பணமோசடி வலைக்குள் மூவாயிரம் முஸ்லிம்களா?

1 606

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

திலினி பிரி­ய­மலி என்ற ஒரு மங்கை விரித்த பண­மோ­சடி வலைக்குள் மூவா­யிரம் கோடி ரூபாயும் மூவா­யி­ரத்­துக்கும் அதி­க­மான முஸ்­லிம்­களும் சிக்­கி­யுள்­ள­தாக சமூக ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன. இன்­னு­மொரு மோச­டி­யிலும் பதி­னா­லா­யிரம் கோடி ரூபாயும் எண்­ணா­யிரம் பேரும் சிக்­கி­யுள்­ள­தா­கவும் தக­வ­லுண்டு. அதில் எத்­தனை பேர் முஸ்­லிம்கள் என்­பது தெரி­யாது. நாடே பொரு­ளா­தாரச் சீர­ழி­வுக்­குட்­பட்டு வங்­கு­ரோத்­தாகி பிச்­சைப்­பாத்­திரம் ஏந்­து­கிற நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள ஒரு கால­கட்­டத்தில் திலி­னியின் முத­லீட்டுத் திரு­வி­ளை­யாட்டின் பக­டை­க­ளாக முன்னை நாள் முஸ்லிம் ஆளுனர் அசாத் சாலி உட்­பட பல அர­சியற் பிர­ப­லங்­களும் வர்த்­த­கர்­களும் உத்­தி­யோ­கத்­தர்­களும் ஏன் பௌத்த துற­வி­க­ளும்­கூட காய் நகர்த்­தப்­பட்­டுள்­ளனர் என்றும் அதே தக­வல்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இந்தத் திரு­வி­ளை­யா­டல்­பற்­றிய மேலும் பல சுவை­யான விப­ரங்கள் விரைவில் அம்­ப­ல­மா­கலாம். விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. அவை­யெல்லாம் ஒரு புற­மி­ருக்க, இவ்­வா­றான மோச­டிகள் இடம்­பெ­று­வ­தற்கும் நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார சமூகச் சூழ­லுக்கும் தொடர்­புண்டா என்­ப­தையும் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் இவ்­வா­றான மோச­டி­க­ளுக்கு ஏன் பலி­யா­கின்­றனர், அதனால் ஏற்­படும் பேரா­பத்து என்ன என்­ப­வற்­றையும் எண்­ணிப்­பார்ப்­பது நல்­லது. அதுவே இக்­கட்­டு­ரையின் நோக்­கமும்.

நாட்டின் அர­சி­யற்­ சட்­ட­கத்தின் சீர்­கேடு
இலங்­கையின் நிர்­வா­கத்­தையும், பொரு­ளா­தா­ரத்­தையும், நீதித்­து­றை­யையும் திறம்­பட இயங்க முடி­யாமல் சீர­ழித்துக் கொண்­டி­ருப்­பது நாட்டின் சிந்­தனைச் சட்­டகம். இதைப்­பற்றி ஏற்­க­னவே இப்­பத்­தி­ரி­கையில் வெளி­வந்த எனது கட்­டு­ரைகள் ஒன்­றி­ரண்டு விமர்­சித்­துள்­ளன. சுருக்­க­மாகக் கூறினால் இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு மட்­டுமே உரிய ஒரு நாடு; ஆதலால் இங்கு வாழும் ஏனைய இனங்கள் பெரும்­பான்மை இனத்தின் தயவில் வாழும் நீண்­ட­காலக் குடி­யி­னரே என்ற ஒரு பேரி­ன­வாதச் சித்­தாந்தம் அந்தச் சட்­ட­கத்தின் ஆணி­வேராய் அமைந்­துள்­ளது. அந்தச் சித்­தாந்­தமே அர­சியல் தலை­மை­யையும் ஆட்­கொண்­டி­ருப்­பதால் அர­சாங்­கமும் பொரு­ளா­தா­ரமும் சட்ட ஒழுங்கும் நீதித்­து­றையும் பெரும்­பான்மை இனத்­துக்குச் சாத­க­ம­கவே பயன்­பட வேண்டும் என்ற வரை­யப்­ப­டாத ஒரு நியதி சுதந்­திரம் கிடைத்த காலம் தொட்டே நில­வி­வந்­துள்­ளது. இந்த நிய­தியே குறிப்­பாகக் கடந்த பதின்­மூன்று வரு­டங்­க­ளாக பசுந்­த­ரையாய் இருந்த இலங்­கையை பாலை­வ­ன­மாக்­கி­யுள்­ள­தென்றால் அது மிகை­யா­காது. அந்தப் பாலை­வ­னத்தில் முளைத்த ஒரு கள்ளிச் செடியே திலினி பிரி­ய­மலி என்றும் கூறலாம்.

ஊழல்கள் மலிந்த ஓர் ஆட்­சியில் எந்த அதி­கா­ரி­யையும் பணத்­தாலோ பகட்­டாலோ வாங்­கி­வி­டலாம் என்­பதை அந்த இள­நங்கை நன்­றாக அறிந்­துள்ளார். அதே ஊழலைப் பயன்­ப­டுத்தி குறுக்கு வழி­களிற் திரட்­டிய செல்­வத்தை சட்­டத்தின் பிடி­க­ளுக்குட் சிக்­காமல் காப்­பாற்­றலாம் என்ற சூட்­சு­மத்­தையும் நங்­கையின் நாட­கத்தின் கதா­பாத்­தி­ரங்­களும் உணர்ந்­தி­ருந்­தனர். அதன் விளைவே இந்த மோசடி. இதில் சிக்­கிய முத­லீ­டுகள் அனைத்தும் ஏதோ ஒரு நிதி ஸ்தாப­னத்தின் ஊடா­கத்­தானே கைமாறி இருக்க வேண்டும்? அதே­போன்று முத­லீடு செய்­த­வர்­களின் பணம் எவ்­வாறு அவர்­க­ளிடம் குவிந்­தது என்­பதும், அந்த முத­லீட்­டா­ளர்கள் அர­சுக்குச் சேர­வேண்­டிய வரித்­தொ­கையை முறைப்­படி செலுத்­தி­னார்­களா என்ற விப­ரங்­களும் வரித்­தி­ணைக்­க­ளத்­திடம் இருக்­கத்­தானே வேண்டும். அவ்­வாறு இல்­லை­யென்றால் அர­சாங்­கத்தின் கண்­க­ளுக்குள் மண்­ணைத்­தூவி விட்டே இப்­பெ­ருச்­சா­ளிகள் செல்­வத்தைக் குவித்­தி­ருக்க வேண்டும். எனவே இந்­த­ மோ­ச­டிக்கு அரசும் மறை­மு­க­மான உடந்­தை­யாக இருந்­துள்­ள­தென்று கரு­து­வ­திலும் தவ­றில்லை.

தனிப்­பட்ட ஒருத்தி செய்த மோசடி பிடி­பட்டுப் பிர­ப­ல­மாகி விட்­டது. ஆனால் அர­சாங்­கத்­துக்குள் மந்­தி­ரி­க­ளா­கவும் அதி­கா­ரி­க­ளா­கவும் இருந்­து­கொண்டு செய்த மோச­டி­களும் கொள்­ளை­களும் ஏன் இன்னும் பிடி­ப­டாமல் இருக்­கின்­றன? அந்த மோச­டி­கள்­தானே நாட்டை வங்­கு­ரோத்­தாக்­கி­யுள்­ளன?

இவை­யெல்லாம் உணர்த்தும் ஓர் உண்மை என்­ன­வெனில் நடை­மு­றை­யி­லி­ருக்கும் சிந்­தனைச் சட்­ட­கத்தை களைந்தெறியாமல் நிர்­வா­கத்­தையும் சமு­தா­யத்­தையும் இந்த நாட்டில் கட்டி எழுப்ப முடி­யாது என்­பதே. ஆகையால் இவ்­வா­றான மோச­டிகள் இன்னும் தொடரும். ஊழல் நிறைந்த ஒரு சமு­தா­யத்தின் கண்­ணா­டிக்குள் தெரியும் ஒரு முகங்­களே மோச­டிகள். மத்­திய வங்கி ஆளுனர் ஒருவர் செய்த பண­முறி மோசடி ஏற்­க­ெனவே யாவரும் அறிந்த ஒன்று. என­வேதான் நடை­மு­றையில் இருக்கும் சிந்­த­னைச்­சட்­ட­கத்தை முற்­றாக மாற்று என்­ற­ கோ­ரிக்­கை­யுடன் ஓர் இளைஞர் கூட்டம் ஏழு மாதங்­க­ளுக்­குமுன் கொதித்­தெ­ழுந்­தது. அந்த எழுச்­சியை படை­கொண்டு முடக்கி அதன் தலை­வர்­க­ளையும் சிறையில் தள்ளி சட்­ட­கத்தைக் காப்­பாற்­றி­ய­வரே இன்­றைய ஜனா­தி­பதி. அதா­வது சிந்­தனைச் சட்­ட­கத்தை மாற்­று­வ­தற்குப் பதி­லாக அதனை மேலும் பலப்­ப­டுத்து­வ­தாக அமைந்துள்­ளது அவ­ரது அரா­ஜக நட­வ­டிக்­கைகள். இந்த நிலையில் மேலும் பல மோச­டி­களை நாடு எதிர்­கொள்ள வேண்டி நேரிடும்.

முஸ்­லிம்கள் சிக்­கு­வதேன்?
வியா­பா­ரத்­து­றையில் வர­லாற்றுப் புகழ் பெற்­ற­வர்கள் முஸ்­லிம்கள். இஸ்­லாத்­துக்கும் வர்த்­த­கத்­துக்கும் இடை­யே­யுள்ள நெருக்கம் வேறு எந்த ஒரு மதத்­துக்கும் வர்த்­த­கத்­துக்கும் இல்லை. இலங்கை முஸ்­லிம்­களும் வர்த்­த­கர்­க­ளா­கவே வந்­தனர், வர்த்­த­கர்­க­ளா­கவே வளர்ந்­தனர். இன்றும் பல தடை­க­ளுக்கு மத்­தி­யிலும் பெரும்­பா­லானோர் அதே துறை­யி­லேதான் ஈடு­பாடு கொண்­டுள்­ளனர். ஆனால் எவ்­வாறு வர்த்­தகம் செய்ய வேண்டும் என்­ப­தற்கு இஸ்­லாத்தில் பல வரை­ய­றைகள் உண்டு. அவற்­றை­யெல்லாம் இங்கே விளக்­கு­வது பொருத்­த­மா­காது. ஒரே வச­னத்தில் கூறு­வ­தானால் வர்த்­த­கத்தின் ஊடா­கவோ முத­லீ­டு­களின் ஊடா­கவோ கொள்ளை லாபம் திரட்­டு­வ­தற்கு இஸ்­லாத்தில் அனு­மதி இல்லை. ஆனால் திலி­னியின் முத­லீட்டு மோசடி அந்த வரை­ய­றை­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தொன்று. அப்­ப­டி­யானால் அந்த முத­லீட்டில் ஏன் முஸ்­லிம்கள் தமது பணத்தை முடக்­கி­னார்கள்?

பொரு­ளீட்­டலில் இஸ்­லா­மிய விழு­மி­யங்கள் எங்கே?
இலங்­கையில் இன்று வாழும் முஸ்லிம் சந்­த­தியை மத­ ரீ­தி­யாக நோக்கின் அவர்­களை தப்லீக் இயக்­கத்தின் நிழலில் வளர்ந்த ஒரு சந்­ததி என வரு­ணிக்­கலாம். அந்த இயக்­கத்தின் ஓயாத பிரச்­சா­ரத்­தா­லேதான் இன்­றைய பள்­ளி­வா­சல்கள் குறிப்­பாக வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பக்­தர்­களால் நிரம்பி வழி­கின்­றன. அது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொன்று. ஆனால் அந்தப் பிரச்­சா­ரத்­திலும் வெள்­ளி­தோறும் நடை­பெறும் குத்பா பிர­சங்­கங்­க­ளிலும் மார்க்கக் கட­மையை தவ­றாது செய்­யுங்கள் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றதே தவிர முஸ்­லிம்கள் எவ்­வாறு தமது உழைப்­பையும் தொழில்­க­ளையும் முத­லீ­டு­க­ளையும் இஸ்­லா­மிய தர்­மத்­தின்­படி செய்­ய­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வது மிகவும் குறைவு. அதை நிவர்த்­தி­ செய்­வ­தற்கு பிரச்­சா­ர­கர்­க­ளுக்கும் பிர­சங்­கி­க­ளுக்கும் இஸ்லாம் போதிக்கும் வாழ்­வியல் விழு­மி­யங்­க­ளைப்­பற்­றிய அறிவு வேண்டும். இஸ்­லா­மியப் பொருளியல் பற்­றியோ முத­லீடு செய்யும் வழிகள் பற்­றியோ விப­ரிப்­ப­தற்கு இக்­ கட்­டு­ரையின் நீளம் இடந்­த­ர­மாட்­டாது.

இந்த வாழ்வில் எப்­படி வேண்­டு­மா­னாலும் பொரு­ளீட்­டலாம். ஆனால் மார்க்கக் கட­மை­களை ஒழுங்­காக நிறை­வேற்­றினால் சுவனம் புகலாம் என்ற ஒரு தப்­பான தத்­துவம் மறை­மு­க­மாக முஸ்­லிம்­க­ளி­டையே முஸ்லிம் போத­கர்­களால் போதிக்­கப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக, ஒரு முறை ஒரு பள்­ளி­வா­சலில் ஒரு வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று குத்பாப் பிர­சங்கம் நிகழ்த்­திய ஒரு மார்க்கப் பிர­சங்கி ‘அர­சாங்க வரி­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக நீங்கள் எப்­படி வேண்­டு­மா­னாலும் கணக்குக் காட்­டலாம். ஆனால் இறை­வ­னு­டைய சக்காத் வரியை மட்டும் சரி­யாகக் கணக்­குப்­பார்த்துக் கொடுத்து விடுங்­கள்’ என்று கூறினார். இந்தப் போதனை வரு­மான வரித் திணைக்­க­ளத்தின் செவி­க­ளுக்கு எட்­டு­மானால் அதன் தாக்கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை வாச­கர்­களே மட்­டி­டட்டும்.

முஸ்­லிம்­களின் ஆபத்­தான எதிர்­காலம்
சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் இப்­பொ­ழுது முஸ்­லிம்­களைக் குறி­வைக்­கி­றது என்­பது எல்­லா­ருக்­குமே தெரிந்த ஒரு விடயம். சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சிங்­கள மொழியில் சம்­பிக்க ரண­வக்க என்ற ஓர் அர­சி­யல்­வா­தியால் எழுதி வெளி­டப்­பட்ட இஸ்­லா­மியத் தீவி­ர­வாதம் பற்­றிய ஒரு நூல் எத்­த­னையோ ஆதா­ர­மற்ற செய்­தி­களைக் கொண்­டுள்­ளது என்­பதை வாச­கர்கள் உண­ர­வேண்டும். உதா­ர­ண­மாக மன்­னா­ரி­லி­ருந்து புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு உடுத்த உடை­யுடன் புத்­த­ளத்­துக்கு அக­தி­க­ளாக வந்த முஸ்­லிம்கள் அங்கே சிங்­கள மக்­களின் நிலத்தை அப­க­ரித்­துள்­ளனர் என்ற ஓர் அபாண்­டத்தை அந்த நூலில் ரண­வக்க பொறித்துள்ளார். இந்த நூலுக்கு இது­வரை எந்த ஒரு முஸ்லிம் தலை­வனோ புத்­தி­ஜீ­வியோ மறுப்­புரை ஒன்றை எழு­தா­தது புது­மை­யாகத் தெரி­ய­வில்­லையா? அதே­போன்று இன்னும் பல அர­சி­யல்­வா­தி­களும் பௌத்த பிக்­கு­களுட் சிலரும் முஸ்­லிம்­கள்­மீது ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்­தி­யுள்­ளனர். அவற்­றுக்கும் முஸ்லிம் தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து மறுப்­புரை பேச்­சிலும் இல்லை, எழுத்­திலும் இல்லை.

இந்த அவ­தூ­று­களால் முஸ்­லிம்­களின் வர்த்­தக வாய்ப்­பு­களும் திட்­ட­மிட்­ட­துபோல் தடை­க­ளுக்­குள்­ளாக்கப்பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்குக் காணிகள் வாங்­கவும் கடை­களைத் திறக்­கவும் வேறு தொழில்­களை ஆரம்­பிக்­கவும் எத்­த­னையோ தடைகள் குறுக்கே நிற்­கின்­றன. இந்த நிலையில் எப்­ப­டியும் செல்­வத்தைத் திரட்­டிக்­கொண்டு சக்காத் கொடுப்­ப­தன்­ மூ­லமும் பள்­ளி­வா­சல்­க­ளையும் மத­ர­சாக்­க­ளையும் கட்­டு­வதன் மூலமும் ஏழை முஸ்லிம் கும­ரி­க­ளுக்கு விவாகம் செய்­து­வைப்­பதன் மூலமும் பொருளீட்டும் முறை­யி­லுள்ள பாவங்­க­ளுக்கு விமோ­சனம் பெறலாம் என்ற ஒரு தவ­றான கொள்கை மேற்­கூ­றிய மோச­டி­க­ளுக்கு முஸ்­லிம்­களை ஆளாகச் செய்­யலாம் என்­பதை மறுக்­க­லாமா? ஏற்கனவே முஸ்லிம்கள் பலர் அதுவும் பெண்கள் உட்பட போதைக்கு ஆளாகியமை மட்டுமல்லாமல் போதை விற்பனையும் செய்கின்றார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் பணமோசடியிலும் இறங்கியுள்ளனர் என்பதையும் சிங்கள மொழி ஊடகங்கள் பிரபலப்படுத்துமானால் முஸ்லிம் சமூகத்தின் கதி என்னவாகும் என்பதை முஸ்லிம் அரசியவாதிகளும் மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

தேவையான கருத்தரங்குகள்
இவ்வாறான பொருளீட்டல் முறையிலுள்ள குறைபாடுகள் வையத்து வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பது பற்றியும் இஸ்லாம் என்ன போதிக்கின்றது என்பதை ஒட்டிய கருத்தரங்குகள் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒருவர் அறியாமல் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால் விடயம் தெரிந்தவர்கள் அந்த அறியாமையை அகற்றுவதற்கு வழிசெய்யாவிடின் அது மிகப் பெரிய பாவம். இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பேராபத்தான நிலையில் இவ்வாறான கருத்தரங்குகள் தவிர்க்க முடியாதவை. அவற்றை புத்திஜீவிகள் முன்னின்று நடத்த வேண்டும். அதற்குப் பொருத்தமான இடம் பள்ளிவாசல்களே.–Vidivelli

1 Comment
  1. Noor Nizam says

    இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகம் ஏன் இந்த இக்கட்டான நிலையில் உள்ளது?

    யதார்த்தத்தையும் உண்மையையும் (யதார்த்தம்) எதிர்கொள்வோம்.

    1. முஸ்லீம்களாகிய நாங்கள் எங்கள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையால் வழங்கப்பட்ட முஸ்லிமை (இஸ்லாமிய வாழ்க்கை முறை) வழி நடத்துவதில்லை என்று அறியப்படுகிறோம்.

    2. நாங்கள் (குறிப்பாக) அரசியல்வாதிகள் & உலமா/மௌலவிகள் ஒன்றுபடவில்லை.

    3. நாங்கள் (குறிப்பாக அரசியல்வாதிகள்) நேர்மையற்றவர்கள், ஏமாற்றுபவர்கள், சுயநலம் மற்றும் வக்கிரமானவர்கள்.

    4. மற்ற சமூகங்களுடன் எங்களின் பரிவர்த்தனைகள் சுத்தமாக இல்லை.

    5. பெரும்பான்மை சிங்கள மக்களால் மிகவும் நேசிக்கப்படும் நாட்டின் அரசியல் தலைவர்களை நாம் காட்டிக்கொடுத்துவிட்டோம்.

    6. நாம் நமது அன்றாட வாழ்வில் திமிர்பிடித்தவர்களாகவும், களியாட்டக்காரர்களாகவும் இருக்கிறோம்.

    7. நாங்கள் சுயத்தை மையமாகக் கொண்டவர்கள் மற்றும் சமூக எண்ணம் கொண்டவர்கள் அல்ல.

    8. நாங்கள் சந்தர்ப்பவாதிகள், குறிப்பாக அரசியல் மற்றும் தலைமைத்துவத்தில். எமது முஸ்லீம் அரசியல்வாதிகளும் உலமா/மௌலவிகளும் முன்னாள் ஜனாதிபதி போன்ற மிகவும் அன்பிற்குரிய சிங்கள தலைவர்களை முதுகில் குத்தி அவரையும் அவரது உடன்பிறப்புகளையும் வளைத்து அரசியல் ரீதியாக அழித்துள்ளனர்.

    9. நமது சமூகம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக கூட, நமது காரியங்களைச் செய்து முடிப்பதற்காக, நாம் சம்பாதித்த பண பலத்தால் யாரையும் “வாங்குவோம்”.

    10. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும், கடத்தல் மற்றும் போதைப்பொருட்களை சாதாரண வணிகமாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம், மேலும் மக்காவுக்குச் செல்வது (உம்ம்ராவை உருவாக்குவது) அந்த பாவங்களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவதாக நாங்கள் நினைக்கிறோம்.
    இந்த வாழ்க்கை முறைகளை மாற்றி, நம்மை நாமே “சரி” செய்து ;இஸ்லாத்தில் நமக்குச் சொல்லப்பட்ட “உண்மையான வாழ்க்கை முறையை” வாழாத வரை, நாம் “சமூகச் சிதைவுக்கு” செல்கிறோம். இன்ஷா அல்லாஹ் இது தான் இப்போது நடக்கிறது.
    நூர் நிஜாம் (Noor Nizam) – கன்வீனர் “தி முஸ்லிம் வாய்ஸ்”.
    English.
    Why the Muslim community in Sri Lanka is in this precarious plight?
    Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).

    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.

    2. We are (especially) the POLITICIANS & ULEMA/MOULAVI’S are NOT UNITED.

    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.

    4. Our dealings are NOT CLEAN with other Communities.

    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.

    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.

    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MINDED.

    8. WE are OPPORTUNISTIC, especially in POLITICS and LEADERSHIP. Our Muslim Politicians and Ulema/Moulavi’s have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.

    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.

    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
    Untill we change these ways of life and “CORRECT” ourselves and ;live the “True Way of Life” told to us in Islam, we are moving into “COMMUNITY DISTRUCTION”. This is what is happening now, maybe, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

Leave A Reply

Your email address will not be published.