ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு

பேரினவாத நிகழ்ச்சி நிரலின் விஸ்தரிப்பா?

0 196

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தொன்று தொட்டு “ஏறாவூர் புன்­னைக்­குடா வீதி” என புழக்­கத்­தி­லி­ருந்து வரும் புன்­னைக்­குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்­கம” வீதி என சிங்­களப் பெய­ராக மாற்­று­வ­தற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் உத்­த­ர­விட்­டுள்­ளது பிர­தே­சத்தில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளது.

ஆளு­நரின் உத்­த­ரவு வெளி­யா­னதை அடுத்து ஏற்­கெ­னவே ஏறாவூர் நகரை ஊட­றுத்துச் செல்லும் கொழும்பு – மட்­டக்­க­ளப்பு நெடுஞ்­சா­லையின் இரு மருங்­கிலும் அறி­வித்­த­லாக அமைக்­கப்­பட்­டி­ருந்த புன்­னைக்­குடா வீதி என்ற பெயர்ப் பலகை அகற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.
இந்த அறி­வித்தல் வெளி­யாகி ஏறா­வூரில் பதற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தற்­போ­தைய சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரு­மான நஸீர் அஹமட் ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதில் ‘‘பாரம்­ப­ரி­ய­மாக புன்­னைக்­குடா வீதி என இருந்து வரும் பெயர் மாற்­றம்­பெ­றாது. பெயர் மாற்ற செயற்­பா­டு­களை உடன் நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இத்­திடீர் பெயர்­மாற்ற செயற்­பா­டா­னது கண்­டிக்­கத்­தக்­க­தோடு ஆளு­நரின் அதி­கார எல்­லையை மீறும் செயற்­பா­டாகும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொள்­வதை ஆளுநர் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்.” என்று தெரி­வித்­தி­ருந்தார்.
கொழும்பு – மட்­டக்­க­ளப்பு நெடுஞ்­சா­லையில் ஏறாவூர் நக­ரி­லி­ருந்து சுமார் 5.23 கிலோ­மீற்றர் தூரத்தில் புன்­னைக்­குடாக் கடல் அமைந்­தி­ருக்­கி­றது. இது வங்­காளக் கடல் பகு­தி­யாகும். ஆங்­கி­லேயர் காலத்­திற்கு முன்­பி­ருந்தே பூர்­வீ­க­மாக இந்த வீதி புன்­னைக்­குடா வீதி என்றே அழைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. புன்னை மரங்கள் அங்கு அதி­க­மி­ருந்­ததால் இது காரணப் பெய­ரா­கி­யுள்­ளது. புன்­னைக்­குடா வீதி ஏறாவூர் நகர், ஐயங்­கேணி, அப்துல் மஜீத் மாவத்தை, அத்­துப்­பிட்டி, தளவாய் ஆகிய முஸ்லிம் தமிழ்க் கிரா­மங்­களை ஊட­றுத்துச் செல்­கின்­றது.

ஏறாவூர் நகர பிர­தேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூ­கத்தைக் கொண்­ட­மைந்­தி­ருந்­த­போதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த எவ­ரி­னதும் பெயரைச் சூட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால், திடீ­ரென தென்­ப­குதி காலிப் பிர­தேச சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளு­ந­ருக்கு ஒரு கடி­தத்தை எழு­தி­யுள்­ளனர். அதில் ஏறாவூர் புன்­னைக்­குடா வீதிக்கு “எல்விஸ் வல்­கம வீதி” என பெயரை மாற்­று­மாறு கோரி­யுள்­ளனர்.

அந்த வேண்­டு­கோளை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஆளுநர் இறங்கி உத்­த­ர­வையும் பிறப்­பித்­துள்ளார்.

காலியைச் சேர்ந்த சிங்­கள சமூ­கத்­தவர் அந்த 9 பேரும் விடுத்­துள்ள வேண்­டு­கோளில் “காலி தல்பே கிரா­மத்தில் பிறந்து தனது 12வது வயதில் ஏறா­வூ­ருக்குப் போய்ச் சேர்ந்து அங்கே வர்த்­தகம் செய்து நில­பு­லன்­க­ளையும் வாங்­கி­ய­துடன் இன்னும் பல சேவை­களைச் செய்த “எல்விஸ் வல்­கம” அவர் காலியின் பெரு­மைக்­கு­ரிய புதல்­வ­னாவார். எனவே அவ­ரது பெயரை ஏறாவூர் புன்­னைக்­குடா வீதிக்குச் சூட்ட உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஆளு­நரைக் கேட்டுக் கொள்­கிறோம் என்று எழு­தப்­பட்­டுள்­ளது.

ஆளுநர் ஏற்­கெ­னவே ஏறாவூர் பொதுச் சந்­தையை “ஏறாவூர் சிங்­களச் சந்தை” எனக் குறிப்­பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்­ததும் அது ஆளு­ந­ரது உத்­தி­யோக பூர்வ வலைத் தளத்தில் வெளி­யாகி பெருத்த சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­ய­வுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிர­யோ­கத்தை மாற்றிக் கொண்­டதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் மக்கள் பிர­தி­நி­திகள் இல்­லாத மாகாண சபை நிரு­வாகக் காலத்­திலும் உள்­ளூராட்சி மன்ற நிரு­வாகம் கலைக்­கப்­பட்­டி­ருக்கும் தறு­வா­யிலும் சந்­தர்ப்­பத்தைப் பார்த்து கிழக்கு மாகாண ஆளு­நரின் நட­வ­டிக்­கை­ககள் முற்­று­மு­ழு­வ­து­மாக சிங்­கள பேரி­ன­வாத அமுல்­ப­டுத்­தலை மையப்­ப­டுத்­தி­ய­தாக இடம்­பெற்று வரு­வ­தாக அதி­ருப்தி தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளு­நர்­க­ளாக படை அதி­கா­ரிகள் மற்றும் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­தோரே நிய­மிக்­கப்பட்­டி­ருந்­த­போதும் தற்­போ­தைய ஆளு­நரைப் போன்று அவர்கள் நேர­டி­யான சிங்­கள மய­மாக்­கலை நோக்கி செயற்­ப­ட­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது விட­ய­மாக ஏறாவூர் நகர பிர­தேச செய­லாளர் ஏறாவூர் நகர சபைச் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில், ஏறாவூர் புன்­னக்­குடா வீதி “எல்மிஸ் வல்­கம” வீதி எனப் பெயர் மாற்றல். வீதி அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­தினால் எமக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடிதம் சார்­பாக ஏறாவூர் புன்­னக்­குடா வீதி­யினை “எல்மிஸ் வல்­கம” வீதி என பெயர் மாற்றம் செய்தல் தொடர்­பாக ஆளுநர் அலு­வ­லகம் மற்றும் ஏனைய திணைக்­க­ளங்­களின் கடிதப் பிர­திகள் தங்­க­ளது மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்காக இத்­துடன் இணைத்து அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றது என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் மற்றும் திட்­ட­மிடல் பணிப்­பாளர் ஆகி­யோரால் வீதி அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் ஏறாவூர் நகரப் பிரிவில் “எல்மிஸ் வல்­கம” என பெயர் மாற்றம் தொடர்­பாக தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

இதில் விநோதம் என்­ன­வென்றால் கிழக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்சும் வீதி அவி­பி­ருத்தித் திணைக்­க­ளமும் உள்­ளூ­ராட்சி மாகாண நிரு­வா­கமும் என்று பல பொறுப்­புக்கள் ஆளு­நரின் கீழேதான் வரு­கி­றது. ராஜாவும் நானே மந்­தி­ரியும் நானே என்ற அதி­காரத் தோர­ணையில் ஆளுநர் தனது இன­வாத வரி­வாக்கல் திட்­டத்தை தக்க தருணம் பார்த்து சாதித்து வரு­கிறார் என்று சிறு­பான்­மை­யினர் அதி­ருப்தி வெளி­யி­டு­கின்­றனர்.
நீண்ட நாள் தொட்டே இந்தப் புன்­னைக்­கு­டாவைக் கைப்­பற்ற வேண்டும் என்ற ஒரு கழுகுப் பார்வை பேரி­ன­வா­தி­க­ளிடம் இருந்து வந்­துள்­ள­தாக நோக்­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அந்த வகையில் 80களில் அந்­நே­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் கிராம அபி­வி­ருத்தி அமைச்­ச­ரா­க­வி­ருந்த கே. டபிள்யூ தேவ­நா­யகம் புன்­னைக்­குடா மீனவர் கிரா­மத்தில் 100 வீடு­களை அமைத்தார். ஆனால் கடைசி நேரத்­தில்தான் அந்த வீடுகள் வெளி மாவட்­டத்­தி­லி­ருந்து சிங்­க­ள­வர்­களைக் கொண்டு வந்து குடி­ய­மர்த்­து­வ­தற்­காக அமைக்­கப்­ப­டு­கி­ற­தென்று தெரிந்­தது.

இதனை அறிந்­ததும் மாவட்ட அபி­வி­ருத்தி சபைக் கூட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­யாக இருந்த டொக்டர் பரீட் மீரா­லெப்பை கடு­மை­யாக எதிர்த்துக் குர­லெ­ழுப்­பினார். கடு­மை­யான வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன. பரீட் மீரா­லெப்பை தனி­யொரு ஆளாகத் துணிந்து நின்று எதிர்த்தார். பரீட் மீரா­லெப்­பைக்குப் பக்க பல­மாக தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பட்­டி­ருப்புத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பூ. கணே­ச­லிங்கம் இருந்தார். தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் மாவட்ட அபி­வி­ருத்தி சபை உறுப்­பினர் அல்பேர்ட் சீவ­ரெட்­டணம் ஆகி­யோரும் பரீட் மீரா­லெப்­பைக்கு ஆத­ர­வாகக் குர­லெ­ழுப்­பி­னார்கள்.

பரீட் மீரா­லெப்பை முன்­மொ­ழிய கணே­ச­லிங்கம் வழி­மொ­ழிந்து வெளி மாவட்ட சிங்­க­ள­வர்­க­ளுக்கு தனி வீட்டுத் திட்டம் வழங்­கப்­ப­டு­வதைக் கண்­டித்தும் அவ்­வாறு வழங்­கப்­படக் கூடாது என்றும் அந்த வீட்டுத் திட்டம் உள்ளூர் மீன­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்த எதிர்ப்பால் வெளி மாவட்டச் சிங்­க­ள­வர்­க­ளுக்கு வீட்டுத் திட்­டத்தைக் கொண்டு வந்த ஐதேக அரசின் அமைச்­ச­ரான அமைச்சர் கே.டபிள்யூ. தேவ­நா­ய­கமும் மற்­றொரு அமைச்­ச­ரான செல்­லையா இரா­ஜ­து­ரையும் மௌனித்­தனர்.

“புன்­னைக்­கு­டாவில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு தனி வீட்டுத் திட்டம் ; பரீட் மீரா­லெப்பை போர்க் கொடி” என பத்­தி­ரி­கை­களில் பிர­தான தலைப்புச் செய்­தி­யாக அது வெளி­வந்­தி­ருந்­தது.
பின்­னாட்­களில் படை­யினர் முகாம் அமைக்­கலாம் என்­பதால் ஆயுதப் போராட்ட அமைப்­புக்­க­ளினால் அந்த வீட்டுத் திட்டம் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது.

அந்த வீட்டுத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் இப்­பொ­ழுது மட்­டக்­க­ளப்பு சிங்­கள மய­மா­கி­யி­ருக்கும் என்று கரு­து­வோரும் உள்­ளனர்.

அவ்­வாறு அந்தக் கால கட்­டத்தில் நடந்த நிகழ்வை உற்றுக் கவ­னித்து இந்த வேளையில் டொக்டர் பரீட் மீரா­லெப்­பையை தமிழ் பேசும் மக்கள் நினைவு கூர்­கின்­றனர்.
மக்கள் பிர­தி­நி­திகள் இல்­லாத மாகாண சபையை வைத்துக் கொண்டும் உள்­ளூ­ராட்சி மன்ற நிரு­வா­கங்கள் கலைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற வேளை­யி­லு­மாகப் பார்த்து ஆளுநர் தன்­னிச்­சை­யான முடி­வு­களைத் திணித்து அமுல்­ப­டுத்­து­வ­தா­னது இன­வாத அடிப்­ப­டை­யி­லாகும் என்று விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

ஆளு­நரின் நட­வ­டிக்­கைகள் அவ்­வாறே அமைந்­துள்­ள­தாக அவ­தா­னிப்­பா­ளர்கள் கரு­து­கின்­றனர். மட்­டக்­க­ளப்பு நகரில் சிங்­கள மக்கள் வசிக்­காத நிலை­யிலும் சிங்­கள மகா­வித்­தி­யா­ல­யத்தைத் திறக்க நட­வ­டிக்கை எடுத்து சிங்­கள மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு வாருங்கள் எனத் துண்டுப் பிர­சு­ரங்­களை ஒட்டி அழைப்பு விடுத்தும் எவரும் அங்கு செல்­ல­வில்லை.

அதே­வேளை மாத­வனை மயி­லத்­த­மடு மேய்ச்சல் தரைப் பிரச்­சி­னையில் தலை­யிட்டு அது மகா­வலி அபி­வி­ருத்திக் காணி என்று அடை­யா­ளப்­ப­டுத்தி அங்கு சிங்­கள மக்­களை அழைப்­பித்துப் பயிர்ச் செய்­கைக்கு காணி வழங்­கி­யமை, மாகாண சபையை நிரு­வாக மட்­டத்தில் சிங்­கள மய­மாக்­கு­வதில் கரி­சனை இவ்­வாறு ஆளு­நரின் பலப்­பல விட­யங்­களை அவ­தா­னிப்­பா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

உள்­ளூ­ராட்சி மன்ற சட்ட விதி­க­ளின்­படி தெரு­வுக்கு பெய­ரி­டு­வ­தென்றால் அது­பற்­றிய விவரம் பொது­மக்­க­ளுக்கு பொது இடங்­களில் அறி­வித்தல் இடப்­பட்டு மக்­களின் கருத்­துக்கள் பெறப்­பட வேண்டும். ஆட்­சே­ப­னைகள் இருந்தால் குறித்த பெயர் வைத்தலைச் செய்ய முடியாது. ஆனால் இவ்வாறான உள்ளூராட்சி சபையின் சட்ட விதிகளையும் மீறி ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆளுநர் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கானவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தபோதும் ஆளுநரின் நடவடிக்கைகள் தனிச் சிங்கள இனம் சார்ந்ததாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஜனாதிபதி நல்லிணக்கத்திற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு ஆளுநரின் நடவடிக்கைகள் குந்தகமாக அமைந்திருக்கின்றன என்பதை நடப்பு நிகழ்வுகள் குறிப்புணர்த்துகின்றன.
காலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான, தென் பகுதிச் சிங்களவர்கள் கருதும் பெருமகனைக் கௌரவிப்பதற்கு மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் பேசும் சமூகத்தார் ஒருபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் இனவாத நோக்கில் பேரினவாத பரம்பலை மையப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் திட்டங்களையே தாம் எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்னும் எத்தனையோ திட்டங்கள் இருக்கலாம் அதனைக் காலம் உணர்த்தி நிற்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.