உழ்ஹிய்யாவின் உயர் இலக்கும் உன்னத ஒழுக்கங்களும்

0 215

துல் ஹிஜ்ஜா மாதம் பிறை பத்து அன்று பெருநாள் தொழுகை முடிந்­ததில் இருந்து அய்­யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள காலங்­களில் ஆடு, மாடு, ஒட்­டகம் ஆகிய பிரா­ணி­களை அல்­லாஹ்­வுக்­கா­க­ அ­றுப்­ப­தையே உழ்­ஹிய்யா என்று கூறப்­ப­டு­கி­றது.

அல்லாஹ் கூறு­கிறான் : அவற்றின் மாமி­சங்­களோ, அவற்றின் இரத்­தங்­களோ அல்­லாஹ்வை அடை­வ­தில்லை. மாறா­க­ உங்­க­ளி­ட­முள்ள (இறை) அச்­சமே அவனைச் சென்­ற­டையும். அல்லாஹ் உங்­க­ளுக்கு நேர் வழி காட்­டி­ய­தற்­கா­க­ அ­வனை நீங்கள் பெரு­மைப்­ப­டுத்­திட இவ்­வாறே அதை அவன் உங்­க­ளுக்குப் பயன்­படச் செய்தான். நன்­மை­ செய்­வோ­ருக்கு நற்­செய்தி கூறு­வீ­ராக! அல்­குர்ஆன் (22 : 37)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறு­கி­றார்கள்: யார் (பெருநாள்) தொழு­கைக்கு முன்னால் (பிரா­ணியை) அறுக்­கின்­றாரோ அவர் தம் (சொந்த தேவைக்­கா­கவே) அறுத்­தவர் ஆவார். யார் தொழு­கைக்குப் பின்­னால்­ அ­றுக்­கி­றாரோ அவ­ரது (குர்­பானி) வழி­பாடு பூர்த்­தி­யா­கி­விடும். மேலும் அவர் முஸ்­லிம்­களின் வழி­மு­றை­யைப்­பின்­பற்­றி­யவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். நூல் : புகாரி 5546

உழ்­ஹிய்யா என்ற வணக்கம் இஸ்­லாத்தில் வலி­யு­றுத்தி சொல்­லப்­பட்ட ஒரு சுன்­னா­வாகும். இது முஸ்­லிம்­களின் சிறந்­த ­வ­ழி­மு­றை­யாகும். மேலும் இது அல்­லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபா­தத்­து­களில் மிக மகத்­தான ஓர்­ இ­பாதத் ஆகும்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறு­கி­றார்கள்: ‘ஈதுல் அழ்ஹா’ பெரு­நாளில் நபி (ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழு­கைக்கு முன்பே குர்­பானி கொடுத்­து­விட்­டவர் மறு­ப­டியும் குர்­பானி கொடுக்­கட்டும்’ என்று கூறி­னார்கள். அப்­போது ஒருவர் (அபூ புர்தா) எழுந்து, ‘இறைத்­தூதர் அவர்­களே! இது, இறைச்சி விரும்பி உண்­ணப்­படும் நாள்’ என்­று­கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அத­னா­லேயே தாம் தொழு­கைக்கு முன்­பே­ அ­றுத்­தது பற்­றியும்) குறிப்­பிட்டார். மேலும், தம்­மிடம் ஒரு வயது பூர்த்­தி­யான வெள்­ளாடு இருப்­ப­தா­கவும், அது இறைச்­சி­ ஆ­டுகள் இரண்­டை­விடச் சிறந்­தது என்றும் (அதை இப்­போது குர்­பானி கொடுக்­க­லாமா என்றும்) கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளித்­தார்கள். இந்த அனு­மதி அவ­ரல்­லா­த­வ­ருக்கும் பொருந்­துமா? அல்­லது பொருந்­தாதா? என்று எனக்குத் தெரி­யாது. பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்­ம­றி­யாட்டுக் கடாக்கள் பக்கம் சென்­று­ அவ்­வி­ரண்­டையும் அறுத்­தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்­தைக்குச் சென்று (அதி­லி­ருந்த) ஆடு­களைத் தமக்­குள்­ளே ­பி­ரித்துக் கொண்ட (பின் குர்­பானி கொடுத்த)னர். நூல் : புகாரி 5549.

நிறைய சிறப்­புக்­க­ளை­யு­டைய உழ்­ஹிய்யா என்ற இந்த வணக்கம் அனைத்து மனி­தர்­களும் பெருநாள் தினங்­க­ளில்­உண்டு, பருகி சந்­தோ­ஷ­மாக இருப்­ப­தற்கே விதி­யாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மேலுள்ள நபி மொழியில் இடம்­பெ­று­கின்ற “இறைத்­தூதர் அவர்­களே! இது, இறைச்சி விரும்பி உண்­ணப்­படும் நாள்’ என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்­டை­வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அத­னா­லேயே தாம் தொழு­கைக்கு முன்பே அறுத்­தது பற்­றியும்) குறிப்­பிட்டார்” என்ற இந்த வாசகம் அத­னையே எமக்கு உணர்த்­து­கி­றது. பொது­வாக இஸ்­லா­மிய சட்­ட­வி­திகள் யாவு­மே­ ம­னி­தர்­க­ளுக்கு நன்மை பயக்­கக்­கூ­டி­ய­தா­கவும் சந்­தோ­ஷத்­தையும் மன­ம­கிழ்ச்­சி­யையும் வழங்­கக்­கூ­டி­ய­து­மா­க­வே­ அ­மை­யப்­பெற்­றி­ருக்­கின்­றன. அதே நேரம் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கோ பிற மனி­தர்­க­ளுக்கோ குறித்த அந்த செயல் தொந்­த­ர­வாக அமையும் பட்­சத்தில் அந்த வணக்கம் குறை­பா­டுள்­ள­தா­கவே இஸ்­லாத்தில் கரு­தப்­ப­டு­கி­றது. எனவே அந்­த ­வ­ணக்­கத்தின் பரி­பூ­ரண நன்­மை­களை அடைந்து கொள்­வதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உழ்­ஹிய்யா வணக்­கத்தில் சுகா­தார வழி­மு­றை­களை பேணு­வ­தோடு அர­சாங்க விதி­மு­றை­க­ளை­யும் ­வ­ழி­காட்­டல்­க­ளையும் முற்­று­மு­ழு­தாக நாம் கடைப்­பி­டிக்க வேண்டும். நாட்டின் சம­கால சூழ்­நி­லையைக் கருத்தில் கொண்டு, உழ்­ஹிய்­யாவின் உன்­னத இலக்­கு­களை அடைந்து கொள்ளும் பொருட்டு அதனை ஊரின் தலை­மை­ பள்­ளி­வா­ச­லி­னூ­டாக சூழ­லுக்­கேற்ப தேவை­களைக் கருத்­திற்­கொண்டு, சாதக, பாத­கங்­களை கவ­னித்து, ஆலோ­ச­னையின் அடிப்­ப­டையில் நாட்டு சட்­டங்­க­ளுக்கு முழு­மை­யாக இணங்கி, கூட்­டாக நிறை­வேற்­று­வதே சிறந்­த­வ­ழி­யாகும்.

குடும்­பத்தில் ஏழை­களை ஒதுக்கிவிட்டு வசதி படைத்­த­வர்கள் மட்டும் உழ்­ஹிய்­யாவை தமக்­குள்ளே பங்­கு­வைத்­துக்­கொள்­வ­தாலும் தமக்குள் மாத்­திரம் சந்­தோ­ஷங்­களை பரி­மாறிக் கொள்­வ­தாலும் ஒரு பொழுதும் அதன் ­நன்­மையை முழு­மை­யாக அடைந்து கொள்ள முடி­யாது.

பள்­ளி­வா­சலின் தலை­மையின் கீழ் கூட்­டாக கொடுக்­கின்ற போது பிற மத சகோ­த­ரர்­களின் உணர்­வு­க­ளை­ கா­யப்­ப­டுத்­தி­வி­டாது பார்த்துக் கொள்ள வேண்டும். அப்­படி காயப்­ப­டுத்­தி­விட்டு நாம் மட்டும் சந்­தோ­ஷ­மாக இருக்­க­ நி­னைப்­ப­துவும் இதன் உன்­னத இலக்­கு­களை அடைந்து கொள்­வதை விட்டும் எம்மை தூர­மாக்கி விடு­கின்­றது.
ஊர் ஒற்­றுமை என்ற அடிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்­களை மையப்­ப­டுத்தி குர்­பானி கொடுக்க முயலும் போது அங்­கு ­மா­டு­களை அதி­க­மாக கட்டி வைக்க வேண்­டி­யேற்­படும். இது மாற்று மத சகோ­த­ரர்­க­ளுக்கு வெறுப்பை ஏற்­ப­டுத்­த­லாம்­. அந்த வெறுப்பு, இஸ்லாம் பற்­றிய தப்­பான பார்­வையை அவர்­க­ளி­டத்தில் விதைத்­து­விட அதிக வாய்ப்­பி­ருக்­கி­றது.

எனவே முடி­யு­மான வரை உழ்­ஹிய்யா பிரா­ணியை பிற மத சகோ­த­ரர்கள் பார்க்க முடி­யாத மறை­வான இடத்­தில்­ அ­றுப்­பது நல்­லது. பெருநாள் தவிர்ந்த அய்­யாமுத் தஷ்­ரீக்­கு­டைய நாட்­களில் நிலை­மை­களை அவ­தா­னித்து சூரி­யன்­ உ­த­ய­மாக முன்­னரும் அது மறைந்த பின்­னரும் இறைச்­சி­களை விநி­யோ­கிப்­பது பற்றி முடி­வெ­டுக்க வேண்டும். மேலும்­உழ்­ஹிய்யா கொடுக்கும் போது அரச விதி­மு­றை­களை மீறாது நடந்து கொள்­ள­வேண்டும்.

உழ்­ஹிய்யா பிரா­ணி­களைக் கொண்டு வரு­வதில் சிரமம் ஏற்­பட்டால் விற்­ப­வரின் இடத்­தி­லேயே வைத்து அறுத்­து­ இ­றைச்­சியை மறை­வான பைக­ளி­லிட்டு கொண்டு செல்ல வேண்டும். ஆடு மாடு­களை கொண்­டு­வ­ருதல், கட்­டி­வைத்தல், அறுத்தல், பங்­கிடல், துப்­ப­ரவு செய்தல், விநி­யோ­கித்தல் போன்ற எல்லாக் கட்­டங்­க­ளையும் பிற மத சகோ­த­ரர்­களின் பார்­வை­யி­லி­ருந்து முடி­யு­மா­ன­வரை மறைத்தே செய்ய வேண்டும்.

இஸ்லாம் சுத்­தத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்­றது என்ற வகையில் ஆடு மாடு போன்­ற­வற்றை அறுப்­ப­த­னால்­வெ­ளி­யே­றக்­கூ­டிய இரத்­தத்தை நன்­றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். அத்­துடன் அவற்றின் கழி­வு­க­ளை­ நி­லத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும். அல்­லது நன்­றாக பைகளில் வைத்து கட்டி பொதி செய்து குப்­பை­ அள்­ளு­வோ­ரிடம் கைய­ளிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்­களில் வீசி­வி­டாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அவற்றை குப்­பைக்குள் வீசுவோர் நாற்றம் எடுக்­காத வகையில் பொதி செய்து அவற்றை வீச வேண்டும். சூழ­லை ­மா­சு­ப­டுத்­தாது முடி­யு­மா­ன­ளவு அதனை துப்­புர­வாக வைத்­தி­ருத்தல் வேண்டும். அடுத்து வரும் ஆண்­டு­களில் நம­து­ அ­சிங்­க­மான செயற்­பா­டு­களால் இந்த வணக்­கத்­திற்கே தடை­யேற்­ப­டா­தி­ருக்க இவ்­வ­ரு­டத்தின் செயற்­பா­டு­களை நல்­ல­மு­றையில் மேற்­கொள்ள வேண்டும்.

இறைச்­சியை பங்கு வைக்கும் போது முஸ்­லி­மல்­லாத சகோ­த­ரர்­க­ளா­கிய நம் அய­ல­வர்கள், ஊர்­வா­சிகள், உற­வி­னர்­கள்­ என்று எம்­மோடு கலந்து வசிக்கும் முஸ்­லி­மல்­லாத சகோ­த­ரர்­க­ளுக்கு அவர்கள் விரும்பும் பட்­சத்தில் இன நல்­லு­ற­வைப்­பேணும் நோக்­குடன் உழ்­ஹிய்யா இறைச்­சியை வழங்க முடியும் என்­பதே பொருத்­த­மான நிலைப்­பா­டாகும்.
முஜாஹித் ரஹி­ம­ஹுல்லாஹ் கூறு­கி­றார்கள்; அப்­துல்லாஹ் இப்னு அம்ரு ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்­க­ள­து­ கு­டும்­பத்தில் ஆடு அறுக்­கப்­பட்­டது. அவர் வீடு வந்­த­வுடன் எனது யூத அய­ல­வ­ருக்கு இதி­லி­ருந்து வழங்­கி­னீர்­களா? என­து ­யூத அய­ல­வ­ருக்கு இதி­லி­ருந்து வழங்­கி­னீர்­களா ? என இரு­முறை கேட்­டு­விட்டு நான் நபி ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் கூற கேட்­டுள்ளேன், அண்டை அய­லவர் பற்றி ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்­கு ­வ­லி­யு­றுத்திக் கூறி­னார்கள். அவரை எனக்கு அனந்­த­ரக்­கா­ர­ராக ஆக்கி விடு­வார்­களோ என்று நான் அஞ்சும் அள­விற்­கு­ எனக் கூறி­னார்கள் திர்­மிதி (1943). அல்­லாமா அல்­பானி அவர்கள் இந்த செய்­தியின் அறி­விப்­பாளர் வரிசை பல­மா­ன­து­ எ­னக்­கூ­றி­யுள்­ளார்கள்.

இப்னு குதாமா ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் கூறு­கி­றார்கள்; முஸ்­லி­மல்­லா­த­வர்கள், சிறைக்­கை­திகள், திம்­மிக்­க­ளுக்கு ஏனைய ஸத­காக்கள் வழங்­கு­வது போன்று உழ்­ஹிய்யா இறைச்­சி­யையும் வழங்க முடியும். நூல் அல்­முக்னீ (9/450)
பதாவா அல்­லஜ்­னதுத் தாயி­மாவின் (11/424) தீர்ப்பின் படி முஸ்­லிம்­க­ளோடு இணங்கிப் போகும் இறை நிரா­க­ரிப்­பா­ளர்கள், சிறைக் கைதிகள், அய­ல­வர்கள், மாற்­று­ம­தத்­தி­லுள்ள உற­வி­னர்கள் போன்றோர் இதனால் இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­ப­டு­வார்கள் என்ற கார­ணியை வைத்து உழ்­ஹிய்யா இறைச்­சியை அவர்­க­ளுக்கு வழங்­க­மு­டியும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அல்­லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் முஸ்­லிம்­க­ளோடு போர் தொடுக்­காத காபிர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு உழ்­ஹிய்யா இறைச்­சியை வழங்க முடியும் என தீர்ப்பு வழங்­கி­யுள்­ளார்கள்.
மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ் – (48/18)

முஸ்லிமல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கக் கூடாது என்று தடை செய்யக்கூடிய தெளிவான ஒரு அடிப்படை இல்லாமையின் காரணமாகவும் இலங்கை போன்ற முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இன நல்லுறவைப்பேணும் நோக்குடன் அயலவர்கள், ஊர்வாசிகள் , உறவினர்களாக எம்மோடு வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்க முடியும் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும்.

நாம் மகிழ்வுற்று நம்மால் பிறர் மகிழ்வுறும் இப்புனித தினங்களில் இறைவனின் திருப்பொருத்தத்தை இலக்காக கொண்டு இந்த வணக்கத்தில் பேணவேண்டிய மேற்சொன்ன ஒழுக்கங்களை கடைப்பிடித்து ஒழுக முயற்சிப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.