யார் இந்த கானிம் அல்-முஃப்தா ?

கத்தார் ஃபிஃபா தொடக்க விழாவில் குர்ஆன் வசனங்களை ஓதிய இளைஞர்

0 386

கத்தார் மிகப் பிர­மாண்­ட­மான முறையில் 2022 ஆம் ஆண்­டுக்­கான உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட தொடரை நடாத்­து­கி­றது. இப் போட்­டியை நடத்­து­வ­தற்­காக அந்­நாடு 220 பில்­லியன் டொலர்­களை செல­விட்­டுள்­ளது.

2010 ஆம் ஆண்டு ஃபிபா செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கான வாக்­கெ­டுப்பில் உலகக் கோப்பை நடத்­து­வ­தற்­கான உரி­மையை கத்தார் பெற்­றது. வாக்­கெ­டுப்பில் அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா, ஜப்பான் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாடு­களை கத்தார் தோற்­க­டித்­தி­ருந்­தது. அன்று முதலே உலக கோப்பை போட்­டி­களை நடத்­து­வதை மிகப்­பெ­ரிய பெருமையாக கத்தார் அரசு கரு­தி­யது. மறு­புறம் அந்­நாட்டின் மீதான விமர்­ச­னங்­களும் எழத் தொடங்­கின.

இலஞ்சம் கொடுத்­துதான் இந்தப் போட்­டிக்­கான உரி­மையை கத்தார் பெற்­றது என்ற குற்­றச்­சாட்டு எழுந்­தது. ஆனால் விசா­ர­ணையில் அது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.
அதன் பிறகு தன்­பா­லின சேர்க்கை பிர­சா­ரங்­க­ளுக்கு தடை, கட்­டு­மானப் பணி­களில் ஆயி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்கள் உயி­ரி­ழந்­த­தாக எழுந்த குற்­றச்­சாட்டு, மது­பா­னங்­க­ளுக்குக் கட்­டுப்­பாடு போன்­ற­வற்றின் கார­ண­மாக கத்­தா­ருக்கு எதிர்ப்பு எழுந்­தது. ஆனால் அவற்­றை­யெல்லாம் கடந்து, போட்­டிகள் ஆரம்­ப­மாகி விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கின்­றன.

கடந்த நவம்பர் 20, ஞாயிற்­றுக்­கி­ழமை அல் பைத் ஸ்டேடி­யத்தில் நடந்த 2022 உலகக் கோப்­பையின் தொடக்க விழாவில் பல சுவா­ரஸ்­ய­மான நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. அவற்றில் ஒன்­றுதான் கத்தார் 2022 உலகக் கோப்­பையின் தொடக்க நிகழ்வில் புனித அல் குர்ஆன் வசனம் ஓதப்­பட்டு அதன் விளக்கம் ஆங்­கி­லத்தில் கூறப்­பட்­ட­மை­யாகும். உலக கோப்பை கால்­பந்து வர­லாற்றில் குர்ஆன் வச­னங்கள் மூல­மாக நிகழ்ச்­சிகள் தொடங்­கி­யது இதுவே முதல் முறை என்று வளை­குடா ஊட­கங்கள் குறிப்­பி­டு­கின்­றன.
புனித குர்­ஆனின் வச­னத்தை கானிம் அல்-­முஃப்தா என்ற இளம் கத்­தாரி அழ­காக ஓதினார், அவர் குறிப்­பாக சூரா அல்- ஹு­ஜுராத் வசனம் 13 ஐ மூத்த ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமே­னுடனான தனது உரை­யா­டலின் போது ஓதி­ய­துடன் உலக மக்­க­ளி­டை­யே­யான ஒரு­மைப்­பாட்டின் செய்­தியை அதன் மூலம் வெளிப்­ப­டுத்­தினார்.
ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்­ஆனின் வச­னங்­களை ஓதிய இளை­ஞ­ரான கானிம் அல்-­முஃப்தா உண்­மையில் யார்?

20 வய­தான கானிம் அல் முஃப்தா Ca­u­d­al Re­g­r­e­s­sion Sy­nd­r­o­me எனப்­படும் மரபு ரீதி­யி­லான குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டவர். இந்தக் குறை­பாட்டைக் கொண்­டோ­ருக்கு பிறக்­கும்­போதே உடலின் கீழ்­பாதி பகுதி இருக்­காது. சக்­கர நாற்­காலி மூல­மா­கவும், கைகளைத் தரையில் ஊன்­றி­ய ­ப­டியும் தான் நடக்க வேண்டும்.

கானிம் வயிற்றில் கரு­வாக இருந்­த­போது கலைத்­து­வி­டும்­படி அவ­ரது தாயிடம் பலரும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும், ஆனால் அதற்கு அவர் சம்­ம­திக்­க­வில்லை எனவும் கானிம் அல்-­முஃப்­தாவின் இணை­ய­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“நான் இடது காலா­கவும் நீங்கள் வலது காலா­கவும் இருப்போம்” என்று கானிமின் தாய் தனது கண­வ­ரிடம் கூறி­ய­தா­கவும் அந்த இணை­ய­தளம் குறிப்­பி­டு­கி­றது.
உடலில் குறை­பாடு இருந்­தாலும் அதைப் பொருட்­ப­டுத்­தாமல் தான் விரும்­பிய துறை­களில் முன்­னே­றி­யதால் அவ­ரது வாழ்க்கை மற்­ற­வர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் பிர­ப­ல­மாகி இருக்­கி­றது.

இன்ஸ்­டா­கிராம், யூட்யூப் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் அவரை பல இலட்சம் பேர் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இளம் தொழில்­மு­னை­வோ­ரான அவர், ‘காரிஸா’ என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறு­வனம் ஒன்றை நடத்­து­கிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணி­யா­ளர்­க­ளுடன், இந்­நி­று­வனம் வெளி­நா­டு­க­ளிலும் வளை­குடா முழு­வதும் விரி­வ­டைந்­துள்­ளது.
தேசிய அள­விலும், சர்­வ­தேச அள­விலும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு அவர் நல்­லெண்ணத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மற்­ற­வர்­க­ளுக்கு தன்­னம்­பிக்­கை­ய­ளிக்கும் உரை­களை நிகழ்த்­து­கிறார். ஸ்கூபா டைவிங், கால்­பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்­போர்டிங் உள்­ளிட்ட பல்­வேறு தீவிர விளை­யாட்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கிறார். வளை­குடா பகு­தியில் உள்ள மிக உய­ர­மான மலைச் சிக­ர­மான ஜபல் ஷம்ஸில் கூட கானிம் ஏறி­யுள்ளார்.

எதிர்­கா­லத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­யாக வர வேண்டும் என்ற இலட்­சி­யத்­துடன் அர­சியல் விஞ்­ஞா­னத்தில் தனது கல்­லூரிப் பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்து வரும் கானிம், அல் குர்­ஆனை மன­ன­மிட்ட ஹாஃபிஸ் என்றும் அறி­யப்­ப­டு­கிறார்.

தனது குடும்­பத்தின் ஒத்­து­ழைப்­புடன் கானிம் அசோ­சி­யேஷன் எனும் நிறு­வ­னத்தை ஆரம்­பித்து, அதன் மூலம் தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு சக்­கர நாற்காலிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.