உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது

அமுல்படுத்த வேண்டாமென முஸ்லிம் தரப்பு பிரதமரிடம் கோரிக்கை

0 222

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான புதிய எல்லை நிர்­ணயம் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்ல நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் தற்­போது தயார் ­நி­லை­யி­லுள்ள மஹிந்த தேசப்­பி­ரி­யவின் தலை­மை­யி­லான எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை வெளி­யி­ட­வேண்டாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஜனா­தி­பதி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா என்போர் பிர­த­மரும், விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை நாடெங்கும் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் அல்­லது குறைக்கும் வகை­யிலேயே அமைந்­துள்­ளது. இதனை நாம் பிர­த­ம­ரிடம் விளக்­கி­யுள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் கட்­டா­ய­மாக உள்­வாங்கப்படும் வகையில் எல்லை நிர்­ணயம் அமைய வேண்டும். ஆனால் புதிய எல்லை நிர்­ணயம் வேண்­டு­மென்றே சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகையில் அமைந்­துள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­துள்ளார்.

ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கை­யையும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யையும் 50 வீதத்தால் குறைப்­ப­தற்­கா­கவே புதிய எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் உள்­ளூ­ராட்சி சபை­களின் உறுப்­பி­னர்கள் எண்­ணிக்­கையை 50 வீதத்தால் குறைப்­ப­தைத் ­த­விர்த்து 1/3 வீதத்தால் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் அதன் அடிப்­ப­டையில் எல்லை நிர்­ண­யத்தை மேற்­கொள்­ளும்­ப­டியும் பிர­த­ம­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கிறோம்.

2/3 பிர­தி­நி­தித்­துவம் உள்­வாங்­கப்­படும் வகையில் எல்லை நிர்­ணயம் அமைந்தால் இப்­பி­ரச்­சி­னைக்கு ஓர­ளவு தீர்வு காணலாம். அத்­தோடு வட்­டார மற்றும் விகிதா­சார அடிப்­ப­டை­யி­லான கலப்பு முறை­யி­லன்றி பழைய தேர்தல் முறையின் கீழ் (விகி­தா­சா­ர­முறை) உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­தும் ­படியும் கோரி­யுள்ளோம்.

எல்­லை­நிர்­ணயம் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எல்லா சமூ­கங்­க­ளுக்கும் நியாயம் கிட்டும் வகையில் அமைய வேண்டும் என்றார்.

இத­னி­டையே, மேல் மற்றும் தென் மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி எல்லை நிர்­ண­யத்தில் பல்­வேறு குறை­பா­டுகள் நில­வி­யுள்­ள­மையை சுட்­டிக்­காட்டி ஆணைக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பிர் எஸ்.எம்.மரிக்கார் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சிறு­பான்மை பிர­தி­நி­தித்­துவம் கேள்­விக்­கு­றியாகும் விதத்தில் அமைந்­துள்­ள­தா­கவும், இரட்டை பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாது செய்­துள்­ள­தா­கவும் குறித்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.