மறுசீரமைப்புக்குள்ளாகும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு

0 208

இலங்கை முஸ்­லிம்­களின் கல்விப் பிரச்­சி­னை­களை அரச மட்­டத்தில் கலந்­து­ரை­யாடி தீர்­வு­களை பெறும் நோக்கில் 1964 இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன் ஆரம்பத் தலைவர் ஷாபி மரிக்கார் அவர்­களின் காலத்தில் பல கல்விப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டதை நாம் அறிவோம். அவரின் மறைவை தொடர்ந்து பேரா­சி­ரியர் ஹுஸைன் இஸ்­மாயில் மற்றும் பேரா­சி­ரியர் எம். எஸ். எம். அனஸ் ஆகி­யோர்­களின் தலை­மையில் பல காத்­தி­ர­மான கல்­விப்­ப­ணி­களை மேற்­கொண்­டது.

பேரா­சி­ரியர் ஹுஸைன் இஸ்­மாயில் காலஞ்­சென்­றதைத் தொடர்ந்து பேரா­சி­ரியர் அனஸ் அவர்­களும் வெளி­நாடு சென்­று­விட்ட நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல், கொவிட் 19 அனர்த்தம், பொரு­ளா­தார நெருக்­கடி போன்ற கார­ணங்­களால் கல்வி மாநாட்டின் நட­வ­டிக்­கை­க­ளில் தொய்­வு­நிலை ஏற்­பட்­டதை அறிவோம்.

சமூகம் வேண்டி நிற்கும் பல கல்விப் பணி­களை மீண்டும் ஆரம்­பிக்கும் நோக்கில் கலந்­து­ரை­யா­டிய நிர்­வாக உறுப்­பி­னர்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான ஒரு குழுவை நிய­மித்­துள்­ளனர். ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம். ரிழ்வான் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட இக்­கு­ழுவில் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி ரசீத் எம் இம்­தியாஸ், உப­த­லைவர் மூத்த ஊட­க­வி­ய­லாளர் என். எம். அமீன், ஓய்­வு­பெற்ற அதிபர் எம். ஐ. எஸ். ஹமீத், கே. எம். ஏ. ஹஸன், எம். ஏ. எம் நுஸ்கி, ஏ. அபூ­உ­பைதா எம்.எச். எம்.ஹஸன் ஆகிய நிர்­வாக உறுப்­பி­னர்­களும் இடம்­பெற்­றுள்­ளனர்.

கல்­வி­யா­ளர்கள், துறை சார்ந்­த­வர்கள், கல்­வியில் ஆர்வம் கொண்­ட­வர்கள், கல்­வித்­துறை உயர் உத்­தி­யோ­கத்­தர்கள் போன்­றோரை அழைத்து ஒரு பேராளர் மகா­நாட்டை கூட்டி புதிய நிர்­வா­கி­களை தெரிவு செய்யும் நோக்கில் இக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. ரம­ழானின் பின்னர் இன்ஷா அல்லாஹ் இக்­கூட்டம் நடை­பெறும். ஆர்­வ­முள்­ள­வர்கள் இக்­கூட்­டத்தில் இணைந்து கொள்ள இதன் இணைப்­பாளர் ஒய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம். எம் ரிழ்வான் அவர்களுடன் தொலைபேசியூடாக அல்லது WhatsApp ஊடாக தொடர்பு கொள்ளவும் தொலைபேசி இலக்கம் 0778787172.

  • VIdivelli

Leave A Reply

Your email address will not be published.