கிழக்கு பள்ளிவாசல் சம்மேளனம் : யாரை ஏமாற்ற?

0 311

றிப்தி அலி

இலங்கை வாழ் முஸ்­லிம்­களை இலக்­காகக் கொண்டு பல சிவில் அமைப்­புக்கள் அவ்­வப்­போது தோற்­று­விக்­கப்­டு­வது வழக்கம். எனினும், இந்த அமைப்­புக்­களின் ஆயுட்­கா­லம்தான் மிகக் குறு­கி­யது.

இந்த அமைப்­புக்­க­ளினால் முஸ்லிம் மக்­க­ளுக்கு கிடைத்த நன்­மைகள் என்ன என்­பது பாரிய கேள்­விக்­கு­ரி­யாகும். இவ்­வா­றான நிலை­யி­லேயே ‘கிழக்கு மாகாண பள்­ளி­வாசல் சம்­மே­ளனம்’ என்று ஒரு அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்ள விட­யத்­தினை சமூக ஊட­கங்கள் மூலம் அறியக் கிடைத்­தது.

சுமார் 35 வருட கால வர­லாற்­றினைக் கொண்ட காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளத்தின் தலை­மை­யி­லேயே இந்த சம்­மேளம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது குறிப்­பிட்ட அள­வி­லான திரு­கோ­ண­மலை, அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு கிழக்கு மாகாண முஸ்லிம் சம்­மே­ளன கூட்­ட­மைப்பு இதற்கு முன்­னரும் இதே சம்­மே­ளன மண்­ட­பத்தில் பல தட­வைகள் கூடி­யுள்­ளது. ஏதேனும் ஒ ரு விவ­காரம் பேசு­பொ­ரு­ளா­கும்­போது இவ்­வாறு கூடு­வதும் பின்னர் கலைந்து போவ­துமே தொடர் கதை­யா­கி­யுள்­ளது. இந்த வாரமும் இவ்­வாறு கூடி புதி­தாக சம்­மே­ளனம் ஒன்று தோற்­று­விக்­கப்­பட்­டுத போன்று செய்­திகள் வெளி­யா­கி­யி­ருப்­பதன் மர்மம் என்ன என்­ப­துதான் புரி­யாத புதி­ரா­க­வுள்­ளது.

இந்த சம்­மே­ள­னத்தின் தலைவா; பதவி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கும், செய­லாளர் பதவி அம்­பாறை மாவட்­டத்­திற்கும், பொரு­ளாளர் பதவி திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்கும் வழங்க இந்தக் கூட்­டத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

கிழக்கு முஸ்­லிம்­களை புறக்­க­ணித்­து­விட்டு எடுக்­கப்­படும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான எந்த தீர்­வி­னையும் ஏற்­றுக்­கொள்­ள­வ­தில்லை என்ற தீர்­மா­னமும் இதன்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுப் பேச்­சு­வார்த்­தையில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளி­னதும் சிவில் பிர­தி­நி­திகள் உள்­ள­டக்­கப்­படல் வேண்டும் என்றும் அவ்­வாறு இல்­லாமல் ஒரு­த­லைப்­பட்­ச­மாக பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றால் அதனை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்ற தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
குறிப்­பிட்ட காலத்­துக்குள் முஸ்லிம் மக்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்ட யோச­னை­களை அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­கவும் இந்த சம்­மே­ள­னத்தின் ஒன்­று­கூ­டலில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ற கதை­யாடல் சு+டுபி­டித்­துள்­ளது. இதற்கு இரண்டு முகங்கள் உள்­ளன. ஒன்று உண்­மையில் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான முயற்சி அதற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. உதா­ர­ண­மாக யுத்தக் கைதி­களை விடு­தலை செய்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், காணி­களை வரும் பெப்­ர­வரி மாதத்­திற்கு முன்னர் விடு­வித்தல் போன்ற கோரிக்­கைகள் இதில் முக்­கி­ய­மா­னவை.

அடுத்த முகம்தான், மேற்­படி விவ­கா­ரங்­களை உரிய இடங்­களில் பேசித் தீர்க்­காது மக்கள் மத்­தியில் பேசு­பொ­ரு­ளாக்கி ஒற்­று­மை­யாக வாழும் இனங்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னை­களைத் தோற்­று­வித்து அர­சியல் இலா­பங்­களைப் பெறும் நோக்­க­மாகும்.
இவ்­வா­றான நோக்கம் கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் பின்­ன­ணி­யில்தான் கிழக்கு மாகாண பள்­ளி­வா­யல்கள் சம்­மே­ளனம் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ள­தாக என்ற சந்­தேகம் தற்­போது ஏற்­ப­டு­கின்­றது.
காரணம், கடந்த பல வரு­டங்­க­ளாக இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கிய போது வாய்­மூடி மௌனி­யாக இருந்­தவா;கள் இன்று கிழக்கு மாகாண பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் என்ற போர்­வையில் வெளிக் கிளம்­பி­யுள்­ளனர்.
கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட்ட காலப் பகு­தியில் ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதி­மன்ற முறை­யினை இல்­லா­ம­லாக்க முயற்சி, ஈஸ்டா; தற்­கொலை தாக்­கு­தலின் பின்­ன­ரான பல்­வேறு நெருக்­கு­வா­ரங்கள் என பல இன்­னல்­களை இலங்கை வாழ் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கினர்.

இச்­ச­ம­யத்தில் இலங்­கையில் பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்கள் வாழு­கின்ற கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து கட்­ட­மைப்பு ரீதி­யான எந்­த­வொரு அமைப்பும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.

அது மாத்­தி­ர­மல்­லாமல், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட அழி­வுகள் இன்­னமும் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அது தொடா;பில் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இத் தாக்­கு­தலை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்ட ஆயிரக் கணக்­கான அப்­பாவி முஸ்லிம் இளை­ஞர்­களை விடு­விப்­ப­தற்கோ அவர்­க­ளுக்­காக குரல் கொடுக்­கவோ இந்த சம்­மே­ளனம் தன்னை முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்லை.

அத்­துடன் முஸ்­லிம்­களின் யுத்த அழிவு, அப­க­ரிப்பு தொடர்­பாக ஆவண ரீதி­யான எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும், முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்கள் இது­வரை செய்­ய­வில்லை.

இவ்­வா­றான நிலையில், தேர்­தல்கள் வரலாம் என எதிர்­பார்க்­கப்­படும் இக் கால கட்­டத்தில் திடீ­ரென கிழக்கு மாகாண பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் உரு­வாக்­கப்­பட்டு இனப்­பி­ரச்­சினை தொடா;பிலான அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளமை சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது.

கிழக்கு மாகாண பள்­ளி­வாசல் சம்­மே­ளன உரு­வாக்­கத்தின் பின்­ன­ணியில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஜனாஸா எரிப்­பிற்கு துணை போன சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் செயற்­ப­டு­வ­தா­கவும் அறிய முடி­கின்­றது.

குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தற்­போது பொது வெளியில் முகங்­காட்ட அச்­சப்­ப­டு­கின்ற நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ற விட­யத்தின் ஊடாக மக்கள் மத்­தியில் நுழைய முயற்­சிக்­கின்­றனர்.

இது போன்றே, கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்­தினால் கல்­மு­னையில் நிறை­வேற்­றப்­பட்ட மூதூர் பிர­க­ட­னத்தின் பின்­ன­ணி­யிலும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவா; செயற்­பட்­டதை இங்கு ஞாப­க­மூட்ட விரும்­பு­கின்றேன்.

இந்த சம்­மே­ளனம் தீடி­ரென உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­னணி தொடா;பில் காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளத்தின் முக்­கி­யஸ்தா;களை தொடா;புகொண்டு வின­விய போது, “அம்­பாறை மாவட்ட பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் சார்­பாக மௌலவி ஒரு­வ­ரினால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமை­யவே இந்த கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது” என்­றனர்.

எனினும், அம்­பாறை மாவட்­டத்தில் பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் என்ற அமைப்­பொன்­றில்லை. ஆனால் அம்­பாறை மாவட்ட பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் என்ற அமைப்­பொன்று முன்னா; செயற்­பட்­டது. எனினும், கடந்த பல வரு­டங்­க­ளாக செயழிந்து காணப்பட்ட இந்த அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூடி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடா;பில் கலந்துரையாடியுள்ளது. இதன் தொடராகவே இக்கூட்டம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இது போன்ற அமைப்புக்கள் நல்ல நோக்கில் உருவாக்கப்பட்டால் அது தொடா;பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும். மாறாக, சில அரசியல்வாதிகளின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்க காலத்திற்கு காலம் தோற்றம் பெறுவதும் பின்னர் காணாமல் போவதையுமே இங்கு விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலை மாறி, அர­சியல் பின்­பு­ல­மற்ற, முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களைக் கேள்­விக்­குட்­ப­டுத்தக் கூடிய, மக்­களின் சகல பிரச்­சி­னை­க­ளுக்­கா­கவும் துணிந்து குரல் கொடுக்கக் கூடிய ஒரு சம்­மே­ள­னமே காலத்தின் தேவையாகவுள்ளது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.