சகிப்புத்தன்மை, அன்பை வெளிப்படுத்தும் நாள் : சவூதி தூதுவரின் பெருநாள் வாழ்த்து

0 292

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈத் அல்-பித்ர் திருநாள் என்பது மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும். இக்குணாதிசயங்கள்தான் இஸ்லாத்தின் அடிப்படை. ஈத் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நாள்; அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சமாதானம் பேணவேண்டிய நாள்.

இந்த மங்களகரமான சந்தர்ப்பம், உறவுமுறை, சமாதானம் ஆகியவற்றின் பிணைப்பை புத்துயிர் பெறச்செய்வதற்கும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த நன்நாள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.