காப்பாற்றப்படுமா காதிநீதிமன்ற கட்டமைப்பு?

0 224

ஏ.ஆர்.ஏ.பரீல்

தசாப்த கால­மாக இழு­ப­றி­நி­லையில் இருந்து வந்த முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் விரைவில் நிறை­வுக்கு வரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ற­து.

பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது கொள்கை வேறு­பா­டு­களை புறந்­தள்ளி முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதில் ஏக­ம­ன­தாக ஒன்­று­பட்­டுள்­ளனர்.

கடந்த 8 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நீதி, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் அர­சியல் சீர்­தி­ருத்த அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் சந்­தித்து இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் முன்னாள் நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­ சப்­ரி­யினால், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் 9 பேர் கொண்ட ஆலோ­சனைக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் தலைவர் உட்­பட 5 பேர் இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்
குழுவின் சிபா­ரி­சு­க­ளுக்கு அங்­கீ­காரம்
முஸ்லிம் சமூ­கத்தில் பல­தார மணம் தொடர்பில் முஸ்லிம் அமைப்­புகள் சில தொடர்ந்து எதிர்ப்பு வெளி­யிட்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்­நி­லையில் 2021.03.08 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தில் பல­தார மணத்தை தடை செய்­வ­தற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு அங்­கீ­கா­ர­ம­ளித்து பெண்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தது.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான ஆலோ­ச­னைக்­குழு பல­தாரமணம் சில நிபந்­த­னை­க­ளுடன் அ-னு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என்ற சிபா­ரி­சினை முன்­வைத்­துள்­ளது. வை.எம்.எம்.ஏ. மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை உட்­பட முஸ்லிம் அமைப்­புகள் முன்­வைத்த ஆலோ­ச­னைகள் ஆலோ­சனைக் குழு­வினால் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட்­டன. இத்­தி­ருத்­தங்­க­ளுக்கு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் ஏக­ம­ன­தான விருப்­பத்­தினைத் தெரி­வித்­தனர்.

அத்­தோடு குறிப்­பிட்ட அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தில் காதி­நீ­தி­மன்ற முறைமை முற்­றாக ஒழிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இவ்­வி­ட­யத்தில் காதி­நீ­தி­மன்ற முறைமை ஒழிக்­கப்­ப­டக்­கூ­டாது. காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்­பி­லுள்ள குறை­பா­டுகள் களையப்­ப­ட­வேண்டும், காதி­நீ­தி­ப­தி­களின் தகைமை அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும், பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட­வேண்டும், உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஆலோ­ச­னைக்­குழு சிபா­ரி­சினை முன்­வைத்­தி­ருந்­தது.

காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு மேலதிக மஜிஸ்­தி­ரேட்டின் அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். இதன்­மூலம் பிள்ளை தாப­ரிப்பு,மனைவி தாப­ரிப்பு போன்ற தபா­ரிப்­புகள் பிர­தி­வா­தி­களால் செலுத்­தப்­ப­டா­விட்டால் மஜிஸ்­திரேட் நீதி­மன்­றங்­க­ளுக்கு காதி­நீ­தி­ப­திகள் வலி­யு­றுத்தக் கட்­ட­ளையை (Enforcement Order) அனுப்பி வைக்­காது அவர்­க­ளா­கவே இந்த தாப­ரிப்­பினை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்குக் பெற்­றுக்­கொ­டுக்க முடியும். இந்த சிபா­ரி­சுக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னர்கள் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளார்கள். அத்­தோடு மணப்­பெண்ணின் கையொப்பம் திரு­ம­ணப்­ப­தி­வின்­போது கட்­டா­ய­மாகப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். மேலும் ‘வொலி’யின் பிர­சன்னம் திரு­மண பதி­வின்­போது மணப்­பெண்ணின் விருப்­பத்தின் பேரில் அமை­யலாம் என்னும் சிபா­ரிசும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

காதி­ நீ­தி­மன்­றங்கள் ஒழிக்­கப்­பட
வேண்டும் என்றால் மாற்று வழி
காதி­நீ­தி­மன்­றங்கள் இலங்­கையில் முற்­றாக ஒழிக்­கப்­ப­ட­ வேண்டும் என்று 2021.03.08 ஆம் திகதி அமைச்­ச­ரவை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இந்­நி­லையில் காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­யாது பலப்­ப­டுத்த வேண்டும். மீண்டும் இதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என சப்­ரி­ ஹ­லீம்தீன் தலை­மை­யி­லான ஆலோ­ச­னைக்­குழு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
அத்­தோடு அவ்­வாறு காதி­நீ­தி­மன்ற முறைமை முற்­றாக ஒழிக்­கப்­பட்டால் அதற்­கான மாற்­று­வழி எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்­பிலும் ஆலோ­ச­னைக்­குழு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்­ளது.

காதி­ நீ­தி­மன்­றங்கள் ஒழிக்­கப்­பட்டால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து விட­யங்கள் பொது விவாக சட்­டத்தின் கீழ் ஆளப்­பட வேண்­டிய நிலைமை ஏற்­ப­டலாம். அவ்­வா­றான நிலைமை உரு­வானால் முஸ்­லிம்கள் மாவட்ட நீதி­மன்­றங்­களை நாட­வேண்டி ஏற்­படும். இந்­நி­லை­மையைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே காதி ­நீ­தி­ப­தி­க­ளுக்குப் பதி­லாக காதி­நீ­தி­பதி என்ற பெயரைத் தவிர்த்து முஸ்லிம் கொன்­சி­லி­யேட்டர் (Muslim Conciliator) என்ற பெயரில் நிய­ம­னங்­களை வழங்­க­வேண்டும். குடும்ப சம­ர­சத்­துக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். இங்கு தீர்க்­கப்­பட முடி­யாத குடும்­பப் ­பி­ரச்­சி­னைகள் மாத்­தி­ரமே மாவட்ட நீதி­மன்­றத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். இந்த Conciliator பத­வியில் இருப்­ப­வர்­க­ளுக்கு காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களில் 75% த்தைக் கொடுத்­துள்ளோம்.’ என அக்­கு­ழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

காதி­ நீ­தி­மன்­றங்கள் பறி­போகும் சூழ்­நி­லையில் அமைச்­ச­ரவை தனது தீர்­மா­னத்தில் உறு­தி­யாக இருந்தால் மாத்­தி­ரமே இவ்­வா­றான கொன்­சி­லி­யேட்­டர்­களை நிய­மிப்­ப­தற்கு ஆலோ­சனைக் குழு சிபா­ரிசு செய்­துள்­ளது.

நாட்டில் ‘அர­க­லய’ போராட்­டத்தின் பின்பே இன்று இவ்­வா­றான சுமுக நிலை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. கோத்­தா­பய ராஜ­பக்ஷ அதி­கா­ரத்தில் இருந்த ஆட்சி தொடர்ந்­தி­ருந்தால் இன்று நிச்­சயம் காதி நீதி­மன்ற முறைமை இல்­லாமற் செய்­யப்­பட்­டி­ருக்கும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்
ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாட்­டினை விளக்­கினார்.

அவர் அங்கு விளக்­க­ம­ளிக்­கையில் “காதி­நீ­தி­மன்ற முறை­மையில் பெரும் குறை­பா­டுகள் உள்­ளன. ஆலோ­ச­னைக்­கு­ழுவும் தனது அறிக்­கையில் இதனைச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. காதி­நீ­தி­மன்ற முறை­மையின் கீழ் தங்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தாக பெண்கள் முறை­யி­டு­கி­றார்கள். காதி நீதி­மன்­றங்­களின் தரம், காதி நீதி­ப­தி­களின் தரம் உயர்த்­தப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு உரிய கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மூலம் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பைத் தர­மு­யர்த்­தலாம். எனவே காதி­நீ­தி­மன்­றங்கள் ஒழிக்­கப்­படக் கூடாது என்ற நிலைப்­பாட்­டிலே நாங்கள் இருக்­கிறோம்.

மேலும் இக்­கட்­ட­மைப்பில் பிரச்­சி­னைகள் இருந்தால் நாம் பேசித் தீர்த்துக் கொள்­ளலாம்.
நீதி­அ­மைச்சர் அடுத்­த­கட்ட பேச்சு வார்த்­தையில் இறுதித் தீர்­மா­னத்­துக்கு வந்து, சிபா­ரி­சு­களை சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வரைபு செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சட்ட திருத்­தங்கள் கடந்து வந்த பாதை
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு பல முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. குழுக்கள் நிய­மிக்­க­பட்டு சிபா­ரி­சு­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இவ்­வா­றான முன்­னெ­டுப்­பு­களில் 2009இல் அக்­கா­லத்தில் நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்ட குழு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். இக்­கு­ழுவின் தலை­வ­ராக ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். குழுவில் உல­மாக்கள், நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் அங்கம் பெற்­றி­ருந்­தனர். 18 உறுப்­பி­னர்­களைக் கொண்ட இக்­குழு 2009இல் தனது பணி­களை ஆரம்­பித்து 2018 ஜன­வ­ரியில் தனது அறிக்­கையை அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ள­விடம் கைய­ளித்­தது.

இக்­கு­ழுவின் தலைவர் சலீம் மர்­சூப்­பினால் குழு அங்­கத்­த­வர்­களை ஒரே கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்ள முடி­யா­மற்­போ­னது. குழு இரண்­டாகப் பிள­வு­பட்­டது. குழு­விற்குள் சில திருத்­தங்­களில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு அங்­கத்­த­வர்கள் கையொப்பம் அறிக்­கையில் பெற்­றுக்­கொள்­ளப்­பட இருந்த நிலையில் அங்­கத்­த­வர்­களில் 9 பேர் வேறாக ஒரு அறிக்கை தயா­ரித்து தலை­வ­ரிடம் கைய­ளித்­தனர்.

இக்­குழு ஒரு­மித்து திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­தி­ருந்தால் 2018ஆம் ஆண்­டிலே திருத்­தங்­களை நிறை­வேற்­றி­யி­ருக்க முடியும். அவர்­க­ளி­டையே நில­விய முரண்­பாடு கார­ண­மா­கவே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் இழு­ப­றியில் இருக்­கின்­றன.
அன்­றைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் இரு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டதால் அவர் எந்த அறிக்­கையை ஏற்­றுக்­கொள்­வது எனத் திண்­டா­டினார். இந்­நி­லையில் அறிக்­கை­களை ஆராய்ந்து தீர்­மானம் ஒன்­றினை எய்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை உப குழு­வொன்­றினை நிய­மித்தார். இக்­கு­ழுவில் அப்­போ­தைய அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்­தபா, சந்­தி­ராணி பண்­டார, சுதர்­சனி பெர்­ணான்டோ புள்ளே ஆகியோர் அங்கம் வகித்­தனர். இக்­கு­ழு­வி­னாலும் தீர்­மா­ன­மொன்­றினை எட்­ட­மு­டி­யாமற் போனது.

இந்­நி­லை­யிலே ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது. புதிய அர­சாங்­கத்தில் நீதி­ய­மைச்­ச­ராக அலி­சப்ரி நிய­மனம் பெற்றார். இத­னை­ய­டுத்தே அமைச்சர் அலி­சப்ரி சட்டத் திருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் 9 பேர் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின்
அறிக்கை கிடைக்கும் வரை ஒத்­தி­வைப்பு
அப்­போதை நீதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்த சட்­டத்­த­ரணி அலி­சப்ரி கடந்த பெப்­ர­வரி மாதம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்­த­மையை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். குறிப்­பிட்ட அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு அன்று இன­வாத அமைச்­சர்கள் சிலர் பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்­டார்கள். இத­னை­ய­டுத்து அவ் அமைச்­ச­ரவைப் பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அத்­தோடு அன்று அமைச்­ச­ரவை கூட்­டத்­துக்கு தலைமை வகித்த அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தில்லை என அறி­வித்தார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்கை
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்கை அதன் தலைவர் ஞான­சார தேர­ரினால் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அறிக்­கையில் 43 பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பிட்ட அறிக்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்டும் என்ற சிபா­ரிசும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அத்­தோடு அரச சேவை­யி­லுள்ள முஸ்லிம் பெண்­க­ளுக்கு ‘இத்தா’ கால விடு­முறை ரத்துச் செய்­யப்­பட வேண்டும் என்றும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

‘அர­க­லய’ போராட்­டத்­தி­னை­ய­டுத்தே முன்னாள் ஜனா­தி­பதி பதவி துறந்தார். நாட்டை விட்டும் வெளி­யேறிச் சென்றார். இவ்­வா­றான ஒரு அர­சியல் மாற்றம் நிக­ழா­ம­லி­ருந்தால் காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு எத்­தனை எதிர்ப்­புகள் மேலெ­ழுந்­தாலும் அகற்­றப்­பட்­டி­ருக்கும். முஸ்லிம் சமூகம் பொதுச்­சட்­டத்தின் கீழே ஆளப்­ப­டு­வ­தற்கு வழி சமைந்­தி­ருக்கும். முஸ்­லிம்கள் நாம் நூற்­றாண்டு கால­மாக அனு­ப­வித்து வந்த உரி­மை­களை இழந்­தி­ருப்போம். எமது குடும்பப் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்ள நாம் மாவட்ட நீதி­மன்றப் படி­களை ஏறி­யிறங்க நேர்ந்­தி­ருக்கும்.

அர­சியல் மாற்­றங்கள் நிகழ்ந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றபின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ அறிக்­கையை அமுல்­ப­டுத்தப் போவ­தில்லை என்று தெரிவித்தார். அதன்பின்பே முஸ்லிம் சமூகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டதெனக் கூறலாம்.

காதிநீதி மன்றக் கட்டமைப்பை
காப்பாற்றித் தாருங்கள்
ஏற்கனவே அமைச்சரவை காதிநீதிமன்றக் கட்டமைப்பை இல்லாமற் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் நீதியமைச்சரை அண்மையில் சந்தித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், ‘அமைச்சரவையில் கலந்துரையாடி முஸ்லிம் சமூகத்தின் நூற்றாண்டு கால வரலாறு கொண்ட காதிநீதிமன்ற கட்டமைப்பை காப்பாற்றித் தாருங்கள்’ எனக் கோரியுள்ளார்.
காதிநீதிமன்றங்களுக்கு எதிராக பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதனை மறுப்பதற்கில்லை. ஒரு சில காதிநீதிவான்களின் தவறான செயல்களால் இக்கட்டமைப்பையே இல்லாமற் செய்ய வேண்டும் என போராடுவது ஆரோக்கியமானதல்ல.

காதிநீதிமன்ற கட்டமைப்பு பலப்படுத்த வேண்டும். காதிநீதிபதிகள் ஒரு சில ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளுக்கே பணி புரிகிறார்கள். அவர்களுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித கட்டிட வசதிகளும் வழங்கப்பட வில்லை. ஒரு சிலரே நீதிவான் நீதிமன்ற கட்டமைப்புக்குள் விசாரணைகளைத் தொடர்கின்றனர். ஏனையோர் பாடசாலைகளிலும், பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

மொத்தத்தில் காதிநீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும். தகுதியானவர்கள் காதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும். இதுவே ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளாகும். தியமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.