உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு எதிரான தீர்ப்பு ஐ.நா. ஆணைக்குழு வரவேற்பு

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டயீடும் நீதியும் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்து

0 229

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட சிரேஷ்ட அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலங்­கையின் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பை வர­வேற்­றுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முழு­மை­யான நஷ்­ட­யீடும் நீதியும் கிடைப்­ப­ததை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய பொலிஸ் நிர்­வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன, தேசிய உளவுச் சேவை பிர­தா­னி­யாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்­படை மனித உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பு தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் குடும்­பத்­தி­னரின் துன்­பத்­தையும் வலி­யையும் இந்த நஷ்­ட­யீ­டு­களால் துடைக்க முடி­யாது என்ற போதிலும், இந்தத் தீர்ப்பு பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உண்மை, நீதி மற்றும் இழப்­பீட்­டுக்­கான உரி­மைகள் மற்றும் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்பை அங்­கீ­க­ரிக்கும் போராட்­டத்தில் ஒரு படி­யாக உள்­ளது என்றும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு போது­மான இழப்­பீடு வழங்­கப்­ப­டு­வதை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் இந் நிதியை உரிய முறையில் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டனும் அவர்­க­ளது பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

உயர் நீதி­மன்­ற­மா­னது தனது தீர்ப்பில், பாது­காப்பு மற்றும் உள­வுத்­துறை அதி­கா­ரி­களின் அசட்டை மற்றும் செய­லற்ற தன்மை குறித்து நீதி­மன்றம் அதிர்ச்­சி­யையும் திகைப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் அவ­ரது உயர் பாது­காப்பு அதி­கா­ரிகள் உட­னடி அச்­சு­றுத்­த­லா­க­வி­ருந்த தாக்­கு­தல்­களைத் தடுக்கத் தவ­றி­விட்­டனர் என நீதி­மன்றம் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பு தொடர்­பான முன்­னைய விசா­ர­ணை­களின் முழு­மை­யான கண்­ட­றி­தல்­களை வெளி­யி­டவும், சர்வதேச உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முழு பங்கேற்புடன் சுயாதீனமான, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னர் வழங்கியுள்ள தனது பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.