உள்ளூராட்சி சபைகளுக்கு புதிதாக வட்டார எல்லை நிர்ணயம்

0 267

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வட்­டா­ரங்கள் இனப்­ப­ரம்பல், நிலத்­தோற்றம் மற்றும் பொது வச­தி­களை கருத்திற் கொண்டு புதி­தாக எல்லை நிர்­ண­யத்­துக்கு உட்­ப­டுத்­தப்­படும். தேசிய எல்லை நிர்­ண­யக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காலக்­கெ­டு­வுக்கும் எல்லை நிர்­ணயப் பணி­களை பூர்த்தி செய்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேசிய எல்லை நிர்­ண­யக்­குழு எதிர்­பார்த்­துள்­ளது என எல்லை நிர்­ண­யக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான கே. தவ­லிங்கம் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் எல்லை நிர்­ணயம் தொடர்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில் ‘எல்லை நிர்­ண­யப்­ப­ணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் பொது மக்­களின் ஆலோ­ச­னை­களும் கோரப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 25 ஆம் திக­திக்கு முன் மக்கள் தங்­க­ளது ஆலோ­ச­னை­களை எழுத்து மூலம் கொழும்பு, நாரஹேன்­பிட்டி, நில அளவைத் திணைக்­க­ளத்தில் இயங்கி வரும் எல்லை நிர்­ணய தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு அனுப்பி வைக்க முடியும்.

மாவட்ட ரீதியில் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் அர­சாங்க அதி­பர்­களின் தலை­மையில் உப­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அக்­கு­ழுக்கள் அந்­தந்த மாவட்­டங்­களின் எல்லை நிர்­ணய பணி­களை முன்­னெ­டுக்கும். இக்­கு­ழுவில் நில அள­வைத்­தி­ணைக்­களம், புள்ளி விப­ரத்­தி­ணைக்­களம், தேர்தல் திணைக்­களம், உள்­ளூ­ராட்சித் திணைக்­களம் என்­ப­வற்றை உள்­ள­டக்கி அங்­கத்­துவம் பெற்­றுள்­ளனர். மாவட்ட குழுக்­களின் எல்லை நிர்­ணய அறிக்­கைகள் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­படும். அந்த அறிக்­கைகள் தலைமைக் காரி­யா­ல­யத்­தில் தேசிய எல்லை நிர்­ணய குழு­வினால் பரி­சீ­லிக்­கப்­படும். மாவட்ட குழுக்­களின் எல்லை நிர்­ண­யத்தில் ஏதும் பிரச்­சி­னைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்­யப்­படும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையை 50 வீதத்தால் குறைப்­ப­தற்­கா­கவே எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 28ஆம் திக­திக்கு முன்பு எல்லை நிர்­ணய அறிக்கை பிர­த­ம­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரப்­பட்­டுள்­ளது.

குடி­சன மதிப்­பீட்டு திணைக்­களம் 2020 ஆம் ஆண்டு மேற்­கொண்ட மதிப்­பீட்­ட­ள­வி­லான சனத்­தொகை தர­வு­களை கவ­னத்திற் கொள்­ளு­மாறு மாவட்ட எல்லை நிர்­ண­யக்­கு­ழுக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக தேசிய எல்லை நிர்­ணயக் குழு கள­வி­ஜ­யங்­களை மேற்­கொள்ளமாட்­டாது. அவ­சியம் ஏற்­பட்டால் மாத்திரமே கள விஜயங்களை மேற்கொள்ளும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவதற்கு உதவும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எல்லை நிர்ணயக்குழு தனது பணிகளை நிறைவு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.