இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெரூசலத்தை அவுஸ்திரேலியா அங்கீகரித்தது

0 646

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக மேற்கு ஜெரூ­ச­லத்தை அவுஸ்­தி­ரே­லியா அங்­கீ­க­ரித்­துள்­ளது. எனினும் சமா­தா­ன­மான இணக்­கப்­பா­டொன்று காணப்­படும் வரை தூத­ரகம் டெல் அவி­வி­லி­ருந்து நகர்த்­தப்­ப­ட­மாட்­டாது என பிர­தமர் ஸ்கொட் மொறிசன் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக மேற்­கு­றித்த நகரை அங்­கீ­க­ரிக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்பின் தீர்­மா­னத்தை பின்­பற்றும் ஒரு சில அர­சாங்­கங்­களுள் ஒன்­றாக கடந்த சனிக்­கி­ழமை கென்­பரா மாறி­யது. பலஸ்­தீ­னத்தின் எதிர்­கால தேசத்தின் தலை­ந­க­ராக கிழக்கு ஜெரூ­ச­லத்தை அங்­கீ­க­ரிப்­ப­தற்கும் மொறிசன் உறு­தி­பூண்­டுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லியா தற்­போது நெஸட் என அழைக்­கப்­படும் இஸ்­ரே­லியப் பாரா­ளு­மன்­றத்தின் ஒரு ஆசனம் என்ற வகையில் மேற்கு ஜெரூ­ச­லத்­தையும் அர­சாங்­கத்­தினை ஏனைய பல நிறு­வ­னங்­க­ளையும் அங்­கீ­க­ரிக்கும் வகையில் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அதனை அங்­கீ­க­ரித்­த­தாக சிட்­னியில் கடந்த சனிக்­கி­ழமை உரை­யாற்­றிய மொறிசன் தெரி­வித்தார்.

இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னத்­திற்கும் இடை­யே­யான மிகப் பெரும் முட்­டுக்­கட்­டை­யாக ஜெரூ­ச­லத்தின் அந்­தஸ்து காணப்­ப­டு­கின்­றது.

1967 ஆம் ஆண்டு மத்­திய கிழக்கு யுத்­தத்தின் பின்னர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட கிழக்குப் பிர­தேசம் உள்­ள­டங்­க­லாக முழு நக­ரத்­தையும் இஸ்ரேல் அதன் தலை­ந­க­ராகக் கரு­து­கின்ற அதே­வேளை பலஸ்­தீ­னர்­களோ ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரை மற்றும் காஸா பள்­ளத்­தாக்கை உள்­ள­டக்­கி­ய­தாக சர்­வ­தே­சத்தின் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் உரு­வாக்க எதிர்­பார்க்கும் எதிர்­கால சுதந்­திர தேசத்தின் தலை­ந­க­ராக கிழக்கு ஜெரூ­ச­லத்தை கரு­து­கின்­றனர்.

இவ் வருட ஆரம்­பத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் ஒரு­த­லைப்­பட்­ச­மாக இஸ்­ரே­லுக்­கான அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஜெரூ­ச­லத்­திற்கு மாற்றும் வரை பெரும்­பா­லான நாடுகள் பேச்­சு­வார்த்­தையில் முடக்கம் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­ப­தற்­காக மெத்­தனப் போக்­கினைக் கடைப்­பி­டித்து வந்­தன.
இறு­தி­யான அந்­தஸ்து மற்றும் உறு­திப்­பாட்­டுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் அது எட்­டப்­பட்ட பின்னர் நடை­முறைச் சாத்­தி­ய­மான ரீதியில் ஜெரூ­ச­லத்­திற்கு எமது தூத­ர­கத்தை நகர்த்­து­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம் என அவர் தெரி­வித்தார். தூத­ர­கத்­திற்­கான புதிய அமை­வி­டத்தை தேடும் பணிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இடைக்­கா­லத்தில் அவுஸ்­தி­ரே­லியா புனித நக­ரத்தின் மேற்கே பாது­காப்பு மற்றும் வர்த்­தக செயற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் மொறிசன் தெரி­வித்தார்.
இது தவிர இரண்டு தேசம் என்ற தீர்­வினை அங்­கீ­க­ரிப்­பதில் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ள­தோடு, கிழக்கு ஜெரூ­ச­லத்தை தலை­ந­க­ராகக் கொண்ட எதிர்­கால சுதந்­திர தேசம் தொடர்­பான பலஸ்­தீ­னத்தின் அபி­லா­சை­களை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ஆசிய நாட்டு அயல்­நா­டு­க­ளு­ட­னான பல தசாப்­த­கால கொள்­கையில் விரி­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யதும் ஆசிய அயல் நாடு­க­ளுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆபத்தைக் கொண்­ட­து­மான டெல் அவிவில் அமைந்­துள்ள அவுஸ்­தி­ரே­லியத் தூத­ர­கத்தை ஜெரூ­ச­லத்­திற்கு மாற்­று­வதா என்­பது தொடர்பில் தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­ட­தாக விட­யத்­துடன் தொடர்­பு­டைய இரு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. அமைச்­ச­ரவை கூடிய போது இஸ்­ரே­லுக்­கான அவுஸ்­தி­ரே­லிய தூத­ர­கத்தை ஜெரூ­ச­லத்­திற்கு நகர்த்­து­வது தொடர்­பான விடயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. எனினும் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் அதி­காரம் வழங்­கப்­ப­டா­ததால் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பாத ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை அங்­கீ­க­ரிப்­பதன் மூலம் அவுஸ்­தி­ரே­லியப் பிர­தமர் மொறிசன் தனக்கு ஆத­ர­வான பழ­மை­வாத பின் ஆசன உறுப்­பி­னர்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்த எதிர்­பார்க்­கின்றார். ஆனால் உலகின் மிகப்பெரும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அண்டை நாடான இந்தோனேஷியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்கும் செயலாக இருக்கும்.
பலஸ்தீனம் சம்பந்தப்பட்ட விவகாரம் இந்தோனேஷியாவில் மிகக் கூருணர்வுமிக்க விடயமாகும். இஸ்ரேல் தொடர்பில் அவுஸ்திரேலியா தனது திட்டங்களை உறுதிப்படுத்தாத வரை இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.