வடக்கு – கிழக்கில் மாத இறுதிக்குள் காணி விடுவிப்பு

இராணுவம் தெரிவிப்பு

0 959

வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள 263.55 ஏக்கர்  அரச மற்றும் தனியார் காணி­களை தேசிய பாது­காப்­பிற்கு  அச்­சு­றுத்தல்  இல்­லாத வகையில்  விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு  முன்னர் குறித்த காணி­களை  விடு­விக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சம்­பந்­தப்­பட்ட தரப்­பிற்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். அதற்­க­மைய அரச மற்றும் தனி­யா­ருக்கு சொந்­த­மான சுமார் 263.55 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

2009 ஆம்  ஆண்டு மே மாதத்­தி­லி­ருந்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்த தனியார் மற்றும் அரச காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

அதற்­க­மைய 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 84523.84 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் இரா­ணு­வத்­தினர் வசம் காணப்­பட்­டன. அதன்­பின்னர்  2018  நவம்பர் 25 ஆம் திக­தி­யாகும் போது இரா­ணு­வத்­தினர் வசம் காணப்­பட்ட அரச மற்றும் தனியார் காணி­களின் அளவும் 66754.59 ஏக்­கர்­க­ளாக பதி­வா­கி­யுள்­ள­மையை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

மேலும்,  2009 ஆம்  ஆண்டில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் 58181.12 ஏக்கர் வரை­யி­லான அரச காணிகள் காணப்­பட்­டன. அதன் பின்னர் 2018 நவம்பர் 25 ஆம் திக­தி­யாகும் போது 45980.97 ஏக்கர் அரச காணி­களே இரா­ணு­வத்­தினர் வசம் காணப்­பட்­டன.

இந்த வகையில்  இரா­ணுவம் வச­மி­ருந்த தனியார் காணி­களை எடுத்­துக்­கொண்டால் 2009 ஆம் ஆண்டில் 26342.72 ஏக்கர் காணி­களில் படிப்­ப­டி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்த காணி விடு­விப்­பிற்­க­மைய   2018  நவம்பர் 25 ஆம் திக­தி­யா­கும்­போது 237773.62 ஏக்­கர் ­கா­ணி­களே இரா­ணு­வத்தின் வசம் காணப்­பட்­டன.

அத­ன­டிப்­ப­டையில் சுமார் 79 வீத­மான அரச காணி­களும் , 90 வீத­மான தனியார் காணி­களும் 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2018 நவம்பர் 25 ஆம் திகதி வரையில் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ள­மையை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இந்த நிலை­யி­லேயே, டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்­ன­தாக யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களில் இரா­ணுவம் வச­முள்ள அரச மற்றும் தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட­வுள்­ளன.

அதில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 130.66 ஏக்கர் அரச காணிகளும், 132.89 ஏக்கர் வரையிலான தனியார் காணிகளும் உள்ளடங்கலாக 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.