பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வல­வா­ஹென்­கு­ன­வெவே தம்­ம­ர­தன தேரர்

0 221

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இன்று பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் சில பெளத்த பிக்கு மாண­வர்கள் ஸஹ்­ரானைப் போன்­ற­வர்கள். தலை­மயிர் மற்றும் தாடி வளர்த்துக் கொண்டு இருக்­கி­றார்கள். லெனின் கொள்­கை­களைப் பின்­பற்­றிக்­கொண்டு இவர்கள் தலி­பான்கள் போன்று செயற்­ப­டு­கின்­றார்கள். தலி­பான்கள் செய்யும் வேலை­க­ளையே செய்­கி­றார்கள் என மிகிந்­தலை ரஜ­ம­கா­வி­கா­ரையின் அதி­பதி வல­வா­ஹென்­கு­ன­வெவே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

மிகிந்­தலை பிர­தே­சத்தைச் சேர்ந்த வறிய குடும்­பங்­களின் 100 பிள்­ளை­க­ளுக்கு இல­வ­ச­மாக பாட­சாலை உப­க­ர­ணங்கள் பகிர்ந்­த­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே தம்­ம­ர­தன தேரர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் பெளத்த குரு மாண­வர்­க­ளுக்கு 3 வரு­டங்­களில் அல்­லது நான்கு வரு­டங்­களில் பல்­க­லைக்­க­ழ­கங்­களை விட்டும் வெளி­யேறும் வகையில் சட்டம் கொண்டு வரப்­பட­வேண்டும். இன்று பாலி மற்றும் பெளத்த பல்­க­லைக்­க­ழ­கங்கள் உட்­பட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் சில பெளத்த குரு­ மா­ண­வர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக முழு பல்­க­லைக்­க­ழக கட்­ட­மைப்பும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. மாணவர் சங்­கங்­களைச் சேர்ந்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அர­சியல் கட்­சி­க­ளுடன் இணைந்து அக்­கட்­சி­க­ளுக்கு அடி­ப­ணி­கி­றார்கள். பின்பு கண்­ணீர்­புகை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­றார்கள். பின்பு சிறைக்குச் செல்­கி­றார்கள். அவர்­களால் கட­வுச்­சீட்டு பெற்­றுக்­கொள்ள முடி­யாமற் போகி­றது. பொலிஸ் சான்­றிதழ் பெற முடி­யாது போகி­றது.

இதனால் இந்­நி­லைமை உரு­வா­கா­ம­லி­ருப்­ப­தற்கு மாற்று வழி­காண வேண்டும். நாட்டில் சிறந்த மாண­வர்­களை உரு­வாக்கும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் கொத்­த­லா­வலை பல்­க­லைக்­க­ழகம் மற்றும் வட­கி­ழக்­கி­லி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­கங்­களே.இப்­பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் மாண­வர்கள் ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் மாண­வர்­க­ளைப்­போ­லன்றி தங்­க­ளது காலத்தில் முறை­யாகக் கற்று நாட்­டுக்குப் பயன்­த­ரு­ப­வர்­க­ளாக வெளி­யே­று­கி­றார்கள்.

ஜனா­தி­பதி, பிர­தமர்,அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்றம் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை வளர்க்­க­வேண்டும். நாட்டில் சிங்­க­ளவர்,தமிழர்,முஸ்­லிம்கள் என மூவி­னத்­த­வர்கள் இருக்­கின்­றனர். சிங்­க­ள­வர்­க­ளுக்கு தமிழ் மொழி தெரி­யாது. தமிழர் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு சிங்­கள மொழி தெரி­யாது. மக்­க­ளுக்கு இந்த மொழி பிரச்­சினை கார­ண­மா­கவே கல­வ­ரங்கள் உரு­வா­கின்­றன.இனக்­க­ல­வரம் உரு­வா­கி­றது.இந்­நி­லை­மையை சீராக்க கல்வி அமைச்சர் முன்­வர வேண்டும்.

எனவே க.பொ.த.சாதா­ரண தரம் வரை சிங்­கள மாண­வர்­க­ளுக்குத் தமிழ் மொழி போதிக்­கப்­ப­ட­வேண்டும். இதே போன்று தமிழ் முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு சிங்­கள மொழி போதிக்­கப்­பட வேண்டும் இதற்­கென அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென நான் கோரிக்கை விடுக்­கிறேன். அப்­ப­டி­யென்றால் 10 வரு­டங்­களின் பின்பு இப்­பி­ரச்­சினை தீர்ந்­து­விடும்.

அத்­தோடு நாடெங்கும் போதைப் பொருள் வியா­பித்­துள்­ளது. என்­றாலும் போதைப்­பொ­ருளை நாட்­டுக்குக் கொண்டு வரு­வோரைக் கைது செய்­யாது மாண­வர்­களின் புத்­த­கப்­பை­களை சோத­னை­யி­டு­கி­றார்கள்.

இதனால் இன்று மாண­வர்­களின் மன­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் வாதிகள் நாட்­டைச்­சீ­ர­ழித்­து­விட்­டார்கள். பெற்றோர் அடுத்து வரும் தேர்­தலில் சிந்­தித்து வாக்­க­ளிக்­க­வேண்டும்.

இரா­ணுவம், பொலிஸ், உளவுப் பிரிவு, சிவில் பாது­காப்பு செய­லணி என்று அனைத்துப் பிரி­வு­க­ளையும் இணைந்து போதைப்­பொ­ருளை மாண­வர்­க­ளிடம் தேடு­கி­றார்கள். பொலிஸ் மோப்­பநாய் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஆனால் போதைப்­பொருள் கடல் மார்க்­க­மாக கொண்டு வரப்­ப­டு­கி­றது. இதனைத் தடை­செய்ய வேண்டும். போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­களை இனங்­கண்டு கைது செய்ய வேண்டும்.அவ்­வா­றென்­றாலே போதைப்­பொ­ருளை ஒழிக்க முடியும்.

தற்­கொலை குண்­டு­தாரி ஸஹ்ரான் தாடி வளர்த்துக் கொண்­டுதான் தாக்­கு­தலை முன்­னெ­டுத்தார். அதன் பின்பு அநே­க­மானோர் ஸஹ்­ரான்­போன்று மாறினார்கள். தலைமயிர், தாடி வளர்த்துக் கொண்டார்கள். எமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் பிக்கு பட்டதாரி மாணவர்களும் ஸஹ்ரான் போன்று மாற்றமடைய ஆரம்பித்தார்கள்.
இன்று பாலி மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரி பிக்கு மாணவர்கள் குறிப்பாக கலைப்பீட மாணவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகிறார்கள். லெனினின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். புத்தபெருமானின் போதனைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.