ஜனாஸா நல்லடக்கத்துக்கு பள்ளிவாசல் நிர்வாகம் மறுப்பு

0 224

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஐஸ் போதைப்­பொருள் பாவ­னை ­கார­ண­மாக வவு­னியா புனர்­வாழ்வு நிலை­யத்தில் புனர்­வாழ்வு பெற்­று­வந்த நப­ரொ­ருவர் கடந்த 10 ஆம் திகதி மர­ண­ம­டைந்­துள்ளார்.
வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியைச் சேர்ந்த நபர் ஒரு­வரே இவ்­வாறு புனர்­வாழ்வு பெற்று வந்த நிலையில் மர­ண­ம­டைந்­துள்ளார்.

35 வய­து­டைய இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர் சுமார் மூன்­றரை மாதங்­க­ளாக வவு­னியா புனர்­வாழ்வு நிலை­யத்தில் புனர்­வாழ்வு பெற்­று­வந்த நிலையில் மர­ண­ம­டைந்­த­தாக குடும்ப உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

இவ்­வாறு மர­ண­ம­டைந்த நபரின் ஜனா­ஸாவை தொழுகை நடாத்தி நல்­ல­டக்கம் செய்ய அவர் வசித்­து­வந்த பகுதியிலுள்ள மாஞ்­சோலை ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் மறுப்பு தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் மர­ண­ம­டைந்த குறித்த நபரின் ஜனா­ஸாவை அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் முன்னின்று தொழுகை நடாத்தி குறித்த பள்ளிவாசல் மையவாடியிலேயே நல்லடக்கம் செய்தனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.