பாதுகாப்பு பேரவை சட்டமாக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து அமைச்சரவை தீர்மானம்

0 198

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மூலம் பொது மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனு மீது கடந்த ஜன­வரி 12 ஆம் திகதி வழங்­கப்­பட்ட தீர்ப்பில், தேசிய பாது­காப்­பா­னது, அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­ப­டை­யிலும் தெளி­வான அமைப்­பு­டனும் நிறு­வப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பரிந்­து­ரைத்­துள்ள நிலையில், அதனை அமுல்­ப­டுத்த அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இதற்­க­மைய தேசிய பாது­காப்பு சபையை சட்­ட­மாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்­பாக நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பின்­வ­ரு­மாறு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

1999 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்­கையின் தேசிய பாது­காப்பு சபை­யா­னது தேசிய பாது­காப்பு தொடர்­பான விட­யங்­களில் ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் அத­னுடன் தொடர்­பு­டைய உள்ளுர், சர்­வ­தேச, பொரு­ளா­தார மற்றும் இரா­ணுவக் கொள்­கைகள் ஒருங்­கி­ணைப்பு போன்­ற­வற்றை மேற்­கொள்­கின்ற அடிப்­படை நிறை­வேற்­று­கின்ற நிறு­வ­ன­மாக இயங்­கு­கின்­றது.

2023.01.12 ஆம் திகதி உயர் நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாது­காப்பு சபைக்கு நிய­திச்­சட்ட முறை­யு­டனும் மற்றும் தெளி­வான கட்­ட­மைப்­புடன் கூடி­ய­தாக தாபிக்க வேண்­டிய தேவை பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய, தேசிய பாது­காப்பு சபை பாரா­ளு­மன்ற சட்­டத்தின் பிர­காரம் சட்­ட­பூர்­வ­மாக்­கு­வ­தற்கு இய­லு­மாகும் வகையில் சட்­ட­மூ­ல­மொன்றைத் தயா­ரிக்­கு­மாறு சட்ட வரை­ஞ­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி சமர்ப்­பித்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய பொலிஸ் நிர்­வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.