பலஸ்தீனின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

தூதுவரிடம் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் தெரிவிப்பு

0 62

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பலஸ்தீன் நாட்டின் இலங்­கைக்­கான தூதுவர் கலா­நிதி சுஹைர் தார் செய்த் கடந்த திங்­கட்­கி­ழமை கண்டி நக­ருக்கு விஜயம் செய்து அஸ்­கி­ரிய பீட மகா நாயக்க தேரர் வர­கா­கொட தம்­ம­திசி ஸ்ரீ பக்­க­ஹ­நந்த ஞான­ர­தன பிந்­தான மற்றும் மல்­வத்த பீட மகா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த சுமங்­கல தேர­ரையும் சந்­தித்து சிநேக பூர்­வ­மாக கலந்­து­ரை­யா­டினார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி ஸ்ரீத­லதா மாளி­கையில் இடம்­பெற்ற இலங்­கையின் 75 ஆவது குடி­ய­ரசு பெர­ஹரா வைப­வத்தில் கலந்து கொள்­வ­தற்­காக பலஸ்தீன் தூதுவர் அங்கு சென்­றி­ருந்தார். அவர் தனது விஜ­யத்தின் போதே அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த பீடா­தி­ப­தி­க­ளான மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டார். இந்த சிநே­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­ட­லின்­போது பலஸ்­தீ­னத்தின் தற்­போ­தைய நிலை­மை­யினை எடுத்து விளக்­கினார்.

தற்­போ­தைய நிலையில் பலஸ்தீன் மக்­க­ளுக்கு உல­க­ளாவிய ஒரு­மைப்­பா­டு ­கிட்­ட­வேண்டும். அத்­தோடு சர்­வதேச சமூ­கத்தின் உத­வி­க­ளையும் பலஸ்தீன் மக்கள் எதிர்­பார்க்­கி­றார்கள் என்றும் மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் பலஸ்தீன் தூதுவர் தெரி­வித்தார்.
இலங்­கைக்கும் பலஸ்­தீ­னத்­துக்­கு­மி­டையில் இறுக்­க­மான உறவு நீண்­ட ­கா­ல­மாக இருந்து வரு­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டிய பலஸ்தீன் தூதுவர் பலஸ்தீன் மக்­களின் நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கும் பலஸ்­தீ­னுக்­கு­மி­டை­யி­லான உறவு ஒரு­போதும் மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­காது, மென்­மேலும் பலப்­படும் என்றார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்கை எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­க­டி­யான நிலையில் பலஸ்­தீனும், பலஸ்தீன் மக்­களும் இலங்­கை­யுடன் எப்­போதும் கைகோர்த்­தி­ருப்­பார்கள். இலங்கை நாடு என்ற வகையில் ஐக்­கி­யத்­துடன் அனைத்து சமூ­கங்­களும் ஒற்­று­மைப்­பட்டு ஒன்­றி­ணை­வதன் மூலம் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்தும் மீட்சி பெற­மு­டியும். அத்­தோடு உள்­ளகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு பெற்­றுக்­கொள்ள முடியும். பரந்த உள்­ளக பொறி­மு­றை­களின் மூலம் வெளி­நா­டு­களின் தலை­யீ­டு­க­ளின்றி தீர்வு காண முடியும் என்றார்.

இலங்கை பொரு­ளா­தார மற்றும் ஏனைய நெருக்கடி­க­ளி­லி­ருந்து விரைவில் மீட்­சி­ய­டைய முடி­யு­மென தான் நம்­பு­வ­தா­கவும் எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
இலங்­கைக்கும் பலஸ்­தீ­னுக்கும் இடையில் நிலவும் நெருங்­கிய உற­வு­க­ளுக்கு மகா­நா­யக்க தேரர்கள் பெரும் வர­வேற்­ப­ளித்­தனர். பாராட்­டு­களைத் தெரி­வித்­தனர். பலஸ்­தீனின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் மகா­நா­யக்க தேரர்கள் கருத்து தெரி­விக்­கையில் பலஸ்­தீனில் தற்­போது என்ன நடக்­கி­றது என்­பதை நாம் அறிவோம். பலஸ்­தீனின் விடு­த­லைக்­கா­கவும், பலஸ்தீன் மக்­களின் சுதந்­தி­ரத்­திற்­கா­கவும் தொடர்ந்தும் தங்­க­ளது ஆத­ர­வினை வழங்­கு­வ­தா­கவும் பலஸ்தீன் மக்­களின் வாழ்க்­கையில் பாது­காப்பும் நிரந்­தர அமை­தியும் நில­வ­வேண்டும். பலஸ்தீன் மக்­களின் விடு­த­லைப்­போ­ராட்­டத்­திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.