய்­யப்­பட்­டுள்­ளதால் அவை முன்­னெ­டுத்த கல்வி, மற்றும் தொழில் நுட்ப பயிற்­சிகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இஸ்­லா­மிய நூல்­களின் இறக்­கு­ம­திக்கு பாது­காப்பு அமைச்சின் அனு­மதி தேவைப்­ப­டு­கி­றது. இஸ்­லா­மிய நூல்­க­ளுக்கு மாத்­தி­ரமே இந்­ந­டை­மு­றை­யுள்­ளது. ஏனைய மத நூல்­க­ளுக்கு இந்­ந­டை­மு­றை­யில்லை. பாது­காப்பு அமைச்சின் அனு­மதி பெற வேண்­டி­யுள்­ளதால் இறக்­கு­மதி செய்து சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்கு நீண்­ட­காலம் தேவைப்­ப­டு­கி­றது. எனவே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் சிபா­ரிசின் கீழ் இவற்றை விடு­விக்க ஏற்­பாடு செய்­ய­வேண்டும்.

வெளி­நாட்டு மார்க்க அறி­ஞர்கள் இலங்­கைக்கு வரு­வ­தற்கு பல கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் பல நாட்டு அறி­ஞர்கள் இலங்­கைக்கு வர­மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. மாண­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு மார்க்க அறி­ஞர்­களின் போத­னைகள் அவ­சி­ய­மாகும். எனவே இந்த கட்­டுப்­பா­டுகள் நீக்­கப்­ப­ட­வேண்டும்.

குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான மத­ர­ஸாக்கள், பள்­ளி­வா­சல்கள் பலாத்­கா­ர­மாக பொலி­ஸா­ரினால் மூடப்­பட்டு சாவிகள் கையேற்­கப்­பட்­டுள்­ளன. அது விட­யத்தில் அவ­ச­ர­மாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவை மீண்டும் திறக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதனால் மாண­வர்கள் பய­ன­டை­வார்கள்.

சவூதி அரே­பியா வழங்­கிய சுனாமி வீட­மைப்புத் திட்ட 500 வீடு­களும் விரைவில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்டும்.

முஸ்லிம் காலா­சார அலு­வல்கள் கட்­டி­டத்தின் 5 மாடிகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் திணைக்­களம், வக்பு சபை, வக்­புட்­ரி­பி­யுனல் மற்றும் கொழும்பு மாவட்ட காதி நீதி­மன்­றங்­க­ளுக்­கென்றே நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. ஆனால் முஸ்லிம் கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு இரண்­டு­மா­டி­களே ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே திணைக்­கள கட்­டி­டத்தில் வக்பு சபை, வக்­புட்­ரி­பி­யுனல் கொழும்பு மாவட்ட காதி நீதி­மன்­றங்கள் என்­ப­ன­வற்றை ஏனைய மூன்று மாடி­களில் உள்­வாங்க நட­வ­டிக்கை எடுக்­கவும்.

பலாத்­கா­ர­மாக முஸ்லிம் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­ட­மையை நாம் கண்­டிக்­கின்றோம்.
உலக முஸ்லிம் லீக்­கினால் இலங்­கைக்கு 5 மில்­லியன் டொலர் நன்­கொடை உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. என்­றாலும் இலங்கை அர­சாங்கம் உரிய ஆவணங்­களை வழங்­கா­மை­யினால் அது கிடைக்­கா­மற்­போ­னது. அந்தப்பணம் இன்னும் சவூதி அரேபியாவில் இருக்கிறது. இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் உரிய ஆவணங்களை தயார் செய்யவேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸினின் தலைவர் என்.எம்.அமீன், உதவித்தலைவர் ஹில்மி அஹமட், தேசிய சூறா சபை தலைவர் டி.கே.ஆசூர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, முன்னாள் வக்பு சபைத் தலைவர் சப்ரி ஹலீம்தீன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், டாக்டர் சாபி சிஹாப்தீன் உட்பட சுமார் 22 பேர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.