காதி நீதிமன்றங்களினால் வழங்கப்படும் விவாகரத்து சான்றிதழ் பிரதியை பிரதேச செயலகத்தில் பெற முடியாமையினால் சிரமம்

0 174

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­படும் விவா­க­ரத்­துக்­கான சான்­றி­தழ்­களின் பிர­தி­களை பிர­தேச செய­ல­கங்­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடி­யா­ததால் முஸ்­லிம்கள் பல சிர­மங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­வ­தாக பதி­வாளர் நாய­கத்­துக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

விவா­க­ரத்­தினைப் பதிவு செய்யும் விவா­க­ரத்து பதிவுப் புத்­தகம் 100 பக்­கங்­களைக் கொண்­ட­தாகும். இப்­புத்­த­கத்தில் 100 விவா­க­ரத்­து­களைப் பதிவு செய்­யலாம். 100 பதி­வுகள் மேற்­கொண்­டதன் பின்பே அப்­புத்­தகம் குறிப்­பிட்ட பிர­தேச செய­ல­கத்தில் ஒப்­ப­டைக்­கப்­படும். இதே­வேளை ஒவ்­வொரு மாதமும் பதிவு செய்­யப்­படும் விவா­க­ரத்து பதி­வு­களின் பிர­திகள் பிர­தேச செய­ல­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­படும். அந்தப் பிர­திகள் பிர­தேச செய­ல­கங்கள் மூலம் பதி­வாளர் நாய­கத்தின் மத்­திய ஆவண நிலை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­படும். இதுவே நடை­மு­றை­யாகும்.

ஆனால் இதன் ஸ்கேன் தொகுப்­பொன்­றினை பிர­தேச செய­ல­கங்கள் வைத்துக் கொள்­வ­தில்லை. இதே­வேளை திரு­மணம், பிறப்பு மற்றும் இறப்பு சான்­றி­தழ்­களின் ஸ்கேன் தொகுப்­பொன்­றினை பிர­தேச செய­ல­கங்கள் பேணி வரு­கின்­றன. இந்­நி­லையில் முஸ்லிம் விவா­க­ரத்து சான்­றி­த­ழுக்கு மாத்­திரம் இந்தப் பார­பட்சம் காட்­டப்­ப­டு­வ­தாக காதி­நீ­தி­வான்கள் போரம் பதி­வாளர் நாய­கத்­துக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

காதி நீதி­வான்­கள்­போ­ரத்தின் உப­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா இது தொடர்பில் பதி­வாளர் நாயகம் திணைக்­க­ளத்­துக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.
விவா­க­ரத்து பதிவு புத்­த­கத்தில் 100 பதி­வுகள் பூர்த்­தி­யா­னதன் பின்பே அப்­புத்­தகம் காதி­நீ­தி­ப­தி­யினால் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் புத்­தகம் கைய­ளிக்­கப்­படும் வரை பிர­தேச செய­ல­கங்கள் விவா­க­ரத்து பதிவு தொடர்­பான சான்­றி­தழை கொண்­டி­ருப்­ப­தில்லை. காதி­நீ­தி­ப­தி­களால் மாதாந்தம் அனுப்பி வைக்­கப்­படும் பதிவின் பிரதி பதி­வாளர் நாய­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு வரு­கி­றது. எனவே பிர­தேச செய­ல­கங்­களில் முஸ்­லிம்கள் விவா­க­ரத்து சான்­றி­தழைப் பெற்றுக் கொள்ள முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

விவா­க­ரத்து பதிவு புத்­த­கங்­களில் 100 பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்பு அப்­புத்­தகம் பிர­தேச செய­ல­கத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தால் இந்­நி­லைமை ஏற்­ப­டு­வ­தில்லை. காதி­நீ­தி­மன்­றங்­களில் பயன்­பாட்டில் இருக்கும் 100 பதி­வுகள் முற்றுப் பெறாத புத்­த­கங்­க­ளி­லுள்ள பதி­வு­க­ளுக்கே இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ளது என்­பதை காதி­நீ­தி­ப­திகள் போரம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பின்­வரும் பரிந்­து­ரைகள் காதி­நீ­தி­ப­திகள் போரத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
பொது­மக்கள் தேவை­யான விவா­க­ரத்து பிர­தி­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக பிர­தேச செய­ல­கங்கள் ஸ்கேன் செய்­யப்­பட்ட ஒரு தொகுப்பு நகல்­களை வைத்­தி­ருத்தல்
மாவட்ட நீதி­மன்­றங்கள் தங்கள் நீதி­மன்ற பதி­வாளர் பதிவு அறை மூலம் மற்ற விவா­க­ரத்து தீர்ப்­பு­களை வழங்­கு­வது போன்று காதி நீதி­மன்­றங்கள் மூலம் முஸ்லிம் விவா­க­ரத்துச் சான்­றி­தழ்­களைக் கையாள விரும்­பினால் காதி நீதி­ப­திகள் வழங்கும் விவா­க­ரத்து பிர­திகள் செல்­லு­ப­டி­யாகும் என்று சுற்று நிருபம் வெளி­யி­டப்­ப­டலாம். இது மக்கள் சிர­மங்­களை எதிர்­கொள்­ளாது தவிர்ப்பதாக அமையும்.

பொதுமக்கள் தேவைப்படும் போது விவாகப்பதிவு பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலக அலுவலகத்திலும் ஸ்கேன் செய்யப்பட்ட தொகுப்பு பிரதிகளைப் பராமரிக்கலாம். காதி நீதிபதிகளிடமிருந்து 100 பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட விவாகரத்து பதிவுப் புத்தகம் கிடைக்கப்பெறும் வரை இந்நடைமுறையைப் பின்பற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.