அஷ்ரப் எனும் முதிசம்

0 431

கல்­முனை சமீம்

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அர­சியல் முக­வரி பெற்றுத் தந்த அஷ்­ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மர­ண­ம­டைந்து நாளை­யுடன் (16.09.2022) இரு­பத்தி இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.

இள வய­தி­லி­ருந்தே கல்­வி­யிலும் ஆளு­மை­யிலும் சிறந்து விளங்­கிய அஷ்ரப், 1970 இல் சட்­டக்­கல்­லூ­ரியில் நுழைந்து இலங்­கையின் புகழ் பூத்த சட்­டத்­த­ர­ணி­களில் ஒரு­வ­ராகத் திகழ்ந்ததைத் தொடர்ந்து அர­சி­ய­லிலும் ஆர்வம் காட்டத் தொடங்­கினார்.

1976 இல் முஸ்­லிம்கள் ஒன்­பது பேர் புத்­தளம் பள்­ளி­வா­ச­லுக்குள் பரி­தா­ப­க­ர­மாக ஆயு­த­தா­ரி­க­ளினால் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­போது இது பற்றி எதுவும் பேச திராணியற்று முஸ்லிம் எம்­பிக்கள் இருந்­த­போது, இப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக அமரர் தந்தை செல்­வ­நா­யகம் மாத்­திரம் முஸ்­லிம்­க­ளுக்­காக பாரா­ளு­மன்­றத்தில் குரல் எழுப்­பி­யதைக் கண்­ட அஷ்ரப் முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­­துவ வெற்­றிடம் குறித்துச் சிந்­திக்கத் தொடங்­கினார்.

முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யானதோர் அர­சியல் இயக்கம் அவ­சியம் என்று உணர்ந்தார். பல்­வே­று­பட்ட கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் 1981 செப்­டம்பர் மாதத்தின் இரண்டாம் இரவில் காத்­தான்­கு­டியில் வைத்து அவ­ரது உள்­ளக்­கி­டக்­கையில் குமுறிக் கிடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற ஒரு இயக்­கத்தை பிர­ச­வித்தார். அதனை 1988 பெப்ர­வரி 11 இல் ஓர் அர­சியல் கட்­சி­யாக பதிந்­தெ­டுத்தார்.

1988 இல் நடை­பெற்ற மாகா­ண­ சபைத் தேர்­தலில் மொத்­த­மாக வடக்கு கிழக்கில் 17 ஆச­னங்­க­ளையும் தென்­னி­லங்­கையில் 12 ஆச­னங்­க­ளையும் சேர்த்து மொத்­த­மாக 29 மாகா­ண ­சபை உறுப்­பி­னர்­க­ளையும் இக்­கட்சி பெற்­றது. அதைத் தொடர்ந்து 1989 இல் ஒன்­ப­தா­வது பொதுத்­தேர்­தலில் தலைவர் அஷ்ரப் அவர்­களின் சிறந்த அர­சியல் வியூ­கத்­தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நான்கு ஆச­னங்­களை பெற்றுக் கொண்­டது. தொடர்ந்து வந்த 10 ஆம், 11 ஆம் பொதுத் ­தேர்­தல்­களில் அவ­ரது கூட்­டுச்­சேரல் வியூ­கத்­தினால் இக்­கட்சி முறையே 7, 11 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை கைப்­பற்­றி­யது. அவர் விட்­டுச்­சென்ற அந்த சிறந்த வியூ­கமே 12வது பொதுத்­தேர்­தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் 12 ஆச­னங்­களைப் பெற்று வர­லாறு படைக்க வழி­ச­மைத்­த­து.

1994 இல் பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தில் கப்­பல்­துறை துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி, புனர்­வாழ்வு, புன­ர­மைப்பு அமைச்­ச­ராக பதவி வகித்த அஷ்ரப் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களைத் தீட்டி செயற்­பட்டு அதில் பூரண வெற்றி கண்டார். இவ்­வா­றான மிகுந்த வேலைப்­ப­ளு­வுக்கு மத்­தி­யிலும் சட்­டத்­துறை முது­மாணிப் பரீட்­சைக்குத் தோற்றி சித்­தி­ய­டைந்­த­துடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யா­கவும் பரி­ண­மித்தார்.

தனக்கு கிடைத்த அமைச்சர் பதவி மூலம் இன, மத பேதங்­களைக் கடந்து பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கினார். துரித பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டார். ஏழை­க­ளுக்­காக எழுச்சிக் கிரா­மங்­களை உரு­வாக்­கினார். பயங்­க­ர­வா­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கினார். முஸ்லிம் சமூ­கத்­துக்­கென்று தென்­கி­ழக்கில் ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கினார்.

அர­சி­யலில் மட்­டு­மல்ல சட்­டத்­து­றையில் மாத்­தி­ர­மல்ல தமிழ் இலக்­கி­யப்­ப­ரப்­பிலும் அவர் தடம் பதித்தார். இவரின் படைப்­பாற்­றலைக் கண்டு புகழ் பூத்த தென் இந்­திய கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் 1997.06.19 இல் அஷ்ரப் அவர்­க­ளுக்கு ‘கவிஞர் திலகம்’ என பட்டம் சூட்டி பர­வ­சப்­ப­டுத்­தினார். தான் எழு­திய அனைத்து கவி­தை­க­ளையும் ஒன்று சேர்த்து “நான் எனும் நீ ” என்ற கவிதைத் தொகுப்பை வெளி­யிட்டு செம்­மொ­ழியாம் தமிழ் மொழி மீது தனக்க்­கி­ருந்த அள­வு­க­டந்த காதலை வெளிக்­காட்­டினார்.
தனது அர­சியல் வாழ்வின் அடுத்த பாய்ச்­ச­லாக, இலங்கை வாழ் அனைத்து இன மக்­க­ளையும் அர­வ­ணைத்துக் கொண்டு செய­லாற்ற சமா­தா­னத்தின் சின்­ன­மான புறாவை இலச்­சி­னை­யாக கொண்டு தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற ஒரு அர­சியல் கட்­சியை ஸ்தாபித்தார். அதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை வளர்க்க பாடு­பட்டார். அதற்­கான வியூ­கத்­தையும் அமைத்து செயற்­பட்டார். ஆனால் இறை­வனின் திட்டம் வேறு வித­மாக இருந்­த­து. 2000.09.16 இல் நடந்த ஹெலி விபத்தின் ஊடாக இறைவன் அவரை தன்­பக்கம் அழைத்துக் கொண்டான்.

எப்­போதும் தனக்­கா­கவும் தனது குடும்­பத்­திற்­கா­கவும் எதையும் சேமித்­து­வைக்­காத அஷ்ரப் தான் உரு­வாக்­கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சையும், தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யையும், அதன் போராளிகளையும் தன் உயிர் என நேசித்தார். தனது அரசியல் இயக்கங்களுக்காகவும் தான் சார்ந்த சமூகத்திற்காகவும் சதா இறைவனைப் பிரார்த்தித்த அஷ்ரப் தனது நீடித்த ஆயுளுக்காக இறைவனை பிராத்திக்கவில்லை போலும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அவரது இடைவெளி இன்னும் நிரப்பப்படாத வெற்றிடமாக நீண்டுகொண்டே செல்கின்றது. அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக் கொண்டு மேலான சுவனத்தை அருள்வானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.