பலஸ்தீனை மீட்கும் போராட்டத்துக்கு குரல் கொடுப்பது நமது கடமையாகும்

பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு

0 294

பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 75 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு உல­க­ளா­விய ரீதியில் நக்பா தினம் அனுஸ்­டிக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் பலஸ்­தீ­னுக்­கான இலங்கை ஒரு­மைப்­பாட்­டுக்­குழு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதன் விபரம் வரு­மாறு:

பலஸ்­தீன மக்­களின் தாய­கத்­தையும் தேசிய அடை­யா­ளத்­தையும் பறித்த அல் நக்பா எனப்­படும் பேர­ழிவின் எழு­பத்­தைந்­தா­வ­து­ ஆண்டை நாம் கடந்து செல்­கின்றோம். இவ்­வ­ளவு காலமும் அந்த மக்­களின் நீதியும் நியா­யமும் அனைத்­துக்கும் மேலாக அந்­த­ மக்­களின் மனி­தா­பி­மா­னமும் மதிக்­கப்­ப­டாமல் இருப்­பது வெட்கக் கேடா­னது. ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 181 ஆவ­து ­தீர்­மா­னத்தின் மூலம் உலகின் பலம் பொருந்­திய நாடு­களின் ஒப்­பு­த­லு­டனும் ஆத­ர­வு­டனும் பலஸ்தீன் இரண்­டா­க ­உ­டைக்­கப்­பட்ட வர­லாறு 1917 வரை நீண்டு செல்­கி­றது. அதி­லி­ருந்து ஒரு நூற்­றாண்­டுக்கும் மேலாக பலஸ்­தீன மக்­க­ளுக்­கு­ இ­ழைக்­கப்­பட்ட அநீ­தியை சரி­செய்­வ­தற்­கான சாத­க­மான முயற்­சிகள் எத­னையும் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இது­வ­ரை­ மேற்­கொள்­ள­வில்லை.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்­மானம் 181 இன்­படி பலஸ்­தீன தேசத்தில் ஒரு யூத அரசும் பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான அர­பு­ தே­சமும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் இன்று வரை யூத அரசு மட்­டுமே நிறு­வப்­பட்­டுள்­ளது. பலஸ்­தீ­னுக்­கு­ ஒ­துக்­கப்­பட்ட பிர­தேசம் அனே­க­மாக மொத்­த­மா­கவே யூத அரசால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லின்­ அ­னு­ச­ர­ணை­யா­ள­ரான அமெ­ரிக்­காவின் மத்­தி­யஸ்­தத்­துடன் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒஸ்லோ உடன்­ப­டிக்கை தற்­போது வெற்­றுக்­கா­கி­த­மாக மாறி­யுள்­ளது. 1948 இன் பென் கூரியன் சித்­தாந்­தத்தைப் பயன்­ப­டுத்தி இஸ்­ரே­லிய சியோ­னிஸ்­டுகள் இன்­று ­ப­லஸ்­தீ­னையும் அதன் மக்­க­ளையும் ‘ரத்து’ செய்யும் நிலைக்கு வந்­துள்­ளனர் என்­பது தான் கவ­லைக்­கி­ட­மா­னது.

பலம் வாய்ந்த நாடு­களின் அனு­ச­ர­ணை­யோடும் ஆசி­யோடும் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த அநீ­தியைச் சரி செய்­வ­தற்­கா­ன ­அ­னைத்து முயற்­சி­களும் தோல்வி அடைந்துவிட்­டன என்­பதை நாம் ஒப்புக் கொண்­டாக வேண்டும். ஐ.நா. பொதுச் சபை­யில்­ நி­றை­வேற்­றப்­பட்ட நூற்றுக் கணக்­கான தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்த முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அவை அனைத்­துமே ஒஸ்லோ உடன்­ப­டிக்கை போல காகி­தங்­க­ளுக்­குள்­ளேயே அடங்­கி­விட்­டன. பலஸ்­தீன மக்­களின் சுயா­தீ­ன ­இ­றை­யாண்மை அர­சுக்­கான உரி­மைகள் அனைத்தும் கன­வாகிப் போயின.

இஸ்­ரே­லிய சியோ­னிஸ்­டுகள் பலஸ்­தீன மக்­களை அவர்­களின் கிரா­மங்கள் மற்றும் நக­ரங்­களில் இருந்து விரட்­டி­ய­டித்­து­ அ­வர்­களின் அடை­யா­ளத்­தையும் தேசி­யத்­தையும் அழித்­தொ­ழிக்க முயற்­சித்து வரு­கி­றார்கள். இவற்­றுக்­கி­டை­யில்­ பின்­வாங்­காமல் அந்த மக்கள் தமது வாழ்­வு­ரி­மைக்­கா­கவும் தமக்­கான சொந்த நாட்­டுக்­கா­கவும் மேற்­கொள்­கின்­ற­போ­ராட்­டங்­களைக் கைவி­டாமல் தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­வதே பெரு­வெற்­றி­யாகும். இது போற்­றப்­ப­ட ­வேண்­டி­ய­தாகும்.

அந்­நக்பா எனும் பேர­ழிவு அடை­யா­ளப்­ப­டுத்­து­வது பலஸ்­தீன மக்­களை தோல்­வி­ய­டையச் செய்­வதை மட்­டு­மன்றி தற்­போ­தை­ய­ உ­லக அர­சியல் சூழ்­ நி­லையில் உலகின் அனைத்து ஏழை எளிய மக்­க­ளி­னதும் தலை­வி­தியை நிர்­ண­யிப்­ப­தற்­கா­ன­ மு­யற்­சி­யு­மாகும். இந்த வகையில் பலஸ்­தீன மக்­களின் அந்­நக்­பா­வுக்­காக குரல் கொடுப்பது என்பது எம் அனைவரதும் அரசியல், பொருளாதார, கலாச்சார அடிமைத்துவத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகும்.

உலகில் எங்கோ நடக்கின்ற அநீதியும் அநியாயமும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லோருக்கும் தாக்கம் செலுத்துகின்ற அநீதியாகவும் அநியாயமாகவும் அமையும் என்ற வகையில் மனிதாபிமான சமூகமொன்றுக்கான எமது அர்ப்பணமே நாம் பலஸ்தீன மக்களுக்கு வழங்க முடியுமான பலமாகவும் தைரியமாகவும் அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.