புத்தளம் மாவட்ட எம்.பி. அலி சப்ரி ரஹீம் தங்கம் கடத்திய விவகாரம்: அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது

இதில் தலையிட மாட்டோம் என்கிறார் அப்துல்லாஹ் ஆலிம்

0 221

(எஸ்.என்.எம்.சுஹைல்)
புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் விவ­கா­ரத்தில் எம்மால் அர­சியல் கட்­சி­களின் விருப்பு வெறுப்­புக்கு ஏற்ற வகையில் ஒரு­போதும் செயற்­பட முடி­யாது என புத்­தளம் பெரிய பள்­ளி­வா­சலின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தெரி­வித்தார்.

அத்­தோடு, இந்த விட­யத்தில் நாங்கள் எந்­த­வ­கை­யிலும் தலை­யிட மாட்டோம் என்றும் அவர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்தார்.

புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் புத்­தளம் சிவில் சமூக நிறு­வ­னங்களின் ஒன்­றிய (பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலி­முக்கு ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் (தராசு சின்னம் கட்சி) செய­லாளர் மஸீ­ஹுதீன் நயீ­முல்லாஹ் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­தி­ருந்தார். குறித்த கடி­தத்­திற்கு இது­வரை பதில்கிடைக்­காத நிலையில், இது­கு­றித்து அப்­துல்லாஹ் ஆலி­மிடம் கேள்வி எழுப்­பிய போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், புத்­த­ளத்­திற்கு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­யொ­ரு­வரை வென்­றெ­டுக்க வேண்டும் என்­கிற வேட்கை எமக்கு இருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் இம்­மா­வட்­டத்­தி­லுள்­ள­வர்கள் தன்­னார்­வ­மா­கவே இந்த முயற்­சியில் ஈடு­பட்டு ஒற்­று­மைப்­பட்டு செயற்­பட்­டனர். எம்.பி. பத­வி­யொன்றை வென்­றெ­டுக்கும் தேவை அர­சியல் கட்­சி­க­ளுக்கும் இருந்­தது. அந்த அடிப்­ப­டையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உள்­ளிட்­டோர்­க­ளுடன் இன்னும் பல பிர­தி­நி­தி­களும் இணைந்து ஒன்­றாக போட்­டி­யிட முன்­வந்­தனர்.

அதற்­க­மை­ய அனை­வ­ரு­மாக இணைந்து தராசு சின்­னத்தில் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு (தற்­போது ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பு என பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ஊடாக தேர்­தலில் போட்­டி­யிட்­டனர். இதன்­போது, அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டை­யேதான் ஒப்­பந்­தங்கள் செய்­து­கொள்­ளப்­பட்­டன. அவர்­களின் தேவை­க­ளுக்கு ஏற்­பவே இவற்றை செய்­து­கொண்­டனர்.

தற்­போது பிரச்­சி­னை­யொன்று வந்­து­விட்­டது. எனவே, அவர்கள் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு எம்மை சாடு­கின்­றனர். அவர்கள் நழு­விக்­கொள்­வ­தற்­கா­கவே இவ்­வாறு செய்­கின்­றனர். புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் தொடர்பான சர்ச்சையில் நாம் தலையிடப்போவதில்லை. அவர்களின் பிழைகளை மறைத்துக்கொள்வதற்கும் விடயத்தை திசை திருப்புவதற்குமே இந்த செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.