சவூதியுடனான ஒப்பந்தம் ரத்தானால் கனடா நெருக்கடிகளை சந்திக்கும்

அமெரிக்க நிறுவனம் எச்சரிக்கை

0 566

சவூதி அரே­பி­யா­வுக்கு இல­கு­ரக கவச வாக­னங்­களை ஏற்­று­மதி செய்யும் ஒப்­பந்தம் ரத்து செய்­யப்­பட்டால், பில்­லியன் கணக்­கான டொலர்­களை அப­ரா­த­மாக செலுத்­த­வேண்டி ஏற்­ப­டு­மென அமெ­ரிக்க கவச வாகன உற்­பத்தி நிறு­வ­ன­மொன்று கன­டா­வுக்கு எச்­ச­ரித்­துள்­ளது.

ஒன்­றா­ரி­யோவை மைய­மாக கொண்டு இயங்கும் அமெ­ரிக்­காவின் கிளை நிறு­வ­ன­மொன்று இது­கு­றித்து குறிப்­பி­டு­கையில், இந்த ஒப்­பந்தம் நீக்­கப்­பட்டால் தமது தொழிற்­று­றையில் பாரிய பின்­ன­டைவு ஏற்­ப­டு­மெனக் கூறி­யுள்­ளது.

சவூ­திக்கு இல­கு­ரக கவச வாக­னங்­களை ஏற்­று­மதி செய்யும் 15 பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான ஒப்­பந்­தத்தை ரத்­து­செய்யும் முனைப்பில் கனடா ஈடு­பட்­டுள்­ளது. ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் கொலையின் பின்னர் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த ஒப்­பந்­தத்தை நிறுத்­து­வது தொடர்­பாக ஆலோ­சித்து வரு­வ­தாக பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்தார். இந்த அறி­விப்பைத் தொடர்ந்து, ஒன்­றா­ரியோ நிறு­வனம் நேற்று அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ள­தோடு, அதி­லேயே கனடா பாதிப்பை எதிர்­கொள்­ளு­மென குறிப்­பிட்­டுள்­ளது.

ஒப்­பந்தம் நிறுத்­தப்­பட்டால் பெரு­ம­ள­வான தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தோடு, கனே­டிய பாது­காப்புப் படைக்கு வாக­னங்­களை வழங்­கு­வ­திலும் சிக்கல் ஏற்­ப­டு­மென ஒன்­றா­ரியோ வாகன தயா­ரிப்பு நிறு­வனம் கூறி­யுள்­ளது.
ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் கொலைக்குப் பின்னர், சவூதி மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே சவூதியுடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.