முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: பன்சலை-பள்ளிக்குமிடையே முரண்பாடுகள் இல்லை

முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை மதிக்கிறோம் என்கிறார் நெல்லிகல தேரர்

0 109

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கும் கூர­கல பெளத்த புனித பூமி பன்­ச­லைக்­கு­மி­டையில் எவ்­வித முரண்­பா­டு­க­ளு­மில்லை. நாம் முஸ்­லிம்­களின் மத அனுஷ்­டா­னங்­களை மதிக்­கிறோம். ஜெய்­லானி பள்­ளி­வாசல் மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு எம்­மி­ட­மி­ருந்து ஏதும் உத­விகள் தேவைப்­பட்டால் உத­வு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம்’ என கூர­கல பெளத்த புனித பூமிக்கு பொறுப்­பாக செயற்­படும் நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்பு தொடர்பில் வின­வி­ய­போதே ‘ விடி­வெள்­ளி’க்கு அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘நாங்கள் பள்­ளி­வா­சலை அவர்­க­ளுக்கு ஒதுக்­கிக்­கொ­டுத்­துள்ளோம். முஸ்­லிம்கள் அவர்­க­ளது சம­யக்­க­ட­மை­களை அமை­தி­யாக முன்­னெ­டுக்­கி­றார்கள். இதே­போன்று நாமும் எமது சம­யக்­க­ட­மை­களை அமை­தி­யாக முன்­னெ­டுக்­கிறோம்.

போயா தினங்­களில் கூர­கல புனித பூமியை தரி­சிக்க ஆயி­ரக்­க­ணக்­கான பக்தர்கள் வருகை தரு­கி­றார்கள். அவர்­களில் அநேகர் பள்­ளி­வா­ச­லுக்கும் செல்­கி­றார்கள். இதே போன்று பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தரும் முஸ்­லிம்­களில் அநேகர் புனித பூமிக்கு விஜயம் செய்து பெளத்த மத நிலை­யங்­க­ளுக்கும் சென்று பார்­வை­யி­டு­கி­றார்கள். தற்­போது எமக்குள் இன நல்­லி­ணக்கம் வலுப்­பெற்று வரு­கி­றது.

போயா தினங்­களில் வருகை தரும் பெளத்­தர்கள் பள்­ளி­வா­ச­லுக்கும் விஜயம் செய்­வதால் அங்கு ஏதும் முரண்­பா­டுகள் இரு சமூ­கத்­தி­ன­ருக்­கு­மி­டையில் உரு­வா­காமல் இருப்­ப­தற்­காக, கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஓரி­ரு­வரை அங்கு நிறுத்­தி­யுள்ளோம்.

தமது சுய­ந­லன்­க­ளுக்­காக செயற்­படும் ஒரு சாராரே இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னை­களை உரு­வாக்க முயற்­சிக்­கி­றார்கள். இவர்­க­ளி­லி­ருந்தும் நாம் தூர வில­கி­யி­ருக்க வேண்டும்.

ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணி நில அள­வீடு செய்யும் பணிகள் நடை­பெற்­றுள்­ளன என்றார்.

இதே­வேளை ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உப­த­லைவி ரொசானா அபு­சா­லியைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது ‘பள்ளிவாசலின் சமய கடமைகள் வழமைபோல் சுமுகமாக நடைபெறுகிறது. பல இடங்களிலிருந்தும் பத்தர்கள் வந்து செல்கிறார்கள்.நாம் நெல்லிகல வத்துகும்புர தம்ம ரதன தேரருடன் சமாதானமாக எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.