சூடானிலிருந்து ஐயாயிரத்திற்கும் அதிகமானோரை வெளியேற்றியது சவூதி

இதுவரை 31 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்

0 352

சூடானில் உள்­நாட்டுப் போர் வெடித்­துள்­ளதைத் தொடர்ந்து அங்கு வசித்­து­வரும் வெளி­நாட்­ட­வர்­களை பாது­காப்­பாக வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­களில் சவூதி அரே­பியா மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நேற்று முன்­தினம் வரை 102 நாடு­களைச் சேர்ந்த 5629 பேர் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி தெரி­வித்தார். இவர்­களில் 239 பேர் சவூதி பிர­ஜைகள் என்றும் 5390 பேர் ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சவூதி அரே­பிய அர­சா­னது அதன் தலை­மைத்­து­வத்தின் வழி­காட்­டு­தலின் கீழ், சூடான் குடி­ய­ரசில் சிக்­கித்­த­விக்கும் பல்­வேறு நாட்­டி­ன­ரையும் வெளி­யேற்றும் முயற்­சி­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் தூதுவர் குறிப்­பிட்டார்.
இவ்­வாறு அழைத்­து­வ­ரப்­பட்­ட­வர்கள் தத்­த­மது நாடு­க­ளுக்குப் புறப்­ப­டு­வ­தற்குத் தேவை­யான அனைத்து அடிப்­படை வச­தி­க­ளையும் சவூதி அரே­பிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை சூடானில் தங்­கி­யி­ருந்த 14 இலங்­கை­யர்கள் கடந்த சனிக்­கி­ழமை இலங்­கையை வந்­த­டைந்­தனர். இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் ஒருங்­கி­ணைப்பில், சவூதி அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன், குறித்த தரப்­பினர் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
இதே­வேளை, சூடானில் இருந்து மீட்­கப்­பட்ட இலங்­கை­யர்­களின் இரண்­டா­வது குழு சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ருக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளது. மீட்­கப்­பட்ட இரண்­டா­வது குழுவில் 6 இலங்­கை­யர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக சவூதி அரே­பி­யாவில் உள்ள இலங்கை தூத­ரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 31 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சவூதி அரசாங்கத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.