மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியிடம் மோசடி தொடர்பில் விசாரணை

0 708

மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்­துல்லாஹ் யாமீன், அவர் பத­வியில் இருக்­கும்­போது முறை­கே­டான வகையில் நிதிக் கொடுக்கல் வாங்­கல்­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டு தொடர்­பாக முதல் தட­வை­யாக மாலை­தீவுப் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

கடந்த சனிக்­கி­ழமை தலை­நகர் மாலேயில் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் எதி­ரா­ளர்­களும் எதிரும் புதி­ரு­மான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து இந்த விசா­ரணை இடம்­பெற்­றுள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய வாக்­க­ளிப்­புக்கு முன்­ன­தாக அவ­ரது தனிப்­பட்ட கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்ட 22 மில்­லியன் ரூபியா (1.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) ரொக்கப் பணம் தொடர்பில் தன்­னிடம் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக கடந்த செப்­டம்பர் மாதம் நடை­பெற்ற தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த யாமீன் தனது ஆத­ர­வா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

இது அர­சியல் நோக்கம் கொண்­டது என 59 வய­தான அவர் தனது கட்சித் தலை­மை­ய­கத்­திற்கு வெளியே வைத்து தெரி­வித்தார். அவை சாதா­ரண கொடுக்கல் வாங்­கல்­க­ளாகும். நான் போதைப்பொருள் கடத்தவுமில்லை, நிதி மோசடி செய்யவுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.