ராஜபக்ஷாக்கள் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தினர்

0 420

நிதின் ஸ்ரீவஸ்தவா,
பிபிசி செய்தியாளர்

இலங்­கையின் இரண்­டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்­கினர், பௌத்த மதத்தைப் பின்­பற்றும் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள்.
ஏறக்­கு­றைய எல்லா முந்­தைய அர­சு­களும் பெரும்­பான்மை வகுப்­பி­னரின் நலன்­க­ளையே கவ­னித்­தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களின் மத்­தியில் வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

தமிழர் உரி­மை­க­ளுக்­கான உள்­நாட்டுப் போர் பல தசாப்­தங்­க­ளுக்கு நீடித்­தது. 2009 இல், அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ரது பாது­காப்புச் செயலர் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவும் அதை முடி­வுக்கு கொண்­டு­வந்த பெரு­மையை பெற்­றனர்.
உட­ன­டி­யாக நடந்த தேர்­தல்­களில், சிங்­கள தேசி­ய­வா­தத்தின் மீது சவாரி செய்து ராஜ­பக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்­சிக்கு வந்­தது. “இந்த தேர்­தலில் சிங்­கள வாக்­கு­களால் வெற்றி பெற்­று­வி­டுவேன் என்று எனக்­குத்­தெ­ரியும்” என்று தனது வெற்­றிக்குப் பிறகு கோட்­டா­பய கூறினார்.

“நாட்டில் பரஸ்­பர பிரி­வினை சூழல் நில­வி­யது உண்­மைதான். 30 ஆண்­டு­க­ளாக நடந்த உள்­நாட்­டுப்­போரும் இதற்கு கார­ண­மாக அமைந்­தது. அர­சி­ய­லுக்­காக மனிதன் அல்­லது மதம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது”என்று கொழும்பில் உள்ள பிர­சித்தி பெற்ற ஸ்ரீபோதி விகா­ரையின் தலைமை மத­குரு யத­காம ராகுல் கூறினார்.

“நாங்கள் மதத்தை விட மனித நேயத்­திற்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கிறோம். எந்த ஊருக்கு சென்­றாலும் பௌத்த குடும்­பத்­திற்கு சொந்­த­மான வீடு ஒன்று இருந்தால், அதற்கு அருகில் முஸ்லிம் குடும்பம், எதிரே தமிழ் குடும்பம் இருக்கும். நாடு மேலும் முன்­னேற வேண்­டு­மானால், அனை­வரும் ஒன்­றாக வாழ வேண்டும்”என்று அவர் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த பல தசாப்­தங்­க­ளாக இலங்­கையில் மத­வாத பதற்­றங்கள் அதி­க­ரித்து வந்­தன. 2019 ஈஸ்டர் தினத்­தன்று கொழும்பில் நடந்த குண்­டு­வெ­டிப்­பு­களில் 250 க்கும் மேற்­பட்டோர் இறந்­தனர்.

இந்த தாக்­கு­த­லுக்­குப்­பின்னால் ஐஎஸ் அமைப்பின் சில உள்­ளூர் பிரி­வுகள் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அதன் பின்னர் நிலைமை மேலும் மோச­ம­டைந்­தது என இங்கு வாழும் பல முஸ்­லிம்கள் கூறு­கின்­றனர்.

“நாங்கள் முஸ்­லிம்­க­ளாக இருப்­பதால் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கிறோம். ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்­பு­க­ளுக்குப் பிறகு அது மேலும் அதி­க­ரித்­தது. முஸ்லிம் சமூ­கத்­திற்கும் அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்­தலில் வெற்றி பெற நாங்கள் குறி­வைக்­கப்­பட்டோம்”என்று கொழும்பில் உள்ள அக்பர் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் இமாம் ரிப்கான் கூறு­கிறார்.

“கோவிட் வந்த பிறகு இறந்­த­வர்­களை புதைக்க ராஜ­பக்ஷ சகோ­த­ரர்கள் அனு­ம­திக்­க­வில்லை. உடல்கள் எரி­யூட்­டப்­பட்­டன. அவர்கள் ஆட்­சியில் இருந்து அகற்­றப்­பட்­டுள்ள நிலையில், எதிர்­காலம் நன்­றாக இருக்கும் என்று நம்­பு­கிறேன்”என்று அவர் மேலும் கூறினார்.

அர­சுக்கு எதி­ரான போராட்­டங்­களின் மைய­மாக இருந்த காலி முக­த்­தி­டலில் நான் அஷ்ஃபக் என்ற கல்­லூரி மாண­வரைச் சந்­தித்தேன்.

“முந்­தைய அர­சுகள் மாணவர்களை சேர்ப்பதில்­கூட முஸ்­லிம்­களின் சத­வி­கி­தத்தை குறை­வாக வைத்­தி­ருந்­தன. இப்­போது நிலைமை மேம்­ப­டக்­கூடும்” என்­கிறார் அவர்.
கணி­ச­மான சிங்­கள மக்கள் தங்­களை எதிர்ப்­பார்கள் என்று சிங்­கள தேசி­ய­வா­தத்தை முன்­னி­றுத்­திய ராஜ­பக்ஷ குடும்பம் எதிர்­பார்க்­க­வில்லை.

தாங்கள் பெரும்­பான்­மை­யாக இருப்­பதால் சிறு­பான்மை சமூ­கத்தை ‘வெளி­யாட்கள்” என்று கண்­மூ­டித்­த­ன­மாக கரு­திய பலரும் அதில் இருந்­தனர்.
குமார பெரேரா செல்போன் கடை நடத்­தி­வ­ரு­கிறார். “நாட்டின் நிலை இப்­ப­டி­யா­கி­விட்­டதே” என்று அவர் வேத­னைப்­ப­டு­கிறார்.

“இலங்­கையில் தமிழர் உரி­மைக்­காக உள்­நாட்டுப் போர் நடந்­தது. அது புரி­கி­றது. அதன்­பி­றகு நாட்டில் அமைதி திரும்­பி­யது. அதுவும் புரி­கி­றது. ஆனால் திடீ­ரென்று ஒரு விசித்­தி­ர­மான தேசி­ய­வாதம் பரவத் தொடங்­கி­யது. ஆரம்­பத்தில் பலர் இதை சரி­யா­னது என்று கூட கரு­தி­யி­ருக்­கலாம். ஆனால் உணவு தட்­டுப்­பாடு நிலவும் இந்த நேரத்தில் மக்கள் அதைப் பற்றி சிந்­திப்­ப­து­கூட இல்லை”என்­கிறார் அவர்.

ராஜ­பக்ஷ குடும்­பத்­திற்கு எதி­ரான அமை­தி­யான போராட்­டத்தில் இரா­ணு­வத்தின் நிலைப்­பாடும் சற்று வித்­தி­யா­ச­மா­கவே இருந்­தது.

இரா­ணு­வத்தில் உள்ள பெரும்­பா­லான வீரர்கள் மற்றும் தள­ப­திகள் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். இருந்­த­போ­திலும் இது­வரை போராட்­டக்­கா­ரர்கள் மீதான நட­வ­டிக்கை மிகவும் சாதா­ர­ண­மா­கவும், மென்­மை­யா­கவும் இருக்­கி­றது.

“நாட்டில் உள்­நாட்டுப் போர் முடி­வ­டைந்து 13 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இது நடப்­பது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது” என்று கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான மையத்தின் அரசியல் ஆய்வாளர் பவானி பொன்சேகா கூறுகிறார்.

“மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சமூகங்கள் மத்தியில் மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக, பரஸ்பர கருத்து, உரையாடல் மற்றும் விவாதம் ஆகியவற்றின் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் கருத்துக்களை பறிமாறிக்கொண்டு, பிரச்சினைகளை தீர்க்கமுடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.