முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவனை கோட்டை விட்ட பொலிஸ்!

0 363

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்­வெல்லை நகரில் துப்­பாக்­கிச்­சூடு மேற்­கொள்­ளப்­பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்­பவம் நாட்டில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு 10.10 மணி­ய­ளவில் முகத்தை மாஸ்க்­கினால் மறைத்­துக்­கொண்டு தலைக்­க­வசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தாரி மேற்­கொண்ட துப்­பாக்­கிச்­சூட்டில் ஹங்­வெல்லை நகரில் ஹோட்டல் ஒன்­றினை நடத்­திவந்த 46 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான முஹம்­மது பர்சான் கொலை செய்­யப்­பட்டார். இத்­துப்­பாக்­கிப்­பி­ர­யோக சம்­பவம் சி.சி.ரி.வி காணொ­ளி­களில் மிகத் தெளி­வாக பதி­வா­கி­யி­ருந்­தது.

முஹம்மது பர்சான் ஹங்­வெல்லை பொலிஸ் நிலை­யத்தின் சிவில் பாது­காப்பு குழுவின் அங்கத்­தவர். கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் இவ­ரது சகோ­தரர் ஒரு­வர்­ மீது மீது கூரிய ஆயு­தங்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. வீடு புகுந்து அத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்த போதும் பொலிஸ் ­புத்­த­கங்­களில் வீட்­டுக்குள் திருட வந்­த­வர்­க­ளுடன் போரா­டி­யதில் அவர் வெட்­டுக் ­கா­யங்­க­ளுக்­குள்­ளா­ன­தா­கவே பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இச்­சம்­ப­வத்தைத் தொடர்ந்து சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் பர்சான் தனது ஒத்­து­ழைப்பை பொலி­சா­ருக்கு வழங்­கி­யி­ருந்தார். குறித்த சந்­தேக நபர்கள் டுபா­யி­லி­ருந்து ஹங்­வெல்­லையின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற நினைக்கும் பாதாள உல­கத்­த­லைவன் ஒரு­வனின் கீழ் செயற்­பட்ட நபர்­க­ளாவர்.

டிசம்பர் 18 ஆம் திகதி பர்­சானின் ஹோட்­ட­லுக்கு மோட்டார் சைக்­கிளில் வந்த இரு­வரில் ஒரு­வரே துப்­பாக்கிச் சூடு நடத்­தி­விட்டுத் தப்பிச் சென்­றுள்­ளார்.

ஹங்­வெல்லை நகரில் வர்த்­த­கர்­களை அச்­சு­றுத்தி கப்­பம்­கோரும் நோக்கில் வந்­த­வர்­களை அச்­ச­ம­டையச் செய்ய டுபா­யி­லி­ருந்­த­வாறு ஹங்­வெல்­லையில் தம்மை சண்­டி­யர்­க­ளாக நிரூ­பிக்க முயலும் பாதாள உல­கத்­த­லை­வர்­க­ளான சமில மற்றும் லலித் என்­போரின் உத்­த­ரவின் கீழ் அந்தக் கொலை நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரிய வந்­தது.

இந்­நி­லையில் துப்­பாக்கிச் சூட்­டுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களைக் கைது செய்ய ஹங்­வெல்லை பொலி­ஸாரும் மேல்­மா­காண தெற்கு பிராந்­திய குற்­றத்­த­டுப்­புப்­பி­ரி­வி­னரும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

பர்­சானை கொலை செய்த சந்­தேக நபர்
விமான நிலை­யத்­தி­லி­ருந்து தப்­பி­யோட்டம்
ஹோட்டல் உரி­மை­யாளர் பர்சான் உட்­பட பல மனித படு­கொ­லைகள் மற்றும் பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட “ஹரக்­கடா” எனும் பாதாள உலக தலை­வ­னுடன் தொடர்­புள்ள ரவிது வர்ண ரங்கா என்­பவன் போலி­யான பெயரில் டுபாய் நாட்­டுக்கு தப்­பிச்­செல்ல கடந்த மாதம் 24 ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு வந்­தி­ருந்தான். பல்­வேறு கொலை­க­ளுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நப­ரான இவ­னுக்கு அவி­சா­வளை நீதி­மன்றம் வெளி­நாட்­டுப்­ப­ய­ணத்­தடை விதித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கதாகும்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு டுபாய் நோக்கி பய­ணிக்­க­வி­ருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல். 225 விமா­னத்­துக்­காக சந்­தேக நபர் காரில் வருகை தந்­துள்ளார். அவ­ருடன் பய­ணிப்­ப­தற்கு மேலும் ஒரு­வரும் வேறு காரில் விமான நிலை­யத்­துக்கு வருகை தந்­துள்ளார்.

பின்பு அவர்கள் இரு­வரும் விமான நிலைய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள கரு­ம­பீ­டத்­துக்குச் சென்­றுள்­ளனர். குறிப்­பிட்ட நப­ருக்கு வெளி­நாட்டு பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மையை அதி­கா­ரிகள் கணி­னியில் அறிந்­துள்­ளனர். அதனால் அவ­ரது பயண ஏற்­பா­டு­களை மறுத்த அதி­கா­ரிகள் இது தொடர்பில் விமான நிலைய பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிசார் அவரை அப்­போதே மாலை 6 மணி­ய­ளவில் கைது செய்து பொலி­ஸுக்கு அழைத்துச் சென்­றுள்­ளார்கள். பின்பு இரு மத­கு­ரு­மார்கள் விமான நிலை­யத்­துக்கு வருகை தந்து சந்­தேக நபரை விடு­விப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ள குறித்த நபர் தங்கள் பன்­ச­லைக்கு உத­வு­ப­வ­ரென்றும், ஓர் அப்­பா­வி­யென்றும் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரி­களின் தவ­று­ கா­ர­ண­மா­கவே கைது இடம் பெற்­றுள்­ள­தா­கவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.இதனையடுத்து சந்தேக நபரினது கைவிலங்கினை கழற்றிவிட்டு பொலிஸார் அவரை கதி­ரையில் அம­ரச் ­செய்­துள்­ளனர் என்­பது விசா­ர­ணை­க­ளி­லி­ருந்­து­தெ­ரிய வந்­துள்­ளது.

அத­னை­ய­டுத்து பெளத்த தேரர்கள் இரு­வரும் சூட்­சு­ம­மான முறையில் பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்த கொலை­யா­ளி­யுடன் தப்­பிச்­சென்­றுள்­ளனர். கைது செய்­யப்­பட்­டி­ருந்த நபர் பல கொலை­க­ளுடன் தொடர்­பு­டைய பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்­தவர் ஒருவர் என்­பதை அது­வரை பொலிஸார் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பது விசா­ர­ணை­க­ளின்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சில­காலம் கடற்­ப­டையில் கட­மை­யாற்­றிய குறிப்­பிட்ட குற்­ற­வாளி கடற்படை­யி­லி­ருந்தும் தப்­பி­யோ­டி­யவர் ஆவார். இவர் தனித்து 9 கொலைகளையும் வேறு நபர்­க­ளுடன் இணைந்து 10 கொலை­களையும் புரிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து அறி­யக்­கி­டைத்­துள்­ளது.

தப்­பி­யோட உடந்­தை­யாக
இருந்­த­தாக பொலிஸார் கைது
மேல் ­மா­கா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் வழி­காட்­டலின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட விசேட பொலிஸ் குழு பாதாள உலக கோஷ்டி கொலை­யா­ளி தப்­பி­யோ­டு­வ­தற்கு உடந்­தை­யாக இருந்­த­தாக குற்றம் சுமத்தி விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உட்­பட நான்கு அதி­கா­ரி­களைக் கைது செய்­தது.

கைது செய்­யப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் நால்­வரும் கடந்த 25 ஆம் திகதி நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இவர்­களில் செயற்­பாட்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­யாற்­றிய டப்ள்யூ.கே.சேனா­ரத்ன எதிர்­வரும் 3 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஜனக குமார சேனா­தீர மற்றும் பொலிஸ் கான்­ட­பிள்­க­ளான அனு­ஷ­பி­ரசாத், ஆர்.எஸ்.ரத்­நா­யக்க ஆகியோர் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதி­வா­னினால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் ஒழுக்­காற்று விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

தேரர்கள் இரு­வரும் கைது
பல மனிதப் படு­கொ­லை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரென கூறப்­ப­டு­ம் “பூரு முனா” என அழைக்­கப்­படும் ரவிது விமான நிலைய பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்தும் தப்பிச் செல்­வ­தற்கு உடந்­தை­யாக இருந்து செயற்­பட்ட பெளத்த தேரர்கள் இரு­வரும் கடந்த 27 ஆம் திகதி ஹெட்­டி­பொலை பெளத்த விகா­ரை­யொன்­றி­லி­ருந்து மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்பு பிரிவு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

கைது செய்­யப்­பட்ட தேரர் இரு­வரும் மேல்­மா­காண தெற்கு குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் நீர்­கொ­ழும்பு பிர­தேச குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர். நீர்­கொ­ழும்பு பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களைத் தொடர்­கின்­றனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஹெட்­டி­பொலை – ரிட்டாதெனிய ஸ்ரீ ஜயலங்காராம விகாரை அதிபதி பொத்தேவெல இன்தசார (38) மற்றும் திவுல் வெவே தீபாநந்த (40) ஆகியோராவர்.

இந்­நாட்டின் போதைப்­பொருள் வலை­ய­மைப்பின் தலை­வ­னெ­னக்­ கூ­றப்­படும் தற்­போது வெளி­நாட்­டுக்குத் தப்பிச் சென்­றுள்ள ரத்­கம விதுர என்­ப­வனின் பிர­தான சகா எனக்­கூ­றப்­படும் சந்­தேக நப­ரான ரவிது, வருண ரங்க என்ற போலி பெயரில் கடவுச் சீட்­டொன்­றினைத் தயா­ரித்து டுபாய் ­நாட்­டுக்கு தப்பிச் செல்­வ­தற்கே முயற்­சித்தார் என உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதே­வேளை கைது செய்­யப்­பட்­டுள்ள இரண்டு தேரர்­களை விமான நிலை­யத்­துக்கு வாக­னத்தில் அழைத்து வந்த சாரதி அபே­வெ­ல–­க­ளு­போ­வி­டி­ய­னவைச் சேர்ந்த கே.டப்­ளியூ.ஏ.திலான் (27) என்­ப­வரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.