குர்ஆன் பிரதி இறக்குமதிக்கான விதிமுறை அரசியலமைப்பை மீறுகிறது

முறைப்பாட்டை விசாரிக்கிறது மனித உரிமை ஆணைக்குழு

0 201

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கையில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­களை சுங்­கத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­தற்கு கையா­ளப்­படும் கடு­மை­யான விதி­மு­றைகள் அர­சி­ய­ல­மைப்பின் 10,12,14 ஆம் பிரி­வு­களை மீறு­வ­தாகும்.

இஸ்­லா­மிய நூல்கள் குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு மாத்­திரம் ஏன் இந்த விதி­மு­றைகள்? மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது­வி­ட­யத்தில் தலை­யிட்டு நியா­ய­மான தீர்வு பெற்­றுத்­த­ர­வேண்டும் என வை.எம்.எம்.ஏ. பேர­வையின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை உறுப்­பினர் கே.என்.டீன் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

கே.என்.டீன் நேற்று முன்­தினம் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இஸ்­லா­மிய நூல்கள்,குர்ஆன் பிர­திகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டும்­போது கையா­ளப்­படும் கடு­மை­யான விதி­மு­றைகள் தொடர்பில் வை.எம்.எம்.ஏ.கடந்த வருடம் ஜூன் மாதம் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டினை விசா­ரணை செய்­வ­தற்­கா­கவே அங்கு அவர் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கே.என்.டீன் விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், எமது நாட்டில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் பிர­தி­களை சுங்­கத்­தி­லி­ருந்தும் விடு­விப்­ப­தற்கு இந்த விதி­முறை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. ஏனைய மத நூல்­க­ளுக்கு இவ்­வி­தி­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை.

இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள் மற்றும் குர்ஆன் ஒவ்­வொன்றும் இரு பிர­திகள் புத்­த­சா­சன மற்றும் சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அப்­ புத்­த­கங்­களில் குர்­ஆனில் அடிப்­ப­டை­வாத கருத்­துகள், வச­னங்கள் இருக்­கின்­ற­னவா என ஆராய அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவிடம் வழங்­கப்­படும். பின்பு அவை செய­லா­ள­ரினால் பாது­காப்பு அமைச்­சுக்கு அ-னுப்பி வைக்­கப்­படும். பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கினால் மீண்டும் அந்­நூலின் பிர­திகள் குர்­ஆன்­ பி­ர­திகள் புத்­த­சா­சன அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­படும். அதன் பின்பே அவை சுங்­கத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும். இவ்­வா­றான விதி­முறை கார­ண­மாக இந்­நூல்­களை, குர்­ஆனை இறக்­கு­மதி செய்யும் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் பல்­வேறு சிர­மங்­க­ளையும் கால­தா­ம­தத்­தையும் எதிர்­கொள்­கின்­றனர்.

முஸ்­லிம்­களின் நூல்­க­ளுக்கும் குர்­ஆ­னுக்கும் மாத்­திரம் ஏன் இந்த விதி­முறை. எனவே புத்­த­சா­சன அமைச்சின் செய­லா­ளரும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வெளி­யிட்­டுள்ள இது தொடர்­பான சுற்று நிரு­பத்தை ரத்துச் செய்ய வேண்டும் என­ அவர் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விடம் வேண்­டுகோள் விடுத்தார்.

இந்­நி­லையில் புத்­த­சா­சன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் முறைப்பாட்டாளரான வை.எம்.எம்.ஏ யின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் கே.என்.டீன் ஆகியோரை விரைவில் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.