பிரான்ஸ் ஆர்ப்பாட்டத்தால் எகிப்தில் மஞ்சள் அங்கி விற்பனைக்கு கட்டுப்பாடு

0 734

பிரான்ஸ் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் பாணியில் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­து­வதை தடுப்­ப­தற்­காக எகிப்தில் மஞ்சள் அங்கி விற்­ப­னைக்கு கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

எகிப்தில் 2011 மக்கள் எழுச்சி போராட்­டத்தின் ஆண்டு நிறைவு நெருங்­கி­யுள்ள நிலை­யி­லேயே இந்த கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு உப­க­ரண விற்­ப­னை­யா­ளர்கள் ஏற்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கே அங்­கி­களை மொத்த விற்­பனை செய்ய முடியும் என்றும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர்கள் பொலிஸ் அனு­மதி பெற வேண்டும் என்றும் கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
இந்த அங்­கி­களை வாங்க முயற்­சிப்­ப­வர்கள் குறித்த விப­ரங்­களை தர வேண்டும் என்று கடை உரி­மை­யா­ளர்­களை பொலிஸார் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர்.

பிரான்ஸில் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மஞ்சள் அங்­கியை ஒரு அடை­யா­ள­மாக அணிந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­றனர்.
எகிப்து முன்னாள் ஜனா­தி­பதி ஹொஸ்னி முபா­ரக்கை பதவி கவிழ்த்த 2011 ஜன­வரி 25 மக்கள் புரட்சி தின­மன்று ஆர்ப்­பாட்­டங்­களின் தொடக்க தின­மாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களால் பயன்­ப­டுத்த வாய்ப்பு இருப்­ப­தாக அரசு அஞ்­சு­கி­றது.

இந்த கட்­டுப்­பாட்­டுக்கு மத்­தியில் மஞ்சள் அங்­கியை வைத்­தி­ருந்த மொஹ­மது ரமதான் என்­பவர் பொது ஒழுங்­கு­களை மீறிய குற்­றச்­சாட்டில் 15 தினங்கள் சிறை வைக்­கப்­பட்­ட­தாக அவ­ரது வழக்­க­றிஞர் குறிப்­பிட்­டுள்ளார்.
இந்த ஆடையை விற்­ப­தில்லை என்று சில கடை உரி­மை­யா­ளர்கள் பத்­தி­ரத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

கடந்த ஜுன் மாதம் எகிப்து ஜனா­தி­ப­தி­யாக தனது இரண்­டா­வது தவ­ணைக்கு பதவி ஏற்ற அப்தல் பத்தா அல் சிசி, வன்­முறை, தீவி­ர­வாதம் மற்றும் பயங்­க­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக உறுதியளித்துள்ளார். எனினும் எகிப்திலுள்ள அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.