குர்பான் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவோம்

0 202

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும் இக் காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அமல்களை நிறைவேற்றுதல் மற்றும் பெருநாள் கொண்டாட்டம் ஆகிய விடயங்களில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியாகும்.

முஸ்லிம்கள் குர்பானுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் மாடுகளுக்கு அம்மை நோய் (Lumpy Skin Disease) வேக­மாகப் பர­வி­யுள்­ளது. இந்­நோய் கா­ர­ண­மாக பல மாடுகள் இறந்து போயுள்­ளன. இந்நோய்த் தொற்று கார­ண­மாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் உள்­ளிட்ட பல இடங்­களில் மாடுகள் அறுப்­ப­தற்கு கட்டுப்பாடுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நோய்­தொற்­றுக்­குள்­ளான பகு­தி­யி­லி­ருந்து வெளி­யி­டங்­க­ளுக்கு மாடுகள் போக்­கு­வ­ரத்து செய்­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.
அதே­போன்று பிராந்­திய சுகா­தார சேவைகள் பணி­ம­னை­களும் இது­வி­ட­யத்தில் விசேட கவனம் செலுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக குர்பான் காலப்­ப­கு­தியில் பொது சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள் உலமா சபை கிளைகள், உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுடன் இணைந்து இந்த விட­யத்தை கையாள விசேட பொறி­மு­றை­களை வகுக்க வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்­துடன் நோயுற்ற மாடு­களை அறுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அதி­க­பட்ச சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்குமாறும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குர்பானின் போது மேற்படி நோய்த் தொற்றுக்குள்ளான மாடுகள் அறுக்கப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவ்வப் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதர்களினது மாத்திரமன்றி பள்ளிவாசல்களினதும் கடப்பாடாகும்.
கடந்த காலங்களில் குர்பான் கடமையை முன்னெடுக்கும் போது இனவாத சக்திகளால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இந் நிலையில் நோயுள்ள மாடுகளை அறுப்பதாகக் கூறி அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது.
இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’ பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன. எனவே கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதில் கூடிய கவனத்துடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் அல்லாதவர்களது ஆவேசம் தூண்டப்படுவதற்கு முஸ்லிம் சமூகத்தின் சிலரது பிழையான நடவடிக்கைகளும் காரணமாக அமைந்துள்ளமையை மறுப்பதற்கில்லை.

உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை மிருகங்களை ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும்போது அதற்கான அனுமதியை உரிய அரச அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை இலகுவாக்கும் வகையில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இருப்பின் தாமதங்களை ஏற்படுத்தாது விடுவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய வேறு ஒரு விடயமும் இருக்கின்றது. அது தான் அறுக்கப்பட்ட மிருகங்களது எச்ச சொச்சங்கள் அல்லது கழிவுகளாகும். அறுக்கப்பட்ட மிருகங்களது தலைகள், தோல், முள், கால்கள் என்பன ஆங்காங்கே எறியப்படுவதுண்டு. இதனால், சூழல் மாசடைகிறது. ஓரிரு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. நாய்களும், பூனைகளும், காகங்களும் அவ்விடங்களுக்குப் படையெடுக்கின்றன. பின்னர் அங்கு வரும் அதிகாரிகளும் பிற சமயத்தவர்களும் முஸ்லிம் சமூகம் சுத்தமற்ற, அடுத்தவர்கள் பற்றிய எவ்வித அக்கறையுமற்ற சுயநல சமூகம் என்று முடிவெடுக்கலாம். எனவே இந்த நிலை ஏற்படாது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கப்பால், ஹஜ் பெருநாளை அடுத்து வரும் தினங்களில் போயா தினமும் வருவதால் அன்றைய தினம் மிருகங்கள் அறுக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இப் பெருநாளைத் தொடர்ந்து வார இறுதியுடன் கூடிய விடுமுறை நாட்கள் வருவதால் பலரும் குடும்பமாக, நண்பர்களாக சுற்றுலா செல்வர். இதன் போது மிகவும் பொறுப்புடனும் பிறருக்கு தொந்தரவுகள் இல்லாத வகையிலும் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அனைவருக்கும் புனித ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.