உள்ளூராட்சி தேர்தல் முடியும்வரை பள்ளி நிர்வாகிகள் தெரிவை தவிர்க்குக

முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் வலியுறுத்து

0 233

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் 9ஆம் திக­திக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளதால், தேர்தல் முடி­யும்­வரை பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­களில் நம்­பிக்­கை­யாளர் தெரி­வு­களை நடாத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அனைத்து பள்­ளி­வா­சல்கள் தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­களின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களை வலியுறுத்தியுள்ளார்.

பணிப்­பாளர் பைஸல் இது தொடர்பில் சுற்­று­நி­ருபம் ஒன்­றினை அனுப்பி வைத்து இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளதால் நம்­பிக்­கை­யா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான (சாதா­ரண தெரிவு/ இர­சிய வாக்­கெ­டுப்பு) பொதுக் கூட்­டங்­களை உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலின் பின்னர் நடாத்­து­மாறு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் 2023.02.06 ஆம் திக­திய கடி­தத்தின் பிர­காரம் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனவே பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்கள் நம்­பிக்­கை­யா­ளர்கள் தெரி­வு­களை நடாத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­துடன் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வ­டைந்­ததன் பின்னர் நம்­பிக்­கை­யாளர் தெரி­வு­களை நடாத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப் ­ப­டு­கின்­றீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.