குறுகிய காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

0 260

(எம்.வை.எம்.சியாம்)
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் தலை­யீட்டில் வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தோடு குறு­கிய காலப்­ப­கு­திக்குள் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாகத் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்ளார்.

வடக்கு மக்­களின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு ஏற்­க­னவே தீர்வு காண நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதன் பின்­ன­ணி­யி­லேயே ஜனா­தி­பதி இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார்.
நாட்­டி­லுள்ள அனைத்து அர­சியல் கட்­சி­களின் பங்­க­ளிப்­புடன் நடை­பெற்ற சர்வ கட்சி கூட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு அமைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க நேர­டி­யான தலை­யீ­டு­களை வழங்­கினார்.

அதற்­க­மை­வாக, வடக்கில் உள்ள மக்­களின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு ஏற்­க­னவே தீர்வு காணத் தொடங்­கி­யுள்ள நிலையில் பெருந்­தோட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க ஜனா­தி­பதி உத்­தே­சித்­துள்ளார்.

மேலும், பெருந்­தோட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கி­யதன் பின்னர் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­த­தா­கவும் பெருந்­தோட்ட மற்றும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் தெரியவருகிறது. –Vidivelli

Leave A Reply

Your email address will not be published.