ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

0 303

எம்.எப்.எம்.பஸீர்

வாஹித் லெப்பை மொஹம்­மது பர்சான் 46 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்தை. ஹங்­வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்­றினை நடாத்திச் செல்­பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணி­ய­ளவில், முகத்தை மறைத்­துக்­கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தாரி, முன்­னெ­டுத்த துப்­பாக்கிச் சூட்டில் பர்சான் உயி­ரி­ழந்தார். இந்த துப்­பாக்கிப் பிர­யோகச் சம்­பவம் சி.சி.ரி.வி. காணொ­ளி­களில் மிகத் தெளி­வாக பதி­வா­கி­யி­ருந்த நிலையில், அக்­காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி பெரும் அதிர்ச்­சியை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மொஹம்­மது பர்சான் ஹங்­வெல்லை பொலிஸ் நிலை­யத்தின் சிவில் பாது­காப்புக் குழுவின் அங்­கத்­தவர். இவ­ரது உடன் பிறந்த இரட்டை சகோ­த­ரர்­களில் ஒருவர் மீது கடந்த ஒக்­டோபர் மாதம் கூரிய ஆயு­தங்கள் கொண்டு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டி­ருந்­தது. வீடு புகுந்து அத்­தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்ள போதும் பொலிஸ் புத்­த­கங்­களில், வீட்­டுக்குள் திருட வந்­த­வர்­க­ளுடன் போரா­டி­யதில் அவர் வெட்டுக்­கா­யங்­க­ளுடன் காணப்­பட்­ட­தா­கவே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­ப­வத்தை தொடர்ந்து, சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் மொஹம்­மது பர்சான் தனது ஒத்­து­ழைப்பை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்தார். குறித்த சந்­தேக நபர்கள், டுபா­யி­லி­ருந்து, ஹங்­வெல்­லையின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற நினைக்கும் பாதாள உலக தலைவன் ஒரு­வனின் கீழ் செயற்­பட்ட நபர்­க­ளாவர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த 18 ஆம் திகதி மொஹம்­மது பர்சான் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்றார். குறித்த தினம் இரவு, ஹங்­வெல்லை நகரின் குறுக்கு வீதியில் அமைந்­துள்ள குறித்த உண­வ­கத்தை அவர் மூடு­வ­தற்கு தயா­ரான போது கடையின் சேவை­யா­ளர்கள் இருவர் கடைக்கு முன்­பாக இருந்­துள்­ளனர். அப்­போது மோட்டார் சைக்­கிளில் வந்த இருவர் ‘ சிகரட் ‘ கேட்­டுள்­ளனர். ஒரு சேவை­யாளர் வந்து சிகரட் எடுத்துச் சென்று கொடுக்க முற்­பட்டு, பணம் கோரி­ய­போது பணம் இல்லை என மோட்டார் சைக்­கிளில் வந்த ஒருவர் கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அந்த சேவை­யாளர் சிக­ரட்டை திருப்பி எடுத்துச் சென்று, காசாளர் மேசை­யி­லி­ருந்த பர்­சா­னி­டமே மீள கொடுத்­துள்ளார். அடுத்த கனம், மோட்டார் சைக்­கிளில் இருந்து இறங்கி கடைக்குள் நுழைந்­துள்ள துப்­பாக்­கி­தாரி, காசாளர் மேசை­யி­லி­ருந்­த­வாறு காசு எண்ணிக் கொண்­டி­ருந்த பர்­சானின் நெஞ்சுப் பகு­தியை இலக்கு வைத்து தொடர்ச்­சி­யாக நான்கு துப்­பாக்கி வேட்­டுக்­களை தீர்த்த பின்னர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து உண­வக ஊழி­யர்கள் பர்­சானை உட­ன­டி­யாக பாதுக்கை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த போதும், அவர் உயி­ரி­ழந்­தி­ருந்­த­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் அறி­வித்­தன.

இந்­நி­லை­யி­லேயே ஹங்­வெல்ல பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் வசந்த குமார தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
அதன்­படி, துப்­பாக்கிச் சூட்­டினை நடாத்த துப்­பாக்­கி­தா­ரிகள் வருகை தந்­த­தாக கூறப்­படும் மோட்டார் சைக்கிள் ஹங்­வெல்லை – பஹத்­கம பகு­தியில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. அதன் எஞ்ஜின் இலக்கம், செசி இலக்கம் ஆகி­யன அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இலக்­கத்­த­க­டு­களும் இருக்­க­வில்லை. இத­னை­விட மோட்டார் சைக்­கிளை சுற்றி மிளகாய்ப் பொடி தூவப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் பொலிஸ் விசா­ர­ணை­களில், கொல்­லப்­பட்ட பர்­சானின் சகோ­த­ர­ருக்கு டுபா­யி­லி­ருந்து கிடைத்த வட்ஸ் அப் குறுஞ்செய்தி ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. கொலை நடந்த இரவு, தற்­போது டுபா­யி­லி­ருப்­ப­தாக நம்­பப்­படும் லலித் எனும் பாதாள உலக குழுத் தலைவன் ‘நடந்­துள்­ளதை நன்­றாக பார்’ என அந்த குறுஞ்ச் செய்­தியில் அனுப்­பி­யுள்ளார். இது குறித்து பொலி­ஸாரின் கவனம் திரும்­பி­யுள்­ளது.

ஹங்­வெல்லை நகரில் வர்த்­த­க­ர்களிடம் அச்­சு­றுத்தி கப்பம் கோரும் நோக்கில், வர்த்­த­கர்­களை அச்­ச­ம­டைய செய்ய, டுபா­யி­லி­ருந்­த­வாறு ஹங்­வெல்­லையில் தம்மை சண்­டி­யர்­க­ளாக நிரூ­பிக்க தடு­மாறும் பாதாள உலக தலை­வர்­க­ளான சமில மற்றும் லலித் ஆகி­யோரின் உத்தரவின் பிரகாரம், அவர்களது சகாக்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியிருப்பதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய ஹங்வெல்லை பொலிசாரும், மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.