இறுதி மூச்சு இருக்கும் வரை மு.கா.வை பலப்படுத்துவேன்

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்த ஹிஸ்புல்லாஹ் உறுதியளிப்பு

0 352

(எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எஸ்.எம்.நூர்தீன்)
எனது இறுதி மூச்சு இருக்­கும்­வரை முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியில் இருந்து கட்­சியை பலப்­ப­டுத்தி கட்­சிக்­காக எனது முழு பங்­க­ளிப்­பையும், எனது அனு­ப­வத்­திலிருந்து வழங்­குவேன் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளு­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு மு. கா. தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் முன்­னி­லையில் மீள இணைந்து கொண்­டார். இந்த நிகழ்வு ஓட்­ட­மா­வடி காவத்­த­மு­னையில் இடம் பெற்­றது.
முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஊப் ஹக்கீம். முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அலி ஸாஹீர் மெள­லானா, கட்­சியின் தவி­சாளர் உட்­ப­ட முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.

இதன் போது இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஹிஸ்­புல்லாஹ், முஸ்லிம் காங்­கிரஸ் என்­பது எமது தாய் வீடு ஆகவே, அந்த தாய் வீட்­டி­லேதான் மீண்டும் போக வேண்டும் என்­பதில் நான் மிகவும் உறு­தி­யாக இருந்து வந்­துள்ளேன். எப்­பொ­ழு­துமே இன்­னு­மொரு கட்­சியை தொடங்க வேண்டும் என்று பலர் என்­னி­டத்தில் சொல்­லு­கின்ற போதெல்லாம் நான் ஒரு­போதும் அதற்கு அனு­மதித்­தது கிடை­யாது. ஏனென்றால் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இருந்து பிள­வு­பட்டு கட்­சி­களை உரு­வாக்கி முஸ்லிம் சமூ­கத்­துக்கிடையில் ஒரு பிளவை ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது என்­பதில் நாம் மிகக் கவ­ன­மாக இருக்­கின்றோம்.

அந்த அடிப்­ப­டையில், தலை­வரின் கரங்­களை முழு­மை­யாக பலப்­ப­டுத்தி கட்­சியை பலப்­ப­டுத்தி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இருக்­கின்ற மூன்று முஸ்லிம் பிர­தேச சபை­க­ளையும் நூறு வீதம் கைப்­பற்றி அதே­போன்று கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற பிர­தேச சபை­களை கைப்­பற்ற தலை­வரும் கட்­சியின் சிரேஸ்ட உறுப்­பி­னர்கள் அனை­வரும் எடுக்கும் முழுப் பணிக்கும் பூரண ஒத்­து­ழைப்பை வழங்குவேன். தலை­வ­ரோடு இணைந்து இந்தக் கட்­சியை முழு­மை­யாக பலப்­ப­டுத்தி இந்த மாகா­ணத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் பேரம் பேசு­கின்ற ஒரு சக்­தி­யாக முஸ்லிம் காங்­கி­ரஸை ஒரு குறு­கிய காலத்­துக்குள் மாற்ற வேண்டும் என்­ப­தற்­காக இந்த தீர்­மா­னத்தை நான் எடுத்­துள்ளேன் என்றார்.

இங்கு மு.கா. தலைவர் கருத்து தெரி­விக்­கையில், ஹிஸ்­புல்­லாஹ்வின் மீள் இணைவு சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இன்னும் பல­ம­டங்கு வெற்­றி­களை ஈட்­டு­வ­தற்­கான ஒரு நல்ல ஆரம்­ப­மாக அமை­கி­றது.

இந்த கட்­சி­யிடம் ஹிஸ்­புல்லாஹ் எந்த நிபந்­த­னை­க­ளையும் விதிக்­க­வில்லை. அதே­போன்று ஹிஸ்­புல்­லாஹ்­விடம் எமது கட்சி எந்த நிபந்­த­னை­க­ளையும் விதிக்­க­வில்லை. இந்தக் கட்­சியில் சக­லரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். இந்தக் கட்­சியின் வெற்­றியே ஒற்­று­மையில் தான் தங்கி இருக்­கி­றது. அந்த ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான சகல முக்­கி­யஸ்­தர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டலை செய்தோம் அது மிக உன்­ன­த­மாக நடந்­தி­ருக்­கி­றது.

அதில் மிகப்­பெ­ரிய விட்டுக் கொடுப்­பு­களை செய்து கட்­சிக்குள் ஹிஸ்­புல்லாஹ் இணைக்­கப்­பட்­டுள்ளார் என முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அலி ஸாஹிர் மௌலானா

ஒரு வாக்குப் பல­முள்ள ஒரு­வ­ரான ஹிஸ்­புல்லாஹ் கட்­சியில் சேர்ந்தால் எனக்கு அது பாதிப்பு வருமே என்று நான் நினைக்க வில்லை. கட்­சியின் வளத்தை, பலத்தை கூட்­டு­வ­தற்­காக நல்­லெண்­ணத்­துடன் இணை­கின்றார் என்ற அடிப்படையில் சந்தோசமாக மனமார அவரின் இணைவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையான முறையில் எங்களது வெற்றியை நோக்கி செல்லவுள்ளோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாகிர் மௌலானா தனது கருத்தினை தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.