முஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தின் எதிர்காலம் என்ன?

0 385

ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்ட, தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரும் 9 மாடி­களைக் கொண்ட கட்­டி­டத்தை அரசு கைய­கப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரசின் இத் தீர்­மா­னத்தை அறிந்து முஸ்­லிம்கள் அதிர்ந்து போயுள்­ளனர்.

இக்­கட்­டி­டத்தை ஏற்­க­னவே அமைச்­ச­ரவை புத்­த­சா­சன அமைச்­சுக்கு சொந்­த­மாக்கிக் கொள்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 2021 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­த­மரும், புத்­த­சா­சன மற்றும் கலா­சார மத விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தைச் சமர்ப்­பித்து அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

ஆனால் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் எவ்­வித பேச்­சு­வார்த்­தை­யிலும் ஈடு­ப­ட­வில்லை. அமைச்­ச­ர­வையின் இத்­தீர்­மா­னத்தை தாம் பத்­தி­ரிகை வாயி­லா­கவே அறிந்து கொண்­ட­தாக அப்­போ­தைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­விக்­கிறார்.

இன்று சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட இக்­க­ட்டி­ட­தத்தின் மூன்று மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு 2017 ஆம் ஆண்டு ஜன­வரி 17 ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் திறந்து வைக்­கப்­பட்­டது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்
திணைக்­க­ளத்தின் வர­லாறு
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்று தனி­யா­னவோர் திணைக்­களம் 1981 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட இத்­தி­ணைக்­களம் அப்­போ­தைய போக்­கு­வ­ரத்து அமைச்சர் மர்ஹூம் எம்.எச். முஹம்­மதின் பொறுப்பில் விடப்­பட்­டது. ஏற்­க­னவே கொழும்பு, கெப்­ப­டி­பொல மாவத்­தையில் இயங்­கி­வந்த வக்பு பிரிவும் இத்­தி­ணைக்­க­ளத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இத்­தி­ணைக்­களம் அன்று டி.ஆர்.விஜே­ய­வர்­தன மாவத்­தையில் இயங்கி வந்த போக்­கு­வ­ரத்து அமைச்சின் மேல்­மா­டியில் இயங்­கி­யது.

போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருந்த மர்ஹூம் எம்.எச். முஹம்மத் சபா­நா­ய­க­ராக பத­வி­யேற்­றதன் பின்பு போக்­கு­வ­ரத்து அமைச்சின் மேல்­மா­டியில் இயங்­கி­வந்த இத்­தி­ணைக்­களம் 1990 ஆம் ஆண்டு அப்­போ­தைய கல்வி அமைச்­ச­ராக இருந்த மர்ஹூம் பதி­யுதீன் மஹ்­மூத் பணி­யாற்­றிய கொழும்பு—02, மலே வீதி­யி­லி­ருந்த கட்­டி­டத்­துக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டது.

1986 ஆம் ஆண்­டி­லி­ருந்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு என ஒரு நிரந்­தர கட்­டிடம் தேவை என்­பது உண­ரப்­பட்­டது. திணைக்­கள ஊழி­யர்கள் தற்­போது 9 மாடிக்­கட்­டிடம் அமைந்­துள்ள ரயில்வே திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான காணியில் நிரந்­தர கட்­டிடம் ஒன்றை நிறு­வ­மு­டி­யு­மல்­லவா? என்ற ஆதங்­கத்தில் இருந்­தனர். அப்­போ­தைய போக்­கு­வ­ரத்து அமைச்சர் இக்­கா­ணியை பெற்­றுத்­த­ராமை குறித்து அவ­ருக்கு குறை கூறிக்­கொண்­டு­மி­ருந்­தனர்.

1994 ஆம் ஆண்டு போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக லலித் அத்­தலத் முத­லியின் மனைவி ஸ்ரீமணி அத்­துலத் முதலி பத­வியில் இருந்தார். அவரின் இணைப்புச் செய­லா­ள­ராக இஸ்ஸத் என்­பவர் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்தார். இவர் மாலை நேரங்­களில் தினமும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விஜயம் செய்து பேசிக்­கொண்­டி­ருப்பார். அப்­போது திணைக்­கள பணிப்­பா­ள­ராக மர்ஹூம் யு.எல்.எம்.ஹால்­தீனும், பிரதிப் பணிப்­பா­ள­ராக ஜே.மீரா மொஹி­தீனும் கட­மை­யாற்­றி­னார்கள். இவர்­க­ளது கலந்­து­ரை­யா­ட­லின்­போதே காணி விவ­காரம் வெற்­றி­பெற்­றது. அப்­போது திணைக்­களம் கலா­சார அமைச்சின் கீழ் செயற்­பட்­டது. காணி பெற்­றுக்­கொள்ளும் முயற்­சிக்கு அப்­போ­தைய கலா­சார செய­லா­ள­ராக இருந்த இரந்த குண­சே­கர பல்­வேறு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­ய­போதும் மர்ஹூம் யு.எல்.எம். ஹால்­தீனின் முயற்சிக்கு வெற்றி கிடைத்­தது. காணி அமைச்­ச­ரினால் திணைக்­க­ளத்­துக்கு வழங்­கப்­பட்­டது.

ஆரம்­பத்தில் தற்­போ­தைய கட்­டி­டத்­துக்கு முன்னால் உள்ள அதா­வது பாதை­யோ­ரத்தில் முன்பு காமினி பட­மா­ளிகை இருந்த இடத்­திலே காணி ஒதுக்­கப்­பட்­டது. என்­றாலும் மர்ஹூம் எம்.எச். முஹம்மத் நகர அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்த போது குறித்த காணி நகர அபி­வி­ருத்­திக்கு தேவைப்­ப­டு­வ­தாக கூறி அதற்குப் பதி­லாக தற்­போது கட்­டிடம் உள்ள காணியை ஒதுக்­கினார்.

1996ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு வருகை தந்த பாரா­ளு­மன்றக் குழு­வினால் புதிய கட்­டி­டத்­துக்­கான அடிக்கல் நடப்­பட்­டது. என்­றாலும் அது பல­ன­ளிக்­க­வில்லை. ஈரா­னிய தூத­ரகம் கட்­டிடம் நிர்­மா­ணித்துத் தரு­வ­தற்கு முன்­வந்­தது. பெரும்­பா­லானோர் இதனை விரும்­பா­ததால் அம்­மு­யற்­சி கைவி­டப்­பட்­டது. 1998ஆம் ஆண்டு இலங்­கையில் 50 ஆவது சுதந்­தி­ர­தினம் கொண்­டா­டப்­பட்­ட­போது பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப வளவில் அப்­போ­தைய பிர­திப்­ப­ணிப்­பாளர் ஜே.மீரா மொஹிதீன் கட்­டிடத் தொகு­தியின் மாதி­ரி­யொன்­றினை காட்­சிக்கு வைத்­தி­ருந்தார்.

இதே­வேளை 2004ஆம் ஆண்டு அப்­போ­தைய துறை­மு­கங்கள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ராக இருந்த ரவூப் ஹக்கீம் சுமார் 5 மில்­லியன் ரூபா செலவில் தற்­கா­லிக கட்­டி­ட­மொன்றை குறிப்­பிட்ட காணியில் நிர்­மா­ணித்தார். இந்த தற்­கா­லிக கட்­டி­டத்­துக்கு 2004இல் திணைக்­களம் இட­மாற்­றப்­பட்­டது. கொழும்பு 05ல் செயற்­பட்டு வந்த வக்பு பிரிவும் இட­மாற்­றப்­பட்­டது.

தற்­போ­தைய 9 மாடிக்­கட்­டிடம்
2006 ஆம் ஆண்டு தற்­போ­தைய 9 மாடிக் கட்­டி­டத்­துக்­கான அடிக்கல் நடப்­பட்­டது. அப்­போ­தைய கலா­சார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரல்­லி­யத்த அடிக்­கல்லை நட்டி வைத்தார். அன்று அமைச்­ச­ராக ரவூப் ஹக்­கீமும், திணைக்­கள பணிப்­பா­ள­ராக எம்.ஐ.அமீரும் பதவி வகித்­தனர். இது மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியின் தொடக்க கால­மாகும்.

ஆரம்­ப­கா­லத்தில் இக்­கட்­டி­டத்­துக்கு வக்பு ஹவுஸ் என்றே பெயர் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஸ்ரீமணி அத்­துலத் முதலி போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக பதவி வகித்­த­போது இக்­காணி வழங்­கப்­பட்­டது. அவர் காணியை வழங்­கு­வ­தற்கு முன்பு அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டாரநாயக்­காவை தொடர்­பு­கொண்டு இதற்­கான அனு­ம­தியைக் கோரினார்.
சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உடனே காணியை வழங்­கு­மாறும் அதற்­கான வேலி­யையும் அமைத்துக் கொடுக்­கு­மாறு உத்­த­ர­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கட்­டிட நிர்­மாணப் பணிகள் சி.ஈ.பி என்ற நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டிட நிர்­மாணப் பணிகள் மந்­த­க­தி­யிலே இடம்­பெற்­றன. இக்­கட்­டிடம் இஸ்­லா­மிய கட்­டிட கலை­யுடன் அமைந்­தி­ருந்­ததால் அப்­போ­தைய கலா­சார அமைச்சின் செய­லாளர், ‘இக்­கட்­டி­டத்தின் வடி­வ­மைப்பை நான் முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தால் அதனை நிறுத்­தி­யி­ருப்பேன்’. என்றார். ஏனென்றால் இக்­கட்­டிடம் ஒரு பள்­ளி­வா­ச­லைப்­போன்று அமைந்­தி­ருந்­தது. இதனால் இக்­கட்­டிடம் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இன்றும் பூர்த்­தி­ய­டை­யாத நிலை­யிலே உள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ராக எம்.எச்.ஏ.ஹலீம் நிய­மனம் பெற்­ற­தை­ய­டுத்து அவர் இக்­கட்­டிட நிர்­மாணப் பணி­களை மீண்டும் ஆரம்­பிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார். அப்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தற்­கா­லிக கட்­டி­டத்­தி­லேயே இயங்கி வந்­தது. அங்கு பாரிய இட­நெ­ருக்­கடி நில­வி­யது. இதனை அவ­தா­னித்த அமைச்சர் ஹலீம் அப்­போ­தைய நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை அழைத்து வந்து கட்­டி­டத்தின் நிலை­மையை காண்­பித்தார். நிலை­மையை அவ­தா­னித்த நிதி அமைச்சர் 296 மில்­லியன் ரூபாய்­களை நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­காக ஒதுக்­கினார்.

திணைக்­கள கட்­டிடம் அமைந்­துள்ள ரயில்வே காணியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, முன்னாள் பிர­தி­ய­மைச்சர் மர்ஹூம் அலவி மெள­லானா, முன்னாள் அமைச்சர் மர்ஹூம், எம்.எச்.முஹம்மத் உட்­பட பலர் முயற்சி செய்­தனர்.

முன்னாள் பணிப்­பாளர் எம்.ஐ.அமீர்
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்தின் பணிப்­பா­ள­ராக 2002 முதல் 2008 வரை எம்.ஐ.அமீர் பதவி வகித்தார். திணைக்­களம் இயங்­கி­வரும் 9 மாடி­களைக் கொண்ட கட்­டிடத்தின் நிர்­மாணப் பணி­க­ளுக்­காக திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் எம்.ஐ.அமீர் பாரிய பங்­க­ளிப்­பு­களைச் செய்­துள்ளார். அப்­போ­தைய முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் அலவி மெள­லானா ஆகி­யோரை அணுகி அவர்கள் மூலம் நிதி­ய­மைச்சர் மற்றும் பஷில் ராஜ­பக்ஷ மூலம் காலத்­துக்குக் காலம் நிதி­யினைப் பெற்றுக் கொடுத்­துள்­ளார்.

முன்னாள் பணிப்­பாளர் எம்.ஐ.அமீர் இது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில், குறிப்­பிட்ட 9 மாடிக்­கட்­டிடம் முஸ்­லிம்­க­ளுக்­காக வழங்­கப்­பட்­ட­தாகும். காணி ஆணை­யா­ள­ரினால் இந்­தக்­காணி வழங்­கப்­பட்­ட­து. இக்­காணி 80 பர்ச் அள­வுள்­ள­தாகும். இக்­கட்­டி­டத்தின் 9 மாடிகள் முஸ்­லிம் நிறு­வ­னங்­க­ளான வக்பு சபை, வக்பு ட்ரிபி­யுனல், காதிகள் சபை, அஹ­தியா, அர­புக்­கல்­லூ­ரி­களின் தலை­மை­யகம், கொழும்பு காதி­நீ­தி­மன்றம்,வாசி­க­சாலை, தொழுகை அறை, ஹஜ் குழு, முஸ்­லிம்­க­ளது கலை கலா­சார நிலையம் என்­ப­வற்றை உள்­வாங்­கு­வ­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும். முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு உரு­வாக்­கப்­பட்டால் அவ்­வ­மைச்­சையும் உள்­வாங்கும் வகை­யிலேயே இந்த 9 மாடிக்­கட்­டிடம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.
அர­சாங்­கத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்­கென வழங்­கப்­பட்­டுள்ள இந்த சொத்தை பாது­காப்­பது எமது கட­மை­யாகும். எனவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இக்­கட்­டி­டத்தைப் பாது­காக்க வேண்டும் என்றார்.

முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப்
இக்­கட்­டிடத்தில் 6 மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யிலே இருக்­கி­றது. 3 மாடி­க­ளிலேயே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரு­கி­றது.
எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ராக பதவி வகித்த காலத்தில் கட்­டி­ட ­நிர்­மா­ணப்­ப­ணி­களை பூர்த்தி செய்­வதற்கு 2018 ஆம் ஆண்­டு­ வரவு செல­வுத்­திட்­டத்தில் நிதி­யொ­துக்­கித்­த­ரு­மாறு கோரினோம். எமது கோரிக்­கையை திறைச்­சே­ரியின் பிரதி செய­லாளர் மறுத்தார். மூன்று மாடி­களில் உத்­தி­யோ­கத்­தர்கள் 60 பேர் பாரிய இட­வ­சதியை பயன்­ப­டுத்­து­கி­றீர்கள். நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யாது. இது பய­னுள்ள முத­லீடு அல்ல என்று தெரி­வித்தார்.

திணைக்­கள Muslim Charity Fund இல் 60 மில்­லியன் ரூபா இருக்­கி­றது. இதில் 40 மில்­லியன் ரூபாவை கோரி எஞ்­சி­யுள்ள கட்­டிட நிர்­மாண பணி­களைச் செய்வோம் என்று அமைச்சர் ஹலீ­மிடம் கூறினேன். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

பின்பு குவைத் ஸக்காத் நிதி­யத்­திடம் உதவி கோட்போம் என்றேன். அமைச்­சரை கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு குவைத்­துக்கு அழைத்­தார்கள். குறைந்­தது Muslim Minority Fund இலிருந்து தரு­கிறோம் என்­றார்கள். குவைட்­டுக்கு செல்வோம் வாருங்கள் என்று அமைச்­சரை கூப்­பிட்டேன். பய­ணத்­துக்கு ஒரு மில்­லியன் செல­வாகும் எனக்­கூறி அதற்கும் அவர் உடன்­ப­ட­வில்லை.

கடந்த பொதுத்­தேர்­த­லுக்­குப்­பின்பு இந்தக் கட்­டிட மாடி­களை அளப்­ப­தற்கு பல அரச நிறு­வ­னங்கள் வந்­தன. கலால் திணைக்­களம் கூட வந்­தது. இக்­கட்­டி­டத்தில் நிலை­கொள்­வ­தற்கே வந்­தன. பொதுத் தேர்­த­லுக்­குப்­பின்பு இவ்­வா­றான நிலை­மையே ஏற்­பட்­டது.

ராஜி­த ­சே­னா­ரத்ன சுகா­தார அமைச்­ச­ராக பத­வி­ வ­கித்­த­போது கட்­டி­டத்தின் ஒரு பகு­தியை மருந்து களஞ்­சி­யப்­ப­டுத்தி விநி­யோ­கிக்க தரு­மா­று கோரினார். அவர் அமைச்சர் ஹலீ­முக்கு இது தொடர்பில் கடி­த­மொன்­றையும் அனுப்பி வைத்தார். ஆனால் ராஜி­தவின் கடி­தத்­துக்கு பதில் அனுப்­பப்­ப­ட­வில்லை என்றார்.

இதே­வேளை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளர்கள் வை.எல்.எம். நவவி, எம்.ஸமீல், உத­விப்­ப­ணிப்­பாளர் ஜே.மீரா மொஹிதீன் போன்­ற­வர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­துள்ள ஏனைய 6 மாடி­களை பூர­ணப்­ப­டுத்­திக்­கொள்­வதில் அதிகம் ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாக காணப்­பட்­டனர்.

முன்னாள் பணிப்­பாளர் எம்.ஸமீல்
“நான் பணிப்­பா­ள­ராக பதவி வகித்த காலத்­திலே 2017 ஜன­வ­ரியில் இந்­தக்­கட்­டி­டத்தின் 3 மாடிகள் திறந்து வைக்­கப்­பட்­டன. நான் 2013 முதல் 2017 பெப்­ர­வரி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பத­வியில் இருந்தேன். கட்­டி­டத்தின் ஏனைய 6 மாடி­க­ளையும் அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வி­யி­னாலேயே செய்து முடிப்போம் என்று அன்று முஸ்லிம் சமூகம் கூறி­யது’’ என திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் எம்.ஸமீல் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், ‘கட்­டி­டத்தை பாதுகாத்துக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் ஒன்­று­பட்டு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். நாம் அர­சியல் கட்சி ரீதியில் பிரிந்­தி­ருந்து இவ்­வி­வ­கா­ரத்தில் சுமு­க­மான தீர்­வொன்­றினை பெற்­றுக்­கொள்ள முடி­யாது’. என்றார்.

முன்னாள் அமைச்சர் ஹலீம்
முஸ்­லிம்­க­ளுக்­கென நிர்­மா­ணிக்­கப்­பட்ட 9 மாடிக்­கட்­டிடத்தை முஸ்லிம் சமூகம் காப்­பாற்­றிக்­கொள்ள வேண்டும். முஸ்லிம் அரச நிறு­வ­னங்கள் மற்றும் சமய, கலா­சார அலு­வல்கள், அஹ­தியா அர­புக்­கல்­லூ­ரி­களின் தலை­மை­ய­கங்கள் என்­ப­வற்றை ஒரே மையத்தில் உள்­வாங்­கிக்­கொள்­வ­தற்­கா­கவே இக்­கட்­டிடம் வடி­வ­மைக்­கப்­பட்­டது என முன்னாள், முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கா­ன­ அ­மைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், கட்­டி­டத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் கட்சி வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­று­ப­ட­வேண்டும். பூர்த்தி செய்­யப்­ப­டா­துள்ள ஏனைய 6 மாடி­களின் நிர்­மா­ணப்­ப­ணிகள் முஸ்­லிம் ­தனவந்தர்­களின் பங்­க­ளிப்­புடன் பூர்த்தி செய்­யப்­பட்டு காலம் தாழ்த்­தாது முஸ்லிம் அரச நிறு­வ­னங்கள் உள்­வாங்­கிக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி சுமு­க­மான தீர்வு பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற நம்­பிக்­கை­யுண்டு என்றார்.

விரைந்து செயற்­பட வேண்டும்
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அமைந்­துள்ள 9 மாடிக்­கட்­டிடம் முஸ்­லிம்­க­ளுக்­கென்றே காணி ஆணையாளரினால் பாரப்படுத்தப்பட்டதாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும், விடயத்துக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர்களும் செயற்படாது மெளனம் காத்தமையே இன்றைய ஆபத்தான நிலைமைக்குக் காரணமாகும்.

திணைக்­கள கட்­டி­டத்தை சுவீ­க­ரித்­துக்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள அதி­கா­ரிகள் பயன்­ப­டுத்­தப்­ப­டா­துள்ள 6 மாடி­களின் சாவிக் கொத்­து­களை கோரி நிற்கும் அள­வுக்கு இன்று நிலைமை மோச­மா­கி­யுள்­ளது.

முஸ்லிம் அமைச்­சர்கள், அர­சியல் தலை­வர்கள், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் திட்­ட­மிட்டு செயற்­ப­டா­மையே இந்­நி­லை­மைக்கு காரணம் எனலாம்.

அர­சாங்­கத்தின் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள கொள்­கை­க­ளின்­படி தற்­போது வாட­கைக்­கட்­டி­டங்­களில் இயங்­கி­வரும் அரச நிறு­வ­னங்கள் அரச கட்­டி­டங்­க­ளுக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. எனவே திணைக்­கள கட்­டிடம் இன்று சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது.
இன்று இட நெருக்­க­டி­களை எதிர்­நோக்கி, களஞ்­சிய வச­தி­க­ளின்றி அல்­ல­லுறும் முஸ்லிம் நிறு­வ­னங்கள் முன்­கூட்­டியே வெற்­றி­ட­மா­க­வுள்ள கட்­டி­டத்தின் 6 மாடி­க­ளுக்கும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும். கொழும்பு 12 இல் இயங்­கி­வரும் காதிகள் மேன்­மு­றை­யீட்­டு­ சபை ஏற்கனவே இங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோரிக்கை பல தடைகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்­தக்­கோ­ரிக்­கைகள் உய­ர­தி­கா­ரிகள், சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­களின் மத்­தியில் செவிடன்காதில் ஊதிய சங்­கா­கவே காணப்­பட்­டது. இது ஓர் உதா­ரணம் மாத்­தி­ரமே. எனவே தான் முஸ்லிம் அமைச்­சர்­களும்,அர­சியல் தலை­மை­களும் விரைந்து செயற்­ப­ட­வேண்டும் என்­கிறோம். கட்­டிடம் கைந­ழுவிச் செல்­லாது பாது­காப்­பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.