தொல்பொருள் போர்வையில் காணி அபகரிப்புக்கு இடமளியோம்

0 192

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் சிங்­க­ள­மா­ய­மாக்கல் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்து வரு­வதை அண்மைக் கால சம்­ப­வங்கள் உணர்த்தி நிற்­கின்­றன. சிறு­பான்மை மக்­களின் பூர்­வீக நிலங்­களில் புத்தர் சிலை­களை வைப்­பதும் தொல்­பொருள் பாது­காப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வதும் தொடர் கதை­யா­கி­யுள்­ளது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிறுபான்மை மக்களின் நிலங்களை அபகரிக்கும் சூழ்ச்சிகரமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது தொல்பொருள் திணைக்களத்தின் இந்த அத்துமீறல் செயற்பாடுகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதன்போது நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் அபகரிப்பதற்கு திணைக்களத்திற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என ஜனாதிபதி விளக்கிக் கூறினார். அத்துடன் நாட்டின் வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம் என்றும் தொல்பொருள் திணைக்கள ஆணையாளரை வேண்டிக் கொண்டார். இந்த சந்திப்பையடுத்து தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்த சம்பவமும் நிகழ்ந்தேறியது.

உண்மையில் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று தமது மக்களின் காணி உரிமையை நிலைநாட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இதற்கு முன்னரும் அவர்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு தமது மக்களுக்கு வழங்கியுள்ளனர். துரதிஷ்டவசமாக முஸ்லிம் எம்.பி.க்கள் இன்னமும் சமூகத்தை அடகு வைத்து தமது சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாகவுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்­மோட்டை பொன்­ம­லைக்­குடா பிர­தே­சத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் புத்தர் சிலை­களை வைப்­ப­தற்கு பௌத்த பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­கொண்ட முயற்சி அப் பகு­தியில் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­திருந்தது. சிறு­பான்மை மக்­களின் நிலத்தில் அத்­து­மீறிப் பிர­வே­சித்­தது மாத்­தி­ர­மன்றி, அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்த காணி உரி­மை­யா­ளர்­களை துப்­பாக்­கி­களைக் காட்டி அச்­சு­றுத்தும் வகையில் அமைச்­சர்­க­ளுக்­கான பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் நடந்து கொண்­டனர்.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இவ்­வா­றான சிங்­க­ள­ம­ய­மாக்கல் வேலைத்­திட்­டங்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக அதி­க­ரித்தே வரு­கின்­றன. எனினும் இவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வித காத்­தி­ர­மான வேலைத்­திட்­டங்­களும் அர­சாங்க தரப்­பி­லி­ருந்தோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலிருந்தோ முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

அண்மையில் திருகோணமலை நகரில் புத்தர் நிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. எனினும் இந்த விடயமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால் இறுதியில் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இவ்­வாறு நாட்டில் தொடர்ச்­சி­யான இனங்­க­ளுக்­கி­டையே, மதங்­க­ளுக்­கி­டையே முறு­கல்­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும் அவற்றைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு வேலைத்­திட்­டங்­களும் நிரந்தரமாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. தொல்­பொருள் என்ற போர்­வையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்­களின் பூர்­வீக காணி­களை அப­க­ரிப்­ப­தற்­கான மறை­முக வேலைத்­திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தை ஜனாதிபதி நன்கறிந்துள்ளார். அந்த வகையில் இதனை தடுத்து நிறுத்த அவர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தான் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வை வழங்­குவேன் என அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அதனை செயலில் காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அவர் தன்னை ஒரு கனவான் அரசியல்வாதி என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், ஜனாதிபதி உடனடியாக இவ்வாறான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். இது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன் மூலமே வடக்கு கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியுமாகவிருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.