இலங்கை மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிட்டட்டும் – சவூதி தூதுவர் வாழ்த்து

0 201

நட்புறவுமிக்க இலங்கை மக்களுக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் கூடிய நல்ல எதிர்காலம் கிட்டவேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கான சவூதி அரேபிய தூதரகத்தின் சார்பாக, ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாளை முன்னிட்டு இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் தனது புனித வீட்டைத் தரிசிக்கச் சென்றிருக்கும் ஹஜ் யாத்ரீகர்களின் ஹஜ் மற்றும் நற்செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தங்களது அனைத்துக் கடமைகளையும் ஆரோக்கியமான நிலையில் நிறைவேற்றிக் கொள்ள அருள் புரிய வேண்டும் என்றும் பிரார்த்திப்பதோடு, யார் யாரெல்லாம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்திருந்தும் அதனை நிறைவேற்ற முடியாமல் போனார்களோ அவர்கள் அனைவரதும் நல் எண்ணங்களையும் ஏற்று அவர்களுக்கும் நிறைவான கூலிகளை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

மேலும் இத் தியாகத் திருநாளை அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் மீண்டும் கொண்டாடி மகிழ அருள் புரிய வேண்டும் எனவும், நட்புறவு மிக்க இலங்கை மக்களுக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் கூடிய நல்ல எதிர்காலம் கிட்டவேண்டும் எனவும் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.