பலஸ்தீனுக்கு தீர்வு வேண்டும்

ஐ.நா.வில் வலியுறுத்தினார் சப்ரி

0 237

சர்­வ­தேச சமூ­கத்தின் தலை­யீட்டில் பலஸ்­தீனப் பிரச்­சினை அவ­ச­ரமாத் தீர்க்­கப்­ப­ட­வேண்டும், பலஸ்­தீ­னர்­க­ளுக்கு தமது நிலப்­ப­ரப்­பெல்­லைக்குள் அவர்தம் அனைத்­து­வ­கை­யான‌ வளங்­க­ளையும் முழு­மை­யாகப் பயன்­ப­டுத்த மறுக்­க­மு­டி­யாத உரி­மை­யுள்­ளது போலவே அவர்­க­ளுக்­கான சுயா­தீன, சுய­நிர்­ண­ய­முள்ள தனித்­தே­ச­மொன்றை அமைத்­தா­ளவும் அவர்கள் உரி­மை­யுள்­ள­வர்கள். இதுவே இலங்­கையின் பலஸ்­தீனப் பிரச்­சினை தொடர்­பான மாறாத‌ கொள்­கை­ நி­லைப்­பா­டாகும் என இலங்­கையின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரி­வித்தார்.

நியூயோர்க்கில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் 77வது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை சார்பில் தனது பொது விவாதக் கருத்­து­ரையின் போதே அமைச்சர் சப்ரி இவ்­வாறு தெரி­வித்தார்.

சர்­வ­தேச அரங்கில் நாடுகள் எதிர்­நோக்கும் பாது­காப்பு அச்­சு­றுத்தல் தொடர்பில் உலகம் கவனம் செலுத்த வேண்­டி­ய‌தன் அவ­சி­யத்தைப் பற்றி அவர் மேலும் பேசு­கையில், பலஸ்­தீனப் பிரச்­சினை தொடர்பில் நிரந்­தர சமா­தானத் தீர்­வொன்­றுக்­கான அனைத்­து­வ­கை­யான முஸ்­தீ­பு­க­ளையும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­க­ளையும் பலஸ்­தீனம் இஸ்ரேல் ஆகிய இரு­த­ரப்­பி­ன­ரதும் பாது­காப்­பினை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து பொறி­மு­றை­க­ளுக்கும் இலங்கை எப்­போதும் ஆத­ர­வ­ளிக்கும் உறு­தி­யான நிலைப்­பா­டி­லேயே உள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார். அந்த வகையில் இரு-தேச ( Two-state solution ) உருவாக்க தீர்வு யோசனையையே இலங்கை எப்போதும் ஆதரிப்பதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.