ரோஹிங்யா ! தொடரும் அவலம்

104 பேருடன் இலங்கையில் கரையொதுங்கிய படகு

0 360

எம்.எப்.எம்.பஸீர்

மியன்­மா­ரி­லி­ருந்து இந்­தோ­னே­சியா நோக்கி, ரோஹிங்யா பிர­ஜை­களை ஏற்றிச் சென்­று­கொண்­டி­ருந்த பட­கொன்று, இயந்­திரக் கோளறு கார­ண­மாக அனர்த்­தத்­துக்­குள்­ளா­னது.

குறித்த படகு யாழ்.வெற்­றி­லைக்­கேணி கடற்­ப­ரப்­பிற்குள் கடந்த சனிக்­கி­ழமை (17) அனு­ம­தி­யின்றி பிர­வே­சித்­துள்­ள­துடன் அதி­லி­ருந்த ரோஹிங்யா பிர­ஜைகள் அனை­வரும் இலங்கை கடற்­ப­டை­யி­னரால் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். 23 சிறு­வர்கள், 4 இளம் யுவ­திகள், 29 பெண்கள், 70 வய­து­டைய வயோ­திபர், 18 வய­துக்கும், 23 வய­துக்கும் இடைப்­பட்ட 46 ஆண்கள் இவ்­வாறு மீட்­கப்­பட்­டனர். 70 வய­தான முதி­யவர் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்ட நிலையில் அவர் தற்­போது தமது ரோஹிங்யா பிர­ஜை­க­ளி­னு­ட­னேயே இருக்­கின்றார்.
இத­னை­விட படகை செலுத்­திய இலங்­கையர் ஒரு­வரும் கடற்­ப­டை­யி­னரால் இதன்­போது தமது பொறுப்பில் எடுக்­கப்­பட்டு பின்னர் காங்­கே­சந்­துறை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவர்­களை காப்­பாற்ற இலங்கை கடற்­ப­டை­யினர் 3 ரோந்துப் பட­குகள், ஒரு தாக்­குதல் படகு மற்றும் இரு டோரா பட­கு­களை பயன்­ப­டுத்­தி­ய­தாக கடற்­ப­டை­யினர் தெரி­வித்­தனர்.

‘இலங்கை கடற்­ப­டை­யினர் முன்­னெ­டுத்த உயிர்­காக்கும் நட­வ­டிக்­கையை நாம் மெச்­சு­கின்றோம்.’ என இந்த நட­வ­டிக்கை தொடர்பில் அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­லய ஆசிய பசுபிக் பணிப்­பாளர் இந்­ரிக்கா ரத்­வத்த தெரி­வித்­துள்ளார். ‘ இது மனி­தா­பி­மானம் குறித்த சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும்.. இதனை அனைத்து நாடு­களும் கடைப்­பி­டிக்க வேண்டும். ஆபத்­தான கடல் பய­ணங்­களின் போது கட­லி­லேயே உயிர்கள் காவு கொள்­ளப்­ப­டு­வதை தடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னி­டையே, சுமார் 200 பேருடன் மற்­றொரு ரோஹிங்யா அக­திகள் கப்­ப­லொன்றும் கடலில் விபத்­துக்­குள்­ளாகி மூழ்­கி­ய­தாக அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­துக்கும் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், ரோஹிங்யா செயற்­பாட்­டா­ளர்­களும் அது குறித்து தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். வங்­காள விரி­கு­டாவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிலையில் இலங்கை கடற்­ப­டை­யினர் தொடர்ச்­சி­யாக ரோந்துப் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ள­போதும் அவ்­வாறு ஒரு படகு விபத்­துக்­குள்­ளா­னமை தொடர்பில் நேற்று (21) மாலை இக்­கட்­டுரை எழு­தப்­படும் வரை எந்த சான்­று­களும் கண்டு பிடிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந் நிலையில் இலங்கை கடற் பரப்­பிற்குள் அனர்த்­தத்­திற்­குள்­ளான பட­கி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மியன்மார் – ரோஹிங்யா பிர­ஜைகள் 103 பேரையும், மிரி­ஹானை தடுப்பு முகா­முக்கு மாற்­று­மாறு மல்­லாகம் நீதிவான் கடந்த 19 ஆம் திகதி உத்­த­ர­விட்­டுள்ளார். அத்­துடன் இதன்­போது கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்ட பட­கோட்­டி­யாக செயற்­பட்­ட­தாக கூறப்­படும் இலங்­கை­யரை மட்டும் 14 நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இந் நிலையில், குறித்த 103 ரோஹிங்யா அக­தி­க­ளையும் மிரி­ஹா­னைக்கு அழைத்­து­வரும் வரை அவர்கள் சிறைச்­சா­லைகள் அதி­கா­ரி­களின் பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் இல்லை என கூறப்­ப­டு­கின்­றது.
பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட மியன்மார் பிர­ஜை­க­ளுக்­கான மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக அவர்கள் அனை­வரும் காங்­கே­சன்­துறை முகத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்ட பின்னர் தற்­போது யாழ்., சிறை வளா­கத்தில் பிரத்­தி­யேக மண்­டபம் ஒன்றில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இவர்­க­ளுக்கு துரித கொவிட் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு, அவர்கள் காங்­கே­சன்­துறை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர். பின்னர் அவர்கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த முகாம் பகு­திக்கு மல்­லாகம் நீதிவான் சென்று பார்­வை­யிட்டார்.
இதன்­போது, ரோஹிங்யா அக­தி­களின் நல­னுக்­காக, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனின் ஆலோ­ச­னைக்கு அமைய சட்­டத்­த­ர­ணி­க­ளான ரஜீந்ரன் ராம­சந்ரன் மற்றும் அர்ச்­சனா ஆகியோர் முன்­னி­லை­யா­கினர்.

அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­லய அதி­கா­ரி­களும் இதன்­போது அங்கு பிர­சன்­ன­மா­கினர்.

இதன்­போது ரோஹிங்யா பிர­ஜை­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணிகள் முன்­வைத்த விட­யங்­களை ஆராய்ந்த மல்­லாகம் நீதிவான், அவர்­களை மிரி­ஹானை தடுப்பு முகா­முக்கு அனுப்­பவும், அவர்கள் தொடர்பில் அர­சாங்­கமும் அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­லய அதி­கா­ரி­களும் இணைந்து பொருத்­த­மான நட­வ­டிக்­கை­யினை எடுக்­கவும் ஆலோ­சனை வழங்­கினார்.

குறித்த ரோஹிங்யா பிர­ஜை­க­ளுக்கு பல்­வேறு அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், தொண்டு நிறு­வனங்கள் தேவை­யா­ன­வற்றை வழங்கி வரு­வ­தாக யாழ். சிறைச்­சாலை வளாக தக­வல்கள் தெரி­வித்­தன.

இந் நிலையில் குறித்த ரோஹிங்யா பிர­ஜைகள் மிரி­ஹா­னைக்கு மிக விரைவில் அழைத்து வரப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

ஏற்­க­னவே இலங்­கையில் ரோஹிங்யா அக­திகள் குழு­வொன்று அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­லய தலை­யீட்­டுடன் இலங்­கையில் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­களை அகதி அந்­தஸ்து கொடுத்து பொறுப்­பேற்க அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் முன் வந்­துள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. இந் நிலையில் அதற்­கான சட்டத் தேவையை பூர்த்தி செய்ய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் மற்றும் அவர்­க­ளுடன் இணைந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மை­யி­லான குழு­வினர் நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுத்து வரு­கின்­றனர்.

குறித்த ரோஹிங்யா பிர­ஜைகள் கல்­கிசை பகு­தியில் தங்­கி­யி­ருந்த போது பேரி­ன­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளான போதும், மிரி­ஹானை தடுப்பு முகாமில் இருந்த ரோஹிங்யா சிறுமி ஒரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த போதும், ரோஹிங்யா அக­திகள் ஆபத்­தான கடல் பய­ணங்­களின் போது கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளிலும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மை­யி­லான குழு­வினர் ஆஜ­ராகி அவர்­க­ளுக்­காக குரல் கொடுத்­தி­ருந்­தனர்.

தாய் நாட்டின் இரா­ணுவ, இன­வாத அடக்­கு­மு­றை­களை சகித்­துக்­கொள்ள முடி­யாமல், சொந்த மண்ணை விட்டு வெளி­யேறும் ரோஹிங்யா முஸ்லிம்கள், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பாரிய அவலங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் விடிவுக்காக, ஆபத்தான கடற்பயணங்களை முன்னெடுத்து, உயிர்வாழ உகந்த பிரதேசங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். பெண்கள், சிறுவர்கள், முதியோர் என்ற வேறு பாடின்றி இவ்வாறு தமது மண்ணை தொலைத்து நிம்மதி தேடி அலையும் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலத்தை சர்வதேசமும் அவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இந் நிலையில், சொந்த மண்ணில் வாழ நாதியற்று அகதிகளாக தமக்கென பூமி தேடி அைலயும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கவும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உலக முஸ்லிம் சமூகம் முன் வரவேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.