கிண்ணியா பிரதேச செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எப்போது?

0 364

ஒலுமுதீன் கியாஸ் ஷாபி

கிண்­ணியா பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட மஜித்­நகர், சூரங்கல், நடு­ஊற்று மற்றும் கற்­குழி ஆகிய நான்கு கிராம சேவக பிரி­வு­களில் உள்ள செங்கல் உற்­பத்தி தொழி­லா­ளர்கள் பல வரு­டங்­க­ளாக பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.
இந்தப் பிர­தே­சங்­களில், குரங்­கு­பாஞ்சான், வெள்­ளங்­குளம், சுங்­காங்­குழி, பட்­டி­யனூர், நடு­ஊற்று, சூரங்கல், துவ­ரங்­குளம் மற்றும் கற்­குழி ஆகிய கிரா­மங்­களில் செங்கல் உற்­பத்தி இடம்­பெற்று வரு­கின்­றது.

இங்கு 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக நூற்­றுக்கு மேற்­பட்ட செங்கல் உற்­பத்­தி­யா­ளர்கள் உற்­பத்­தியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­தோடு ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட கூலித் தொழி­லா­ளர்கள் இங்கு வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர். இவர்கள் கிண்­ணி­யாவின் பல கிரா­மங்­களில் இருந்தும் அன்­றாட ஜீவ­னோ­பா­யத்­திற்­காக இந்தக் கூலித் தொழிலை செய்து வரு­கின்­றனர்.

இலங்­கையில் 30 வருட கால யுத்தம் முடிந்த பிறகும் இந்தத் தொழிலை செய்து வந்­த­தா­கவும் ஆனால், நாட்டில் ஏற்­பட்டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி, தங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை முழு­மை­யாக பாதித்து இந்தத் தொழி­லையே கைவிடும் நிலைக்கு தள்­ளியுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இது குறித்து கிண்­ணியா, சின்ன மக­மாறு கிரா­மத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் சின்­ன­லெப்பை (52) என்­பவர் கருத்து தெரி­விக்கும் போது,

நான் கடந்த இரு­பது வரு­ட­மாக இந்த தொழிலை செய்து வரு­கிறேன். செங்கல் உற்­பத்தி உப­க­ர­ணங்­களின் விலை ஏற்றம் பாரிய பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. 650 ரூபா­வுக்கு வாங்­கிய மண்­வெட்டி ஒன்று இப்­பொ­ழுது 2300 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கின்­றது. 300 ரூபா­வுக்கு வாங்­கிய பொலித்­தீனை இப்­போது ஆயிரம் ரூபா­வுக்கு வாங்க வேண்டும். 25000 ரூபாய்க்கு விற்­கப்­பட்ட நீர் இறைக்கும் மோட்டார் இயந்­திரம் ஒன்று 57 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கின்­றது. இதனால் பாரிய போராட்­டங்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ளோம் என்று தெரி­வித்தார்.

 

கிண்­ணியா, மகா­மாறு கிரா­மத்தை சேர்ந்த அப்துல் முத்­தலிப் இபா­துல்லா(38) என்­பவர் கருத்து தெரி­விக்கும் போது, இது எனது பரம்­பரைத் தொழில். எனது தகப்­பனார் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக இத் தொழிலை செய்து வந்­தார். நான் கடந்த எட்டு வரு­டங்­க­ளாக இந்த தொழிலை செய்து வரு­கிறேன். கடந்த காலங்­களில் இந்த தொழில் மூலம் ஓர­ளவு வரு­மா­னங்­களை பெற்று வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டியால் எமது வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. காரணம் செங்கல் விற்­ப­னையில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இலாபம் குறை­வ­டைந்­துள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆயிரம் கல்லை விற்­பனை செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும்.

ஆனால் இப்­போது 1500 ரூபாயே இலா­ப­மாக பெறு­கின்றோம். இது தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி நிலையில் உண்­மை­யி­லேயே எங்­க­ளு­டைய உழைப்­புக்கு போதாது. இருந்தும் இப்­போ­தைய கஷ்­ட­மான நிலை கார­ண­மாக இதை நாங்கள் அந்த விலைக்கு கொடுக்க வேண்டி இருக்­கி­றது. ஆனால் கூலி வேலையாளர்­க­ளுக்கு முன்பு ஆயிரம் கல்­லுக்கு 3000 ரூபாவும் சாப்­பாடும் கொடுத்தோம். ஆனால் இப்­போது 3000 கல்­லுக்கு 5000 ரூபாவும் சாப்­பாடும் கொடுக்க வேண்டும். கூலியும் அதி­க­ரித்து விட்­டது. இதனால் உற்­பத்தி செலவு அதி­க­ரித்து, அதே­வேளை விற்­பனை வீழ்ச்சி அடைந்து விட்­டது என்று தெரி­வித்தார்.

இது குறித்து கிண்­ணியா, நடு­ஊற்று கிரா­மத்தை சேர்ந்­த­ அப்துல் ரஹீம் அன்சார் (44) செங்கல் உற்­பத்தி குறித்து இவ்­வாறு கருத்து தெரி­வித்தார்.

செங்கல் உற்­பத்­திக்­காக விறகு எடுப்­பதில் தற்­போது பல்­வேறு சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்றோம். செங்கற் தொழி­லுக்கு என்று விறகு அனு­ம­திப்­பத்­திரம் கிடைப்­ப­தில்லை. வீட்டு பாவ­னைக்கு என்று எடுக்க வேண்டும். அதுவும் மாதம் ஒரு முறையே தரு­கி­றார்கள். இது செங்கல் உற்­பத்­திக்கு போதாது. இதன் கார­ண­மாக தொழிலை தொடர்ச்­சி­யாக செய்ய முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம் என்று கூறினார்.

எரி­பொருள் பிரச்­சி­னையும் விறகு பிரச்­சி­னையும் எங்­க­ளு­டைய இந்த பரம்­பரை தொழி­லையே அடி­யோடு அழித்து விடும் என அஞ்­சு­கிறோம் என கிண்­ணியா மகா­மாறு பிர­தே­சத்தைச் சேர்ந்த ஆதம்­பாவா ரபீக் (53) கூறு­கின்றார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறு­கையில், செங்கல் உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்­தப்­படும் நீர் இறைக்கும் இயந்­தி­ரத்­துக்கு தேவை­யான எரி­பொ­ருளை எங்­களால் பெற முடி­யா­துள்­ளது. இந்த இயந்­தி­ரத்­துக்கு QR கிடை­யாது. எங்­க­ளு­டைய மோட்டார் சைக்­கி­ளுக்கு கிடைக்­கின்ற QR இற்­கான பெட்­ரோ­லையே நீர் இறைக்கும் இயந்­தி­ரத்­திற்கு பயன்­ப­டுத்­தி வரு­கின்றோம்.

அடுத்து, கல்லைச் சுடு­வ­தற்கு போதிய அளவு விறகு பெற முடி­யாது தவிக்­கிறோம். அதற்­கான அனு­ம­தியை பெறு­வ­தற்கு 40 கிலோ­மீற்றர் தூரம் திரு­கோ­ண­ம­லையில் உள்ள வன­வ­ளப்­பா­து­காப்பு திணை­க­்களத்­திற்கு அலைய வேண்­டி­யி­ருக்­கி­றது என்றும் கூறினார்.

இந்த நிலையில், மிகவும் பழமை வாய்ந்த பாரம்­ப­ரிய இந்த தொழிலை படிப்­ப­டி­யாக இவர்கள் இழந்து வரு­வதை காணக் கூடி­ய­தாக உள்­ளது.
நாட்டில் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்டு கடந்த ஒரு வரு­டத்­திற்குள் 50 வித­மானோர் இந்த தொழிலை கைவிட்டு உள்­ள­தா­கவும் இதனால் பல நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்­களில் வாழ்­வா­தாரம் பெரிதும் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

திரு­கோ­ண­மலை வன­வள பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் மாதம் ஒன்­றுக்கு ஒரு நாளுக்­கு­ரிய அனு­மதிப் பத்­தி­ரமே வழங்­கப்­ப­டு­வ­தாக இவர்கள் கூறு­கின்­றனர்.
அதுவும் வீட்டு பாவ­னைக்கு மாத்­தி­ரமே விற­குக்­கான போக்­கு­வ­ரத்து அனு­ம­திப்­பத்­திரம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் எப்­படி செங்கல் உற்­பத்­தியை பாது­காக்க முடியும்?

எனவே செங்கல் உற்­பத்­திக்­காக தனி­யாக வண்­டியில் விறகு கொண்டு செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட வேண்டும். அதுவும் ஒரே தட­வையில் ஒரு மாதத்­துக்­கா­வது வழங்க வேண்டும்.

இவர்கள் மோட்டார் சைக்­கி­ளுக்­கான QR Code ஐ பயன்­ப­டுத்­தியே பெட்­ரோலை பெறு­கின்­றார்கள். இது நாளாந்தம் நீர் இறைக்கும் இயந்­தி­ரத்­துக்கு போது­மா­ன­தாக இல்லை. இதுவும் உற்­பத்­தியில் பெரி­ய­தொரு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. எனவே, செங்கல் உற்­பத்­திக்­கென்று தனி­யாக எரி­பொருள் கோட்­டாவை இவர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்து, செங்கல் உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற உப­க­ர­ணங்களின் விலை­யேற்றம் இந்த தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் மானிய அடிப்படையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

கிண்­ணியா பிர­தே­சத்தில் மேற்­கு­றித்த கிரா­மங்களில் செங்கல் உற்­பத்­திக்கு தேவை­யான களி­மண் ­வ­ளப்­ப­டுக்கை விரிந்து காணப்­ப­டு­வதால், இந்த இடங்கள் செங்கல் உற்­பத்­திக்கு பொருத்­த­மான பொரு­ளா­தார பிர­தே­ச­மாக அர­சாங்­கத்தால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்­காக இந்தப் பிர­தேச மக்­களின் அனு­ச­ர­ணை­யுடன் அர­சியல் அதி­கா­ரங்­களைப் பெற்ற மக்கள் பிர­தி­நி­திகள் ஏதாவது உருப்படியான வேலைகளைச் செய்வார்களா?-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.