பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது

நிதி உதவி வழங்குமாறு அழைக்கிறது உயர்ஸ்தானிகராலயம்

0 309

ஏ.ஆர்.ஏ.பரீல்

பாகிஸ்தான் என்­று­மில்­லா­த­வாறு வர­லாறு காணாத வெள்ள அனர்த்­தத்தில் சிக்­குண்­டுள்­ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்­சியை விடவும் பயங்­க­ர­மா­ன­தாகும். நாட்டின் மூன்­றி­லொரு பாகம் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது. எமக்கு நிவா­ரண பொரு­ளு­த­வி­க­ளை­விட நிதி உத­வியே தேவைப்­ப­டு­கி­றது என  பாகிஸ்­தானின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கி வேண்­டுகோள் விடுத்தார்.

வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பாகிஸ்தான் மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில் வெள்ள அனர்த்­தத்தின் பாதிப்­பு­களை தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இது தொடர்­பான கூட்­ட­மொன்று கொழும்­பி­லுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னிகர்  காரி­யா­ல­யத்தில் இடம் பெற்­றது. வர்த்­தக சமூக பிர­தி­நி­திகள் மற்றும் ஊட­கங்­களின் உரி­மை­யா­ளர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேலும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தேச சமூகம்  பாகிஸ்­தா­னுக்கு தொடர்ந்தும் உத­வி­களைச் செய்து வரு­கி­றது. எமக்கு பொருள் உத­வி­யி­னை­விட பண உத­வியே தேவைப்­ப­டு­கி­றது. ஏனென்றால் பொரு­ளு­த­வி­களை தற்­போ­தைய சூழலில் பகிர்ந்­த­ளிப்­பதில் சிக்கல் நில­வு­கி­றது. நாட்டில் மூன்­றி­லொரு பகுதி தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது. இலங்கை அர­சாங்கம் ஒரு தொகுதி தேயி­லையை எமக்கு நிவா­ரண உத­வி­யாக வழங்­கி­யுள்­ளது என்றார்.
நிகழ்­வுக்கு வர்த்­தக பிர­மு­கர்கள், ஊடக நிறு­வ­னங்­களின் தலை­வர்கள். சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், நிறு­வ­னங்­களின் தலை­வர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள், கொழும்பு மற்றும் கண்டி பள்­ளி­வாசல் சம்­மே­ள­னங்­களின் பிர­தி­நி­திகள் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இங்கு வழங்கப்பட்டுள்ள வங்கி கணக்­குகள் ஊடாக நிதி உத­வி­களை வழங்க முடியும்.

வெள்ள அனர்த்தம் தொடர்­பான புள்­ளி­வி­ப­ரங்­களும் இச் சந்­திப்பில் வெளி­யி­டப்­பட்­டன. பாகிஸ்­தானில் பரு­வ­மழை மற்றும் கால­நிலை மாற்­றத்­தினால் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரி­வு­க­ளினால் இது­வரை 1325 பேர் பரி­தா­ப­க­ர­மாகப் பலி­யா­கி­யுள்­ளனர். இவர்­களில் 350க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் உள்­ள­டங்­கு­வ­தாக பாகிஸ்தான் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

வெள்ளம் சூழ்ந்­துள்ள பல பகு­தி­களை மீட்­புக்­கு­ழு­வினரால் அணுக முடி­யாத நிலைமை உள்­ளதால் உயி­ரி­ழப்­பு­களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த இயற்கை அனர்த்­தத்­தினால் 12703 பேர் கடு­மை­யான காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். பாகிஸ்­தானின் 225 மில்­லியன் சனத்­தொ­கையில் சுமார் 33 மில்­லியன் மக்கள் வெள்­ளத்தால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இது சனத்­தொ­கையில் 15 வீத­மாகும். தொடர்ந்தும் கணக்­கீ­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பாகிஸ்­தானின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறு­வ­னத்தின் (NDMA) தர­வு­க­ளின்­படி 1,688,005 வீடுகள் வெள்­ளத்­தினால் அழிக்­கப்­பட்டு சிதைந்து போயுள்­ளன. மில்­லியன் கணக்­கான மக்கள் திறந்த வெளியில் கூடா­ரங்­களில் உறங்கும் அவல நிலை­மையைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 4 இலட்­சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் இடங்­க­ளி­லி­ருந்து வீடு­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

5 735 கிலோ மீற்றர் வீதிகள் சிதை­வ­டைந்­துள்­ள­துடன் சுமார் 246 பாலங்கள் சிதைந்து உருக்­கு­லைந்து போயுள்­ளன. இதனால் போக்­கு­வ­ரத்து கட்­ட­மைப்­புக்கு பாரிய சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை 3.6 மில்­லியன் ஏக்கர் விவ­சாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ளன. சுமார் 750481 கால்­ந­டைகள் வெள்ள அனர்த்­தத்­தினால் இறந்­துள்­ளன.
பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் தைபோயிட், வயிற்­றோட்டம், டெங்கு காய்ச்சல், தோல் சம்­பந்­த­மான  நோய்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். பெரும் எண்­ணிக்­கை­யானோர் சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது­வரை பாகிஸ்­தானில் 160க்கும் மேற்­பட்ட மாவட்­டங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டின் ஏறத்­தாழ 3 பகுதி தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ள­தாக சர்­வ­தேச செய்­திகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. பலு­சிஸ்தான் சிந்து, கைபர் மற்றும் பக்­துன்க்வா மாகா­ணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரி­வு­க­ளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.