சாரா: சூத்திரதாரியை காக்கும் 3 ஆவது DNA அறிக்கை

0 247

எம்.எப்.அய்னா

‘பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்­தி­ருப்­பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்­கினான்.

சிறிது நேரத்தில் நான் இருந்த அந்த அறையில் பெண் ஒருவர் நின்­று­கொண்­டி­ருப்­பதை கண்டேன். அவ­ரது உடைகள் சிறிது எரிந்­தி­ருந்­தது. நான் யார் இருக்­கின்­றீர்கள் என தமிழில் கேட்டேன். 5 நிமி­டங்­களில் அந்த பெண்ணை காண­வில்லை. தோற்­றத்தில் அந்த பெண் உய­ர­மா­னவள். அத்­துடன் கொழுத்­தவர். ரில்­வானின் மனைவி மெலிந்­தவர். சாரா, நப்னா, அப்ரின் ஆகி­யோரின் குரல்கள் ஒரே ­மா­தி­ரி­யாக இருக்கும். நான் நினைக்­கின்றேன் நின்­று­கொண்­டி­ருந்த அந்த பெண் சாரா.’

இது சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் கிராம வீட்­டுக்குள் நடந்த வெடிப்பு சம்­ப­வத்தை தொடர்ந்து உயிர் தப்­பிய சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதியா விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கிய வாக்கு மூலங்­களில் அடங்­கி­யுள்ள ஒரு சிறு பகு­தி­யாகும்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்­த­ம­ருது வீட்டில் சாரா இருந்தார் என்பதற்­கான ஒரே கண்­கண்ட சாட்­சி­யாளர் ஹாதியா தான். அதே போல அவ­ரது வாக்கு மூலமே சாரா உயி­ரி­ழக்­க­வில்லை என்­ப­தற்­கான முக்­கிய சாட்­சி­யமும் கூட. ஆனால், அரச தரப்பு, ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் ஒரு பகு­தியை ஏற்றுக் கொள்­வ­துடன் (சாரா இருந்­த­மையை), அவர் தப்­பி­யதை ஏற்க மறுக்­கின்­றனர்.

அதன் விளைவே, சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களில், சம்­பவ இடத்தில் சாராவின் டி.என்.ஏ. வையும் இருக்­க­வில்லை என உறு­தி­யாகி, அது ஹாதி­யாவின் வாக்கு மூலத்­து­டனும் ஒத்துப் போன பின்­ன­ணியில், 2 ஆம் 3 ஆம் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டமை ஆகும்.

2 ஆவது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளிலும் சாரா சாய்ந்­த­ம­ருது வெடிப்புச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­மைக்­கான எந்த சான்­று­களும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால், மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களில் சாரா உயி­ரி­ழந்­த­மையை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக அறிக்கை கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி மாலை 6.40 மணிக்கு உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை ஒன்­றூ­டாக பொலிஸ் திணைக்­களம் ஊட­கங்­க­ளுக்கு இந்த விட­யத்தை அறி­வித்­தது.

சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வு­களில், சாரா ஜெஸ்­மினின் தாயா­ரான ராஜ­ரத்னம் கவி­தா­விடம் இருந்து பெற்­றுக்­கொண்ட டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் , 2019 ஏப்ரல் 26 சாய்ந்­த­ம­ருது வெலி­வே­ரியன் கிரா­மத்தின் வீடொன்­றுக்குள் நடந்த வெடிப்­பினை அடுத்து அங்­கி­ருந்து எடுக்­கப்­பட்ட எலும்புத் துண்­டுகள் பல­வற்றின் டி.என்.ஏ. மாதி­ரிகள், தாய் ஒரு­வ­ருக்கும் பிள்­ளைக்கும் இடையே காணப்­படும் உயி­ரியல் தொடர்­பினை உறு­திப்­ப­டுத்தும் சான்­றாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்ட எலும்புத் துண்­டு­களில் காணப்­பட்ட டி.என்.ஏ. கூறு­களை வைத்து பார்க்கும் போது, ராஜ­ரத்னம் கவிதா ( சாராவின் தாய்),அந்த எலும்­பு­க­ளுக்கு சொந்­தக்­கா­ரரின் தாயாக இருப்­ப­தற்கு 99.9999 வீத வாய்ப்­புள்­ள­தாக அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வாளர் அறிக்கை அளித்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.

அதன்­படி 2019 ஏப்ரல் 26 அன்று, சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தில் சாரா இறந்­தமை உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், அது குறித்து நீதி­மன்­றுக்கு அறி­விக்க சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் அடுத்­து­வரும் நாட்­களில் நட­வ­டிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொது­வாக டி.என்.ஏ. அறிக்­கைகள் விசா­ர­ணை­யா­ளர்­களால் நேர­டி­யாக நீதி­மன்­றங்­க­ளுக்கே சமர்ப்­பிக்­கப்­படும். ஊட­கங்­க­ளுக்கு அது தொடர்பில் அறி­வித்தல் வழங்­கப்­ப­டு­வது கிடை­யாது. சாராவின் முதல் இரு டி.என்.ஏ. பரி­சோ­தனை அறிக்­கைகள் கூட நேர­டி­யாக நீதி­மன்­றத்­துக்கே சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 4 வரு­டங்கள் நிறை­வ­டையும் தினம் நெருங்கிக் கொண்­டி­ருக்க, திடீ­ரென சாரா உயி­ருடன் இல்லை என கூறு­வதை, குண்டுத் தக்­கு­தலால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரோ, சுயா­தீ­ன­மாக பார்ப்­போரோ ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்.

முதல் டி.என்.ஏ. அறிக்கை பிர­கா­ரமும், 2 ஆவது அறிக்கை பிர­கா­ரமும் சாரா சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தில் உயி­ரி­ழக்­க­வில்லை என தெளி­வாக தெரிந்தும், அதனை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக கண்­கண்ட சாட்­சியம் இருந்தும் 3 ஆவது டி.என்.ஏ. பரி­சோ­த­னைக்கு விசா­ர­ணை­யா­ளர்கள் சென்­றது ஏன் என்ற கேள்வி எழு­கின்­றது.

அதே போல, இந்த 3 டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களும் ஒரே நிறு­வ­னத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டவை. முதல் அறிக்­கையில் சந்­தேகம் இருப்பின் 2,3 ஆவது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை வெவ்­வேறு நிறு­வ­னங்கள் ஊடாக செய்­தி­ருக்­கலாம். ஆனால் அப்­படி நடக்­க­வில்லை. அவ்­வாறு எது­வுமே நடக்­காது, ஒரே நிறு­வ­னத்தில், சாதா­ரண பரி­சோ­தனை முறை­களின் கீழ் இந்த 3 டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­மை­யையே அவ­தா­னிக்க முடி­கின்றது.

இது பரீட்சை ஒன்றில் சித்தி எய்த தவறும் மாணவன் ஒருவன், சித்தி எய்தும் வரை அடுத்­த­டுத்து அதே பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்கு சம­னாகும். அப்­ப­டி­யானால், சாரா உயி­ருடன் இல்லை என்­பதை நிரூ­பிக்க யாரோ ஒரு­வ­ருக்கு தேவை இருந்­துள்­ளது. அதன் பிர­தி­ப­லனே, டி.என்.ஏ. மற்றும் கண்­கண்ட சாட்­சி­யங்கள் இருக்­கையில் இவ்­வாறு சாரா தொடர்பில் அடுத்­த­டுத்து டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருந்த பயங்­க­ர­வா­திகள், பாது­காப்பு படை­க­ளு­ட­னான மோத­லி­னி­டையே குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக பொலிஸ் தரப்பு அறி­வித்­தது.
இதன்­போது அங்கு மொத்­த­மாக 19 பேர் இருந்­த­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் சஹ்­ரானின் மனை­வியும் அவ­ரது ஒரு குழந்­தையும் உயி­ருடன் மீட்­கப்­பட்­டனர் ( வெடிப்பு நடக்கும் போது அங்கு இருந்தோர் தொடர்­பிலும் ஹாதி­யாவின் சாட்­சி­யமே கண்­கண்ட ஒரே சாட்­சி­யாகும்). எனினும் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஸ்தல பரி­சோ­த­னை­களின் போது அடை­யாளம் காணப்­பட்ட உடற்­பா­கங்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களின் போது, 16 சட­லங்­களே அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்­தன.

இந் நிலை­யி­லேயே அங்­கி­ருந்த சாரா எனும் பயங்­க­ர­வாதி தப்­பித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. முதல் இரு டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளிலும் சாரா இறந்­த­மையை உறுதி செய்ய முடி­யாமல் போன நிலையில், மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­தனை முன்­னெ­டுக்­கப்­பட்டு தற்­போது சாராவின் மரணம் உறுதி செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே சாரா, இறந்­து­விட்டார் என பொலிஸ் திணைக்­களம் கூறும் விட­யத்தை ஏற்­றுக்­கொள்ள, பாதிக்­கப்­பட்ட தரப்­பினர், அதா­வது கத்­தோ­லிக்க சமூ­கமும், முஸ்லிம் சமூகம் உள்­ளிட்ட இந்த நாட்டில் பெரும்­பா­லா­ன­வர்கள் தயா­ராக இல்லை. இது குற்­ற­வியல் விசா­ரணை தொடர்பில் பொது மக்­க­ளி­டையே பாரிய சந்­தே­கங்­களை தற்­போது தோற்­று­வித்­துள்­ளது. வழ­மை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால் சென்று முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தொடர்பில் தற்­போது மிகப் பெரும் சந்­தேகம் உரு­வா­கி­விட்­டது.

அதன் வெளிப்­பாடே, கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் சிறில் காமினி அருட் தந்தை போன்­ற­வர்கள் ஊட­கங்கள் முன் பகி­ரங்­க­மா­கவே இதனை விமர்­சனம் செய்­துள்­ளனர். அத­னை­விட சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் அவர்கள் கோரு­கின்­றனர்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்தில் சாராவின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­னது என்­பது விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மிகப் பெரும் உண்­மை­யாகும்.

தற்­கொலைக் குண்­டு­களை தயா­ரித்­தமை முதல், திட்­ட­மிடல் நட­வ­டிக்கை, அதன் பின்­ன­ரான விட­யங்­களில் சாரா மிக முக்­கிய நப­ராக செயற்­பட்­ட­தாக சான்­றுகள் உள்­ளன. இதனால், சாரா இந்­திய உளவுச் சேவையின் உறுப்­பி­னரா ( டபள் ஏஜன்ட்) என்ற நியா­ய­மான சந்­தே­கமும் இன்­று­வரை தொடர்­கின்­றது.

சாரா உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான அனைத்து விடயங்­க­ளையும் அறிந்­தி­ருந்த நபர் என்ற ரீதியில், சாராவின் சாட்­சியம் உண்­மை­களை வெளி­ப்ப­டுத்த மிக முக்­கி­ய­மா­னது.

எனவே சாரா உயி­ருடன் இருந்தால், உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி, பின்­னணி உள்­ளிட்ட எல்லா விட­யங்­களும் அம்­ப­ல­மா­கி­விடும். எனவே தான் சாரா உயி­ருடன் இல்லை எனக் கூறி விசா­ர­ணை­களை முடி­வுக்கு கொண்­டு­வர முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கமும் எழு­கின்­றது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.