தேசத்துக்கான தேர்தலும் முஸ்லிம்களுக்கான தேர்தலும்

0 265

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

தேசத்தின் பல்­வேறு நெருக்­க­டி­களை உணர்ந்து அவற்றைத் தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­களை தன்­னிச்­ச­சை­யாக ஜனா­தி­ப­தியோ அல்­லது அவரை அப்­ப­த­விக்கு உயர்த்­திய பெரும்­பான்மை கட்­சியின் அங்­கத்­த­வர்­களோ அல்­லது ஜனா­தி­ப­தியின் நிபு­ணத்­துவ ஆலோ­ச­கர்­களோ வகுத்­தாலும் அவற்­றுக்குப் பொது­ மக்­களின் ஆத­ரவு உண்டா இல்­லையா என்­பதை அறி­யவே உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் நடை­பெற வேண்­டு­மென பர­வ­லான ஓர் அபிப்­பி­ராயம் நில­வு­கி­றது. அதற்குச் சர்­வ­தேச ஆத­ரவும் உண்டு எனவும் கரு­தலாம். ஆனால் அந்தத் தேர்­தலை எவ்­வ­ழி­யி­லா­வது நிறுத்­தியே ஆக ­வேண்டும் என்று கங்­கணம் கட்­டிக்­கொண்டு ஜனா­தி­ப­தியும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் பல முயற்­சி­களை மேற்­கொள்­ளு­கின்­றமை வெளிப்­படை. அண்­மையில் மத்­திய வங்­கியும் தேர்­த­லுக்­கான நிதி­யினை ஒதுக்­கு­வது சவா­லாக அமை­யு­மென ஓர் அறிக்­கையை விடுத்­துள்­ளது. ஆனால் தேர்தல் ஆணை­யா­ளரோ நிதி ஒரு பிரச்­சினை இல்­லை­யெனத் தைரியம் கூறு­கிறார்.

எவ்­வா­றி­ருப்­பினும் வரப்­போகும் தேர்தல் ஊராட்­சி­மன்ற மட்­டத்­திலோ மாகாண மட்­டத்­திலோ நாடா­ளு­மன்ற மட்­டத்­திலோ அல்­லது ஜனா­தி­பதி மட்­டத்­திலோ நடை­பெற்­றாலும் அது தேசத்தின் நலனைக் கருதி நடத்­தப்­படும் ஒரு தேர்­த­லாகவே அமையும். அந்தத் தேர்­தலில் முற்­ப­டுத்­தப்­ப­டப்­போகும் ஒரே பிரச்­சினை நாட்டின் நெருக்­க­டி­க­ளுக்­கான, அதிலும் குறிப்­பாகப் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­கான அரச பரி­காரம் தீர்­வா­குமா இல்­லையா என்­ப­தாகும். அரச பரி­காரம் தீர்­வில்­லை­யெனின் அதற்­கான மாற்றுப் பரி­காரம் எதிர்க்­கட்­சி­யி­ன­ரி­டையே உண்டா? உண்­டெனில் அதனை அவர்கள் மக்­க­ளுக்கு விளக்க வேண்­டி­யது அவ­சியம். ஆனால் இது­வரை எதிர்க்­கட்­சி­க­ளெல்லாம் அரசின் பரி­கா­ரத்தின் குறை­க­ளைப்­பற்றிக் கார­சா­ர­மாக விமர்­சனம் செய்­கி­றார்­களே ஒழிய தமது மாற்றுப் பரி­கா­ரத்­தைப்­பற்றி எதை­யுமே சொல்லக் காணோம். இது ஒரு பெரும் குறை.
எனினும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரப்­பிணி இந்த நாட்டை ஆள்­கின்ற அடிப்­படை அமைப்­பி­லி­ருந்து உரு­வா­கி­யது. அந்த அமைப்பை மாற்­றாமல் இப்­பி­ணியை நிரந்­த­ர­மாக அகற்ற முடி­யாது என்­பதை இக்­கட்­டு­ரை­யாளர் பல சந்­தர்ப்­பங்­களில் வலி­ய­றுத்­தி­யுள்ளார். அதே பாணி­யி­லான கருத்­துக்­களை இது­வரை முன்­வைத்­துள்ள ஒரே­யொரு அர­சியற் கட்சி மக்கள் விடு­தலை முன்­னணி என்­ப­தையும் இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. எது எப்­படி இருப்­பினும் எதிர்­வ­ரப்­போகும் தேர்தல் நாட்டின் நலன்­பற்றிப் பேசப்­ப­டு­கின்ற அல்­லது அதைப்­பற்றித் தீர்­மா­னிக்­கப்­படப் போகின்ற ஒரு தேர்­த­லாக அமை­வது உறுதி.

இந்த நிலையில், முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும், அவற்றின் தலை­வர்­க­ளி­னதும், அங்­கத்­த­வர்­க­ளி­னதும் தேர்தல் நட­வ­டிக்­கைகள் முற்­றிலும் வேறொரு பாதை­யிலே செல்­வதை நோக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதா­வது இவர்­களின் தேர்தல் நட­வ­டிக்­கைகள் எந்த நோக்­கத்­துக்­காக நடை­பெ­று­கின்­றன என்­பதை அவ­தா­னிக்­கும்­போது அவற்­றுக்கும் இந்த நாட்டின் தலை­யாய பிரச்­சி­னை­க­ளுக்கும் சம்­பந்தம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக, யார் வாலைப் பிடித்­தா­வது எந்தப் பிசா­சுடன் இணைந்­தா­வது எந்தப் பொய்­யையோ புரட்­டையோ சொல்­லி­யா­வது தேர்­தலில் வென்று, முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­களின் ஊராட்சி மன்­றங்­களைக் கைப்­பற்றி, அந்தப் பலத்தை மைய­மா­கக்­கொண்டு இனி­வ­ரப்­போகும் நாடா­ளு­மன்றத் ேதர்த­லிலும் குதித்து, அதன்­மூலம் நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்து, அங்கே தமது சமூ­கத்தைப் பணயம் வைத்து அமைச்­சுப்­ப­த­வி­க­ளையோ ஆளுனர் பத­வி­க­ளையோ பெற்றுப் பணம் திரட்டும் நோக்­கா­கவே இவர்­களின் தேர்தல் நட­வ­டிக்­கைகள் தென்­ப­டு­கின்­றன. இதனை நோக்­கும்­போது முஸ்லிம் கட்­சி­களும் அவற்றின் தலை­வர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் இந்த நாட்­டுக்கே உரி­ய­வர்­கள்­தானா என்ற ஒரு சந்­தே­கமும் எழு­கி­றது. இந்த நிலை ஏன் ஏற்­பட்­டது?

குடி­யேற்ற ஆதிக்கம் முடி­வ­டைந்து சுதந்­திரம் கிடைத்­த­பின்பு, “நாம் இருக்கும் நாடு நம­தென்­ப­தாச்சு, இது நமக்கே உரி­மையாம் என்­ப­தாச்சு” என்று பாரதி பாடி­யது போன்று இலங்­கை­யரே இலங்­கையை ஆளத் தொடங்­கினர். யாராய் இருந்­தாலும் எந்த இனத்­த­வ­ரா­யினும் எந்த மொழியைப் பேசு­ப­வ­ரா­யினும் எந்த மதத்தைப் பின்­பற்­று­ப­வ­ரா­யினும் ஆட்­சியிற் பங்­கு­கொண்டு நாட்டை வளப்­ப­டுத்த வேண்டும் என்ற கட­மைப்­பாடு உரு­வா­கி­யது. அது மட்­டு­மல்ல, நாடு வளம்­பெ­றாமல் எவரும் எவ்­வி­னமும் வளம்­பெற முடி­யாது என்ற ஒரு நிர்ப்­பந்­தமும் சுதந்­தி­ரத்தால் தோற்­று­விக்­கப்­பட்­டது. ஆகவே நாட்டின் பிரச்­சி­னை­ளிலே பூரண பங்­கு­கொள்­ளாமல் எவரும் எந்த இனத்­த­வரும் நாட்டின் உயிரோட்டமுள்ள ஒரு பிர­ஜை­யாக வாழ முடி­யாது என்ற ஒரு நிய­திக்குள் தள்­ளப்­பட்­டனர். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்கை முஸ்­லிம்­களின் மனப்­போக்கு அவ்­வாறு மாற­வில்லை என்­பதை இங்கே கவ­லை­யுடன் குறிப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அதற்குக் கார­ண­மென்ன?

அதற்­கான முக்­கிய காரணம் முஸ்லிம் மத­போ­த­கர்­களின் போதனை. பர­லோக வாழ்வே நிச்­சயம், இக­லோக வாழ்வு அனிச்­சயம், மௌத்­தையும் ஆகி­றத்­தையும் மறந்து வாழா­தீர்கள் என்ற தோர­ணை­யி­லேயே மத­போ­த­னைகள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இடம்­பெற்­றன. இந்தப் போத­னையைக் கூர்ந்து நோக்­கினால் “நீ வாழாதே” என்­ப­துபோல் இல்­லையா? இது வாழ்க்கை வாழ்­வ­தற்கே என்ற குர்­ஆனின் போத­னைக்கு மாறா­னது என்­பதை அந்த இறை­வ­ச­னங்­களை யதார்த்த சிந்­த­னை­யுடன் படிப்­போ­ருக்கு விளங்கும். வெள்­ளிக்­கி­ழ­மை­கள் ­தோறும் நடை­பெற்ற அனைத்து குத்பா பிர­சங்­கங்­களும் பர­லோக வாழ்­வையே சதா உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­த­மையால் அவற்றைக் கேட்ட பாமர மக்­களும் தாமும் தமது தொழிலும் குடும்­பமும் பள்­ளி­வா­சலும் என்ற முக்­கூட்­டி­னுக்­குள்­ளேயே நின்று சுழன்­றனர். இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன என்ற அர­சியல் பற்­றற்ற மனப்­பாங்கு அவர்­க­ளி­டையே உரு­வாகத் தொடங்­கிற்று. அதனால் வியா­பா­ரத்­தையே பிர­தான தொழி­லா­கக்­கொண்டு வாழ்ந்த முஸ்­லிம்கள் அர­சி­ய­லையும் ஒரு வியா­பா­ர­மா­கவே கரு­தி­யதில் வியப்­பில்லை. 1950களுக்­குப்­பின்பு இந்­தி­யா­வி­லி­ருந்து நாட்­டுக்குள் நுழைந்த தப்லீக் இயக்கப் பிரச்­சா­ரங்­களும் இந்த மனப்­பாங்கை மாற்­ற­வில்லை. இந்த மனப்­போக்கை நன்­றாக அவ­தா­னித்த காலஞ்­சென்ற அர­சி­யல்­வாதி கலா­நிதி கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள் ஒரு சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளைப்­பற்றிக் குறிப்­பி­டும்­போது அவர்கள் இந்த நாட்டில் மாடும் புல்லும் போன்று வாழ்­கின்­றனர் என்றார். அதா­வது, மாடு புல்லை மேயும், ஆனால் அதை எப்­படி வளர்ப்­பது என்­ப­தைப்­பற்றி அதற்குக் கவ­லையே இல்லை. இதைப்­பற்றி முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மிகக் கூர்­மை­யாகச் சிந்­திக்க வேண்­டி­யது அவ­சியம்.

இந்த மனப்­போக்கு வளர்ந்­த­தனால் நாடா­ளு­மன்றத் தேர்­தல்கள் வரும்­போது எந்­தக்­கட்சி தமது சமூ­கத்­துக்கு அதிக சலு­கை­க­களை அளிக்கும் என உறு­தி­மொழி வழங்­கி­யதோ அந்தக் கட்­சிக்கே தமது வாக்­கு­களை அள்ளி வீசினர். அந்தக் கட்­சி­களின் வேறு எந்தக் கொள்­கைக­ளைப்­பற்­றியும் இந்தச் சமூ­கத்­துக்கு எந்­தக்­க­வ­லையும் இருக்­க­வில்லை. சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்­களும் ஓரி­ரு­வ­ரைத்­த­விர அந்த மனப்­பாங்­கி­லேதான் நாடா­ளு­மன்ற விவ­கா­ரங்­களிற் கலந்­து­கொண்­டனர். எந்தத் தலை­வ­னுமே முஸ்­லிம்களும் இந்­நாட்டின் பிர­ஜைகள் என்ற அடிப்­ப­டையில் அவர்­களின் உரி­மை­க­ளைப்­பற்றிப் பேசி­யதே இல்லை. அதனால் சலு­கை­களை நம்பி வாழும் ஒரு சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் மாறிற்று. அது­மட்­டு­மல்­லாமல் நாட்டின் பொதுப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முஸ்லிம் தலை­வர்கள் எந்தப் பங்­க­ளிப்­பையும் செய்­ய­வில்லை. உதா­ர­ண­மாக, பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மான விவா­தங்கள் நாடா­ளு­மன்­றத்தில் நடை­பெற்­ற­போது எல்லா முஸ்லிம் அங்­கத்­த­வர்­க­ளுமே மௌனி­க­ளாக இருந்­தனர். இருந்தும், அவர்கள் எவ­ருமே தமது இனத்­துக்­கென ஒரு தனிக்­கட்சி அமைப்­ப­தைப்­பற்றிச் சிந்­திக்­கவே இல்லை. அதற்­கா­க­வா­வது அவர்­களைப் பாராட்ட வேண்டும். ஆனால் அந்த நிலை இன்று மாறி விட்­டாலும் அர­சியல் மனப்­பாங்கு மாறவே இல்­லை­யென்று கூறலாம்.

முஸ்­லிம்­க­ளுக்­கெனத் தனி­யொரு கட்சி உரு­வாகி இன்று அது இரண்­டாகப் பிரிந்து எந்­தக்­கட்சி அதி­க­மான முஸ்லிம் வாக்­கு­களைக் கைப்­பற்றி எந்தக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கலாம், அமைச்சுப் பத­வி­க­ளையும் ஆளுனர் பத­வி­க­ளையும் பெறலாம் என்­பதே அவற்றின் முழு இலக்­காக அமைந்­துள்­ளது. அக்­கட்­சிகள் ஒவ்­வொன்றும் முன்­வைக்கும் பிரச்­சி­னைகள் யாவுமே முஸ்­லிம்­களைப் பற்­றி­யதே. முஸ்­லிம்­களின் நிலங்கள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன, அவர்­களின் வியா­பார ஸ்தலங்கள் பகிஷ்­க­ரிக்கப்படு­கின்­றன, பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­ப­டு­கின்­றன என்­றெல்லாம் ஒப்­பாரி வைக்கும் கட்­சி­க­ளா­கவே இவை மாறி­யுள்­ளன. இந்தக் குறை­களை யாரும் மறுக்­க­வில்லை. அவை தீர்க்­கப்­ப­டத்தான் வேண்டும். ஆனால் அவற்றைத் தீர்ப்­ப­தற்கு இக்­கட்­சி­களால் முடி­யுமா என்­ப­துதான் பிரச்­சினை.

இந்தப் பிரச்­சி­னை­க­ளையே முன்­வைத்து சதா ஒப்­பாரி வைத்­துக்­கொண்டு அதே நேரம் நாட்டை இன்று பாதித்­துள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளைப்­பற்­றியும் அதற்­கான தீர்­வு­க­ளைப்­பற்­றியும் முஸ்லிம் தலை­மைகள் பகி­ரங்­கத்தில் எதையும் சொல்­லா­தி­ருப்­பதும் அதைப்­பற்­றிய கரி­ச­னையே இல்­லா­தி­ருப்­பதும் கொல்வின் கூறிய கூற்­றுக்கு ஆதா­ர­மாகத் தெரி­ய­வில்­லையா? இது­வரை எந்த முஸ்லிம் கட்சித் தலைவன் அல்­லது தொண்டன் இன்­றைய பொரு­ளா­தாரச் சிக்­கல்­க­ளைப்­பற்றி ஆக்­க­பூர்­வ­மான ஒரு உரை­யை­யா­வது பகி­ரங்­கத்தில் நிகழ்த்­தி­யது உண்டா? அல்­லது ஏதா­வது ஒரு அறிக்­கையை அது பற்றி எழுதி வெளி­யிட்­டது உண்டா? இந்த நிலையில் பொரு­ளா­தார நெருக்­க­டி­யைப்­பற்­றிய ஒரு தேர்­த­லாக ஊராட்­சி­மன்றத் தேர்தல் உரு­வெ­டுக்­கின்ற இச்­ச­ம­யத்தில் முஸ்லிம் கட்­சிகள் தமது இனத்தின் குறை­க­ளையே முன்­வைத்துப் பிரச்­சாரம் செய்­வதை எவ்­வாறு சரி­காண்­பதோ? அதே சமயம் நாட்டின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் தீர­வேண்­டு­மென்று துஆப் பிரார்த்­தனை செய்­வதால் அவை தீரப்­போ­வ­தில்லை. துஆப் பிரார்த்­த­னைதான் சிறந்த வழி­யென்றால் முஸ்லிம் இனத்தின் பிரச்­சி­னை­க­ளையும் பிரார்த்­த­னை­க­ளா­லேயே தீர்க்­க­லாமே. அதற்­கென ஏன் அர­சியல் கட்­சி­களும் மேடை­களும் பிரச்­சா­ரங்­களும்?

நாடு ஈடேற்றம் பெறாமல் அதன் மக்கள் ஈடேற்றம் காண முடி­யாது. இதனை மறந்து முஸ்லிம் கட்­சிகள் இனம் இனம் என்று கத­று­வதால் முஸ்­லிம்­களே இந்த நாட்­டுக்கு உரி­ய­வர்கள் அல்ல என்ற கருத்­துக்கு வலு­வூட்­டு­கின்­றனர். அந்தக் கருத்து ஏற்­க­னவே நில­வு­வதை யார்தான் மறுப்பர்? தமி­ழர்­க­ளா­வது இலங்­கையை சிங்­கள ஈழம் தமிழ் ஈழம் என வகுத்து தமிழ் ஈழத்தில் தமது உரி­மை­களைப் பாது­காக்கப் போரா­டு­கி­றார்கள். அது சரியோ பிழையோ என்­பது ஒரு புற­மி­ருக்க, முஸ்லிம் கட்­சிகள் இன­வா­ரி­யாகப் போரா­டு­வது எந்தக் கிலா­பத்தை உருவாக்கவோ?

இன பேதங்களை மறந்து இந்த நாட்டின் அடிப்படை ஆட்சி அமைப்பையே மாற்ற வேண்டும் என்று கடந்த வருடம் இளைஞர்கள் காலிமுகத்திடலிலே திரண்டெழுந்தபோது இந்த முஸ்லிம் தலைமைகளும் அவர்களின் தொண்டர்களும் எங்கே போனார்கள்? அந்த இளைஞர்களுக்காக எந்த முஸ்லிம் தலைவன் குரல் கொடுத்தான்? இன்­றைய பேரி­ன­வாத அடிப்­படை அமைப்பை ஒழித்து, ஜன­நா­ய­கத்தின் விழு­மி­யங்­களைப் பேணி, மக்­க­ளுக்குப் பொறுப்புக் கூறும் ஓர் அரசை நிறுவி, அவற்­றை­யெல்லாம் உள்­ள­டக்­கிய ஓர் அர­சியல் யாப்­பையும் கொண்­டு­வ­ரவே அந்த இளைஞர் கூட்டம் துடிக்­கி­றது. அவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை மழுங்­க­டித்து அவர்­க­ளையும் பேரி­ன­வா­திகள் தமது கட்­சி­க­ளுக்குள் நுழைக்கும் முயற்­சி­களில் இப்­போது ஈடு­பட்­டி­ருப்­பது தெரி­கி­றது. அந்தச் சூழ்ச்­சிக்கு அவ்­வி­ளை­ஞர்கள் பலி­யாகப் போவ­தில்லை.

இளம் சமு­தா­யத்தின் அபி­லா­ஷை­களை விளங்கி அவற்றை ஓர­ள­வா­வது நிறை­வேற்­றக்­கூ­டிய ஒரு கட்­சியை அடை­யா­ளப்­ப­டுத்தி அதற்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளித்­தா­லன்றி இச்­ச­மூ­கத்தின் எதிர்­காலம் பிரச்­சி­னைகள் நிறைந்­த­தா­கவே இருக்கும். அப்­பி­ரச்­சி­னை­களை முஸ்லிம் கட்­சி­களால் தீர்க்­கவே முடி­யாது. இனத்தையும் மதத்தையும் அரசியலில் இருந்து நீக்காதவரை முஸ்லிம்களுக்கு விமோசனம் இல்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.