சாரா ஜெஸ்மின் மரணித்துவிட்டார் டிஎன்ஏ உறுதி செய்வதாக கூறுகிறது பொலிஸ்

0 174

( எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா ஜெஸ்மின் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக பொலிஸ் திணைக்­களம் நேற்று (29) உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ இதனை விடி­வெள்­ளி­யிடம் உறுதி செய்தார்.

சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வு­களில், சாரா ஜெஸ்­மினின் தாயா­ரான ராஜ­ரத்னம் கவி­தா­விடம் இருந்து பெற்­றுக்­கொண்ட டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் , 2019 ஏப்ரல் 26 சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் கிரா­மத்தின் வீடொன்­றுக்குள் நடந்த வெடிப்­பினை அடுத்து அங்­கி­ருந்து எடுக்­கப்­பட்ட எலும்புத் துண்­டுகள் பல­வற்றின் டி.என்.ஏ. மாதி­ரிகள் தாய் ஒரு­வ­ருக்கும் பிள்­ளைக்கும் இடையே காணப்­படும் உயி­ரியல் தொடர்­பினை உறு­திப்­ப­டுத்தும் சான்­றாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்ட எலும்புத் துண்­டு­களில் காணப்­பட்ட டி.என்.ஏ. கூறு­களை வைத்து பார்க்கும் போது, ராஜ­ரத்னம் கவிதா (சாராவின் தாய்),அந்த எலும்­பு­க­ளுக்கு சொந்­தக்­கா­ரரின் தாயாக இருப்­ப­தற்கு 99.9999 வீத வாய்ப்­புள்­ள­தாக அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வாளர் அறிக்கை அளித்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.

அதன்­படி 2019 ஏப்ரல் 26 அன்று, சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தில் சாரா இறந்­தமை உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், அது குறித்து நீதி­மன்­றுக்கு அறி­விக்க சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் அடுத்­து­வரும் நாட்­களில் நட­வ­டிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­­பப்படும் , சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை கடந்த 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன.

கல்­முனை நீதி­வா­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய இவ்­வாறு உடற்­பா­கங்கள், அம்­பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்­ம­கீர்த்தி முன்­னி­லையில் இவ்­வாறு தோண்டி எடுக்­கப்­பட்­டன.

இதற்கு முன்னர் குறித்த உடற்­பா­கங்கள் தொடர்பில் பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்த சட்ட வைத்­திய அதி­கா­ரிகள், இவ்­வி­வ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அனைத்து பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­கள அதி­கா­ரி­களும் இந் நட­வ­டிக்­கையின் போது பங்­கேற்­றி­ருந்­தனர்.

பலத்த பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந் நட­வ­டிக்­கையின் போது, அம்­பாறை மாந­கர சபையின் பெக்கோ இயந்­திரம் கொண்டு புதைக்கப்­பட்ட இடம் மீள தோண்­டப்­பட்ட நிலையில், அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் சட்ட வைத்­திய அதி­கா­ரி­களின் வழி நடாத்­தலில் உடற் பாகங்கள், கறுப்பு நிற பாது­காப்பு பைக­ளுடன் எடுக்­கப்­பட்­டது.

பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­துடன், தற்­போது உடற்­பா­கங்கள் அம்­பாறை பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரின் ( சொகோ) பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பொலிஸ் ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றன. இந் நிலை­யி­லேயே இந்த உடற் பாகங்கள் மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருந்த பயங்­க­ர­வா­திகள், பாது­காப்பு படை­க­ளு­ட­­னான மோத­லி­னி­டையே குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது அங்கு மொத்­த­மாக 19 பேர் இருந்­த­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் சஹ்­ரானின் மனை­வியும் அவ­ரது ஒரு குழந்­தையும் உயி­ருடன் மீட்­கப்­பட்­டனர்.
எனினும் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஸ்தல பரி­சோ­த­னை­களின் போது அடை­யாளம் காணப்­பட்ட உடற்­பா­கங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது, 16 சடலங்களே அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே அங்கிருந்த சாரா எனும் பயங்கரவாதி தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

முதல் இரு டி.என்.ஏ. பரிசோதனைகலிலும் சாரா இருந்தமையை உறுதி செய்ய முடியாமல் போன நிலையில், மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தற்போது அவரது மரணம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.